மீண்டும் நடிகர் ஜெய்க்கு ஜோடியான அதுல்யா ரவி!!

எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கும் ‘கேப்மாரி’ படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நடித்திருக்கும் அதுல்யா ரவி, மற்றொரு படத்திலும் ஜெய்க்கு ஜோடியாகியிருக்கிறார்.

வெற்றிசெல்வன் எஸ்.கே என்ற அறிமுக இயக்குநர் இயக்கும் இப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. தற்போது ஜெய், அதுல்யா ரவின் ஹீரோ, ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கும் இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகை, நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகின்றது.

இதில் முக்கிய கதாபாத்திம் ஒன்றுக்காக ‘சீதக்காதி’ படத்தின் மூலம் அறிமுகமானவரும், நடிகர் வைபவின் அண்ணனுமான சுனில் ஒப்பந்தமாகியிருக்கிறார்.

மற்றொரு நாயகியாக ‘நெடுநல்வாடை’ புகழ் அஞ்சலி நாயர் நடிக்கிறார். இப்படம் குறித்து இயக்குநர் வெற்றிசெல்வன் கூறுகையில், “இது ஆக்‌ஷன், கிரைம் மற்றும் காதல் ஆகியவை கலந்த ஒரு படம்.

ஜெய்யின் கதாபாத்திரம், நம் சுற்றுப்புறத்தில் காணும் ஒருவரை போன்ற ஒரு யதார்த்தமான ஒரு மனிதரை போன்றது. இருப்பினும், சில கட்டாயமான சூழ்நிலைகள் நீதியை தனது கைகளில் எடுக்கும்படி அவரை கட்டாயப்படுத்துகின்றன.

இது மகிழ்ச்சி, எனர்ஜி மற்றும் கோபமான இளைஞனையும் இணைக்கும் ஒரு கதாபாத்திரம். அதுல்யா ரவி ஜெய்யின் ஜோடியாக நடிக்கிறார். ஸ்கிரிப்டை எழுதிய உடனேயே, நாங்கள் உண்மையில் பக்கத்து வீட்டு பெண் போன்ற ஒரு நடிகையை தேடிக் கொண்டிருந்தோம். மேலும் அதுல்யா சரியானவராக இருப்பதாக உணர்ந்தோம்.” என்று தெரிவித்துள்ளார்.

ஜோதிகாவுக்காக இணையும் பிரபல நடிகர்கள்!!

கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வரும் ஜோதிகா எங்கிருந்து தான் இப்படி கதைகளை பிடிக்கிறாரோ என்று ஆச்சர்யப்படும் அளவுக்கு அடுத்தடுத்து அவர் நடிக்கும் படங்களின் மூலம் அசத்துகிறார்.

அந்த வகையில், ‘ராட்சசி’ அயை அடுத்து ஜோதிகா நடிக்கும் புதிய படம் நேற்று ஆரம்பமானது.

பொன்மகள் வந்தாள் என்ற பெயரில் உருவாகும் இப்படத்தில் இயக்குநர்களும் நடிகர்களுமான கே.பாக்யராஜ், பாண்டியராஜன், பார்த்திபன் மற்றும் பிரதாப் போத்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இயக்குநர் கே.பாக்யராஜிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய பாண்டியராஜனும், பார்த்திபனும் குருவின் படத்தில் முதல் முறையாக ஜோதிகாவுக்காக இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகைகளுக்கு நடுவில் வெடித்த சண்டை : வெளியேறும் முக்கிய நடிகை!!

பாண்டியன் ஸ்டோர்ஸ்

விஜய் டிவியில் மிகவும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர். இதில் கூட்டுக்குடும்பத்தில் இருப்பவர்கள் நடத்தி வரும் ஒரு கடை, அவர்களுக்கும் நடக்கும் சம்பவங்கள் தான் சீரியலில் காட்டப்படுகிறது.

மூத்த மறுமகளாக சுஜிதா நடிக்க, இளைய மருமகளாக சித்ரா நடித்துவருகிறார். ஆரம்பத்தில் நெருக்கமாகவே இருந்த அவர்கள் நடுவில் சண்டை வெடித்துள்ளதாம்.

காரணம் விஜய் டிவி நடத்திய விருது விழாவில் சிறந்த நடிகை லிஸ்டில் சித்ரா பெயர் இருந்தது. ஆனால் சுஜிதாவுக்கு சப்போர்டிங் விருது மட்டுமே கொடுக்கப்பட்டது.

தான் தான் ஹீரோயின் என நினைத்திருந்த சுஜிதாவுக்கு இது அதிர்ச்சி ஏற்படுத்தி, பணிப்போருக்கு காரணமாகிவிட்டது. விரைவில் அவர் இந்த சீரியலை விட்டு வெளியேறினாலும் ஆச்சர்யமில்லை என்று நெருங்கிய வட்டாரம் தெரிவித்துள்ளது.

