எல்லா டிரஸ்ஸையும் கழட்டிட்டா புகைப்பிடிப்பது? அமலா பாலின் அதிரடி : சர்ச்சையில் சிக்கிய ஆடை!!

நடிகை அமலா பால் இயக்குனர் விஜய்யுடன் விவாகரத்திற்கு பிறகு படங்களில் அதிகமாக நடித்திவருகிறார். இன்னும் சொல்லப்போனால் அடிக்கடி சமூகவலைதளத்தில் கவர்ச்சி படங்களை வெளியிடுவது என இருந்து வருகிறார்.

அவரின் நடிப்பில் வெளியாக ஆடை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களால் பெரும் சர்ச்சையானது. விரைவில் வரவுள்ள இப்படத்தில் அவர் ஆடையில்லாலும் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் இன்று காலை வெளியானது. இதில் அவர் புகைப்பிடிப்பது, மது அருந்துவது என நடித்துள்ளதோடு எல்லா டிரஸ்ஸையும் கழட்டிட்ட அது தான் நம்ம பிறந்தநாள் டிரஸ் என பேசியுள்ளது சர்ச்சையில் சிக்கியுள்ளது. சமூகவலைதளத்தில் வழக்கம் போல கடும் விமர்சனங்களும் எழுந்துள்ளது.

பிக்பாஸ் சீசன் 3 ல் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட முதல் நபர் இவர் தானாம் : கசிந்த தகவல்!!

பிக்பாஸ் சீசன் 3 நேற்றும், இன்றும் கமல்ஹாசன் இந்த வாரத்தில் நடந்த அனைத்தும் போட்டுக்காட்டி கேள்வி கேட்டு உண்மையை மக்களுக்கு விளக்க வைக்கு நேரம் என சொல்லலாம்.

அதிலும் குறிப்பாக இந்த வாரம் யாராவது ஒரு போட்டியாளர் வெளியேற்றபடவுள்ளதால் கமலின் வருகையும் அவரின் முதல் வார எவிக்‌ஷன் அறிவிப்பையும் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த வாரம் கவின், பாத்திமா பாபு, மதுமிதா, சாக்‌ஷி, மிரா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டனர். இதில் தற்போது இந்த வாரம் வெளியேற்றப்படுவது பாத்திமா பாபு தான் என நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல் கசிந்துள்ளன. பொறுத்திருந்த பார்ப்போம்.

பிக்பாஸ் வீட்டிற்குள் சாண்டி செல்ல முக்கிய காரணம் இதுதான்!!

பிக்பாஸ் வீட்டில் சாண்டி நேற்று தனது மகளை திரையில் கண்டு கண்கலங்கியது தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சாண்டி கண்ணீர் விட்டதை கண்டு மற்ற போட்டியாளர்களும் கண்ணீர் சிந்தினர். இந்நிலையில் சாண்டி குறித்து அவரது மனைவி சில்வியா பேட்டி ஒன்றை சமீபத்தில் அளித்துள்ளார்.

அதில் அவர் பேசுகையில், முதலில் அவர் பிக்பாஸில் கலந்து கொள்ள போகிறேன் என்றவுடன் நாங்கள் அனைவரும் வேண்டாம் என்று கூறினோம். ஆனால் சாண்டி தன்னிடம் ஒருத்தர் இதை வந்து கேட்டிருக்கிறார் என்னால் எப்படி மறுக்க முடியும் என்று கூறினார்.

அதன் காரணமாகவே அவர் வீட்டின் உள்ளே சென்றார். அதுமட்டுமின்றி எனக்கும் அவருக்கு இதன் மூலம் நிறைய பட வாய்ப்புகள் கிடைக்கும் என தோன்றியது. அதனாலே நானும் விட்டுவிட்டேன் என கூறி கண்கலங்கினார்.

நீச்சல் குளத்தில் 2 ஆண் போட்டியாளர்களுடன் ஆட்டம் போட்ட லோஸ்லியா!!

பாக் பாஸ் வீட்டில் லோஸ்லியா சக போட்டியாளர்களுடன் நீச்சல் குளத்தில் ஜாலியாக பாட்டு பாடி ஆட்டம் போட்டுள்ளார் பிக்பாஸ் வீட்டில் ஒருவருக்கொருவர் நட்பாக பழகி வருகிறார்கள்.

இந்நிலையில் சற்று முன்னர் தொடங்கிய நிகழ்ச்சியில் இரண்டு ஆண் போட்டியாளர்களுடன் லோஸ் நீச்சல் குளத்தில் இருந்தபடியே பாட்டு பாடி நடனமாடுகிறார்.

இதில் காமெடி என்னவெனில் நீச்சல் குளத்தில் தண்ணியே இல்லை என்பது தான்

வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கிறாங்க : ஜி.வி.பிரகாஷ் நாயகியின் பரபரப்பு புகார்!!

சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக பலர் குற்றம் சாட்டி வரும் நிலையில், நடிகைகள் பலர் சினிமாவில் வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருப்பதை ஒப்புக்கொள்வதோடு, பல நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமை குறித்து வெளிப்படையாக பேட்டியில் கூறி வருகிறார்கள்.

அந்த வகையில், மலையாள சினிமாவின் பிரபல நடிகையாக இருக்கும் காயத்ரி சுரேஷ், ‘4ஜி’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இதில் ஜி.வி.பிரகாஷ்குமார் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படம் தற்போது படப்பிடிபில் இருக்கிறது.

இந்த நிலையில், நடிகை காயத்ரி சுரேஷ் அளித்த சமீபத்திய பேட்டியில், படம் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி, படுக்கைக்கு அழைப்பதாக புகார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கூறிய காயத்ரி சுரேஷ், ”என்னை சிலர் தொடர்பு கொண்டு படங்களில் நடிக்க வாய்ப்பு அளிப்பதாகவும், அதற்கு பதிலாக தயாரிப்பாளர்கள் ஆசைக்கு இணங்க வேண்டும் என்றும் கூறினர். பட வாய்ப்புக்காக படுக்கைக்கு தயாரா? என்று கேட்டு செல்போனில் குறுந்தகவலும் அனுப்பினர்.

அவர்கள் அனுப்பிய குறுந்தகவலுக்கு நான் பதில் அளிக்கவில்லை. பதில் சொன்னால் உரையாடல் தொடரும். பதில் அனுப்பாமல் இருந்தால் எனது எண்ணம் புரிந்து ஒதுங்கிவிடுவார்கள்” என்று தெரிவித்தார்.

மலையாள சினிமா நடிகர்கள் மீது தொடர்ந்து பாலியல் புகார்கள் எழுந்து வரும் நிலையில், மலையாள நடிகையான காயத்ரி சுரேஷ் கூறியிருக்கும் குற்றச்சாட்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜோதிகாவால் சூர்யாவுக்கு வந்த புது சிக்கல்!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா, வித்தியாசமான முயற்சிகளில் ஈடுபடுவதோடு, வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். நடிப்பு மட்டும் இன்றி, தனது அகரம் பவுண்டேஷன் மூலம் ஏழை மாணவர்களின் கல்விக்கு பெரும் உதவி செய்து வருகிறார்.

தற்போது நடிப்பதுடன், தனது 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் திரைப்படங்களையும் சூர்யா தயாரித்து வருகிறார்.

சூர்யாவை திருமணம் செய்துக் கொண்டு நடிப்புக்கு முழுக்கு போட்ட ஜோதிகா, தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். அவரது நடிப்பில் நேற்று வெளியான ‘ராட்சசி’ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

இதற்கிடையே, ஜோதிகாவின் பேச்சால் சூர்யா புது சிக்கலில் சிக்கியிருக்கிறார். அதாவது, ராட்சசி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது.

இதில் பேசிய ஜோதிகா, “ஒன்று இரண்டு ஹீரோயின்களுடன் டூயட் பாடுவது, அவர்களை காதலிப்பது போன்ற ரெகுலர் விஷயங்களை தான் முன்னணி ஹீரோக்கள் செய்து வருகிறார்கள்” என்று கூறியதோடு, ”சினிமாவில் ஹீரோக்களின் ஆதிக்கம் தான் இருக்கிறது, இது மாற வேண்டும். அதேபோல் சினிமாவில் பெண்களை இழிவாக பேசுவது, தறக்குறைவாக பேசுவதையும் கைவிட வேண்டும்.” என்று பேசினார்.

இந்த நிலையில், சூர்யாவின் ‘காப்பான்’ படத்தின் ஒரு பாடலின் வரிகள் வீடியோ வெளியாகியுள்ளது. “சிரிக்கி மக” என்று தொடங்கும் இந்த பாடலில் பெண்களை இழிவாக சித்தரிக்கும் வார்த்தைகள் அதிகமாக இடம் பெற்றுள்ளது.

”ஒருவனை காதலித்துவிட்டு, இன்னொருவருடனுன் குழந்தை பெற்றுக்கொண்டாள்” என்ற ரீதியில் பெண்களை கேவலப்படுத்தும் விதமாக இந்த பாடல் வரிகள் அமைந்திருக்கிறது.

இதனை சுட்டிக்காட்டியிருக்கும் நெட்டிசன்கள், ”ஊருக்கு உபதேசம் செய்யும் ஜோதிகா முதலில் அவரது கணவருக்கு உபதேசம் செய்திருக்கலாம்” என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

பிக்பாஸில் மீண்டும் காதலை சொன்ன கவின் : லாஸ்லியா கொடுத்த ரியாக்ஷன்!!

சரவணன் மீனாட்சி புகழ் நடிகர் கவின் தற்போது பிக்பாஸ் 3 ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றுள்ளார். வீட்டில் அவர் சிலரை காதலித்து வருவதாக கூறி வருகிறார்.