நீ ஒரு கோழை : பிக்பாஸ் வீட்டில் அடுத்து வெடிக்கப் போகும் பெரிய சண்டை!!

பிக்பாஸ்

பிக்பாஸ் வீட்டில் வனிதா விஜயகுமார் வெளியேறிய பின்பு வீடு ஒரு அமைதியாக இருக்கும், இனி சண்டை போட யார் இருப்பார்கள் என்று ரசிகர்கள் கூறி வந்தனர். அதுமட்டுமின்றி இது எல்லாம் தெரிந்து எப்படி பிக்பாஸ் வனிதாவை வெளியேற்றினார் என்றும் தெரிவிக்கின்றனர்.

ஆனால் வனிதா வெளியேறிய அன்றைய நாளே மீரா நான் பச்சையா கேட்பேன், வனிதாவை எல்லாம் தாண்டி என்று கூறினார். இதனால் அடுத்த வனிதா, மீரா தான் என்று கூறப்பட்டது. இந்நிலையில் நேற்று மோகன் வைத்யா மற்றும் சரவணன் இருவரும் இன்று சண்டை போட்டுகொண்டனர்.

ஏனெனில் காலையில் அனைவரும் காபிக்காக காத்திருக்கும் வேலையில் மோகன் வைத்யா மற்றும் ஒரு கப் எடுத்து தனக்கு மட்டும் காபி போட்டுக்கொண்டார். அதை பார்த்து கோபமான சரவணன் அதை ஒரு விதமான செய்கையால் செய்து காட்டினார்.

அதை எப்போதும் போல் சரவணன் விளையாட்டாகவே செய்து காட்ட, உடனே மோகன் வைத்தியா தவறாக புரிந்து கொண்டு, சக போட்டியாளர்களிடம் கதறி அழுதார்.

இதையடுத்து இந்த பிரச்சனைக்கு சரவணன் மன்னிப்பு கேட்க, ஒரு வழியாக இது முடிந்தது. அதன் பிறகு பிக்பாஸ் ஒரு டாஸ்க் கொடுத்தார். அதாவது நீங்கள் யார் கோழை என்று கூறுவீர்கள் என்று கேட்டார்.

அதற்கு மோகன் வைத்யா ஒரு கோழை என கூறி சரவணன் அவரை வெறுப்பேற்றியுள்ளார். வரும் நாட்களில் இந்த சண்டை இன்னும் பெரிதாகும் என எதிர்பார்க்கலாம்.

விமலுக்கு ஜோடியான நடிகை ஸ்ரேயா!!

சினிமாவில் வாய்ப்புகள் குறைந்ததால் திருமணம் செய்துக் கொண்ட நடிகை ஸ்ரேயாவுக்கு திருமணத்திற்குப் பிறகு அதிஷ்ரம் அடித்திருக்கிறது.ஆம் திருமணத்திற்குப் பிறகு சில தெலுங்குப் பட வாய்ப்புகளைப் பெற்ற ஸ்ரேயா, தற்போது தமிழ்ப் படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.

’சண்டகாரி – த பாஸ்’ என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தில் ஹீரோவாக விமல் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக முதல் முறையாக ஸ்ரேயா நடிக்கிறார். ஆர்.மாதேஷ் இப்படத்தை இயக்குகிறார்.

பாஸ் புரொடக்‌ஷன்ஸ் கார்ப்பரேசன் மற்றும் மெட்ரோ நெட் மல்டிமீடியா நிறுவனங்கள் இணைந்து வழங்க, ஜெ.ஜெயகுமார் மிக பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கும் இப்படத்திற்கு குருதேவ் ஒளிப்பதிவு செய்ய, அம்ரீஷ் இசையமைக்கிறார்.

கபிலன், விவேக் பாடல்கள் எழுதுகிறார்கள். தினேஷ் எடிட்டிங் செய்ய, அபீப் நடனம் அமைக்கிறார். கனல் கண்ணன் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகருக்கு ஜோடியான லொஸ்லியா?

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் மக்கள் அனைவரையும் கவர்ந்தவர் இலங்கையைச் சேர்ந்த செய்தி வாசிப்பாளர் லொஸ்லியா. இவருக்கு என்று பெரியளவில் ரசிகர்கள் பட்டாளம் உருவாகி விட்டது.

இந்நிலையில் லொஸ்லியாவை பலரும் இவர் கண்டிப்பாக தமிழ் சினிமாவில் பெரிய கதாநாயகி ஆகி ஒரு ரவுண்டு வருவார், அதற்கான அனைத்து அம்சங்களும் உள்ளது என புகழ்ந்து வருகின்றனர்.

தற்போது அவர்கள் சொன்னது எல்லாம் நடக்கப்போகின்றது போல் உள்ளது. எப்படி என்று கேட்க்கின்றீர்களா? ஆம் லொஸ்லியாவை அருள்நிதி நடிக்கும் ஒரு படத்தில் கமிட் செய்யவிருப்பதாக கிசுகிசுக்கப்படுகின்றது.

இவை எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனாலும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வனிதாவிற்கு பதிலாக வெயிட்டான நடிகையை இறக்கும் தொலைக்காட்சி!!

பரபரப்பாக சென்றுகொண்டிருக்கும் பிக்பாஸ் வீட்டில் யார் சொல்வதையும் கேட்காமல் தான் செய்வது மட்டுமே சரி என்று அரா ஜகம் செய்து வந்தவர் நடிகை வனிதா. இச் செயல் பார்க்கும் மக்களை முகம்சுளிக்க வைத்தது.

இருந்தபோதும் பிக் பாஸ் வீ ட்டில் இவர் நிகழ்ச்சியின் இறுதிவரை இருப்பார் என மக்களால் எதிர்ப்பார்க்கப்பட்டது, ஆனால் 2வது நபராக வெளியேற்றப்பட்டார்.

வனிதாவை வெளியேற்றிய பிக்பாஸ் இப்போது நடிகை விசித்ராவை வீட்டிற்குள் வர வைக்க பிளான் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவர் வனிதா விஜயகுமாரை விட பர பரப்பை ஏற்படுத்துவார் என்பது நிற்சயம்.

இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறுவது இவரா? பிக்பாஸ் எலிமினேஷன் லிஸ்ட் இதோ!!

பரபரப்பாக சென்றுகொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சென்ற வாரம் வனிதா விஜயகுமார் வெளியேற்றப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து அடுத்த வாரம் யார் வெளியேற்றப்படப்போவது என்பதற்கான நாமினேஷன் நேற்று நடைபெற்றது.

அதில் பெரும்பாலான போட்டியாளர்கள் மீரா மிதுன், சரவணன் மற்றும் சேரன் ஆகியோரை தான் குறிப்பிட்டு கூறினர். அதிகபட்சமாக மீரா மிதுன் பற்றி 11 பேர் புகார் கூறியுள்ளனர்.

இறுதியில் மோகன் வைத்தியா, மீரா மிதுன், சேரன், சரவணன் மற்றும் அபிராமி ஆகியோர் எலிமினேஷன் லிஸ்டில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவது யார் என்பது வரும் ஞாயிற்றுக்கிழமை தெரியவரும். மக்கள் அனைவரும் ஆவலுடன் அடுத்த ஞாயிற்றுக்கிழமையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

வனிதா பிக்பாஸில் இருந்து வெளியேற இதுதான் காரணமா?

பிக்பாஸில் வனிதா விஜயகுமார் கடந்த சில வாரங்களாக மக்களால் மறக்க முடியாத நபராக மாறிவிட்டார். அந்தளவிற்கு பிக் பாஸ் வீட்டுக்குள் அவரது செயல்பாடுகள் அமைந்திருந்தன.

வீட்டில் ஒருத்தர் விடாமல் சண்டை போட்டார். மற்றவர்களை பேசவிடாமல் தான் செய்வது தான் சரி என கத்தி பலருக்கு வெறுப்பை சம்பாதித்தார். வனிதா இவ்வளவு சீக்கிரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதற்கு ஏதாவது காரணம் இருக்கும் என்பது மட்டும் மக்களின் எண்ணமாக உள்ளது.

அவர் மீது காவல்துறையின் வழக்குகள் அதிகமாக இருப்பதால் அதன் விசாரணை எல்லாம் நிறைய இருப்பதால் பிக் பாஸ் குழுவினரால் அவரை வீட்டில் வைக்க முடியவில்லை. அதனால் காவல்துறையின் அழுத்தம் காரணமாக அவர் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார் என்கின்றனர் சிலர்.

பச்சை பச்சையா கேப்பேன் : பிக்பாஸில் அடுத்த வனிதா இவர்தானோ?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வனிதா நேற்று வெளியேற்றப்பட்டார். அவர் வெளியேற்றப்படுவார் என்று யாருமே எதிர்பார்க்காத நிலையில் இது நடந்ததால், மற்ற பிக்பாஸ் போட்டியாளர்களே அதிர்ச்சியாகினர்.

அவர் போனபிறகு கவின் உள்ளிட்ட சில போட்டியாளர்கள் ‘சண்டை போடவே யாரும் இல்லை?’ என கூறிக்கொண்டிருந்தார். ‘அதான் நான் இருக்கேனே. பச்சை பச்சையாக கேப்பேன்’ என மீரா மீதுன் தெரிவித்துள்ளார்.

‘என்னை பத்தி உங்களுக்கு தெரியல. ஒரு அளவுக்கு தான். அப்புறம் நான் பச்சை பச்சயா கேப்பேன், அவங்க நாக்கை புடுங்கிட்டு சாகிற மாதிரி’ என கூறியுள்ளார். அடுத்த வனிதா இவர்தானோ?