அபிராமியை காதலிப்பதாக கூறிவந்த அவர் தற்போது கடந்த சில நாட்களாக லாஸ்லியாவை இம்ப்ரெஸ் செய்ய சில விஷயங்களை செய்துவருகிறார்.

அவரை பற்றி இரண்டு நாட்களுக்கு முன்பு பாட்டு பாடிய கவின், இன்று அவர் நேரடியாகவே லாஸ்லியாவிடம் பேசினார். அப்போது சாக்ஷி அகர்வாலும் உடன் இருந்தார்.

அதற்கு பதில் அளித்த லாஸ்லயா, “ஆக்சுவலி நீ கதைக்கும் விதம் எனக்கு பிடிச்சிருக்கு. உன்னை கடுப்பேத்ததான் அண்ணா என கூப்பிட்டேன்” என தெரிவித்துள்ளார். அதை கேட்ட கவின் சந்தோசம் தான்.

திருமணம் பற்றி ஓவியா பேச்சால் அனைவரும் அதிர்ச்சி!!

நடிகை ஓவியா பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்றார். அதில் அவர் நடிகர் ஆரவ்வை காதலிப்பதாக கூறினார். ஆனால் அவர் ஏத்துக்கொள்ளாததால் அந்த நிகழ்ச்சியை விட்டே வெளியேறினார்.

அதன் பிறகும் அவர்கள் காதலில் இருப்பதாக செய்திகள் அடிக்கடி வருகின்றன. இந்நிலையில் நேற்று களவாணி 2 படத்தின் பிரஸ் மீட்டில் பேசிய ஓவியாவிடம் திருமணம் பற்றி செய்தியாளர்கள்கேட்டுள்ளனர் .

“நான் திருமணம் செய்யபோவதில்லை. ஆண் துணை தேவையில்லை. இப்படி இருப்பதே நன்றாக உள்ளது” என பதில் அளித்துள்ளார் ஓவியா.

பிக் பாஸ் லாஸ்லியா குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் மூன்றாவது சீசன் போட்டியாளர்களில் மக்களின் பேவரைட் போட்டியாளராக லாஸ்லியா விளங்கி வருகிறார். இலங்கையை சேர்ந்த இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பதோடு, சமூக வலைதளங்களில் ஆர்மி பக்கங்களும் தொடங்கப்பட்டுள்ளன.

பிக் பாஸ் முதல் சீசனில் ஓவியா எப்படி ரசிகர்களுக்கு பிடித்தமானவராக இருந்தாரோ அதுபோல் லாஸ்லியா தான் தற்போதைய பிக் பாஸ் கனவு கண்ணியாக திகழ்கிறார்.

இந்த நிலையில், லாஸ்லியா குறித்து அவரது பள்ளி நண்பர் என்று கூறிக்கொண்டு ஒருவர் சமூக வலைதளத்தில் பகீர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த தகவலால், லாஸ்லியா ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அதாவது, லாஸ்லியாவுக்கு திருமணமாகிவிட்டதோடு, விவாகரத்தும் ஆகிவிட்டதாம். ஆனால், அவர் தனக்கு திருமணமான விஷயத்தை சொல்லாமல் மறைத்து வருவதாகவும், அந்த நபர் தெரிவித்துள்ளார்.

ட்விடரில் வெளியாகியுள்ள லாஸ்லியா குறித்த இந்த பதிவு வைரலாகி வருவதோடு, ஏராளமானவரக்ளால் ஷேர் செய்யப்பட்டும் வருகிறது.

பிக்பாஸ் வீட்டில் கவீனை கூப்பிட்டு லோஸ்லியா சொன்ன அந்த வார்த்தை : துள்ளிக் குதித்த கவீன்!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் பத்தாம் நாள் ரஜினியின் மரணமாஸ் பாடலுடன் ஆரம்பித்தது. அதற்கு முன் ஒன்பதாம் நாள் இரவு 10.55 மணிக்கு லோஸ்லியா கவீனை கூப்பிட்டு தனியாக பேசினார்.

அப்போது உடன் ஷாக்சி இருந்தார். இவர்கள் பேசிக் கொண்டிருந்த போது கவீன் உங்கள் இருவரையும் எனக்கு மிகவும் பிடிக்கும், நீங்கள் இருவரும், நீங்களாக இருக்கிறீர்கள், அதனாலே எனக்கு உங்களை பிடிக்கும், தயவு செய்து என்னை அண்ணா என்று மட்டும் கூறாதே என்று லோஸ்லியாவிடம் கூறினார்.

அதன் பின் என்னிடம் என்ன சொல்ல வந்தாய் என்று லோஸ்லியா கேட்க, உடனே நீ பேசும் விதம் எனக்கு பிடித்திருக்கு அதை சொல்லவே நான் அழைத்தேன், அண்ணா என்று உன்னை கடுப்பேத்தவே சொன்னேன் என்று கூற, உடனே கவீன் இதை வைத்தே நான் ஒரு வாரம் ஓட்டுவேன் என்று துள்ளிக் குதித்தார்.