பிக்பாஸ் வீட்டில் ஷெரினாக மாறிய கவீன் : ரசிகர்களை முகம் சுளிக்க வைத்த நடிகையின் மோசமான செயல்?

பிக்பாஸ் தொடங்கி நேற்று 11 நாள் ஆகிவிட்டது பிக்பாஸ் வீட்டிலுள்ள ஆண்களுக்கு டாஸ்க் கொடுக்கப்படது. இந்த டாஸ்க்கில் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ஆண்கள் பெண்களாக மாற வேண்டும்.

இந்த டாஸ்க்கில் படு கவர்ச்சியான உடையில் இருக்கும் நடிகை ஷெரின் போல் ஆடையை அணிந்து கொண்ட கவீன், அரைகுறை ஆடையுடன் அங்கும் இங்கும் திரிந்து கொண்டு இருந்தார்.

இந்த டாஸ்க்கில் படு கவர்ச்சியான உடையில் இருக்கும் நடிகை ஷெரின் போல் ஆடையை அணிந்து கொண்ட கவீன், அரைகுறை ஆடையுடன் அங்கும் இங்கும் திரிந்து கொண்டு இருந்தார்.

இந்த செயலை பார்க்கவே மோசமாக இருக்கிறது. கவீனுக்கு ஒரு நல்ல பெயர் இருக்கிறது இவர் இப்படியொரு ஆடை அணியலாம என பிக்பாஸ் ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.

பிக்பாஸ் வீட்டில் இன்று அழகு தேவதையாக இருந்த லோஸ்லியா : செம க்யூட் HD புகைப்படங்கள்!!

பிக்பாஸ் வீட்டில் நேற்று பத்தாம் நாள், போட்டியாளர்கள் தங்களுடைய வீட்டு வேலைகளுக்கிடையே பிக்பாஸ் கொடுக்கும் டாஸ்க்குகளை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இன்று தமிழ் மக்களின் அதிக ரசிகர்களைப் பெற்ற லோஸ்லியா இன்று செம அழகாக இருந்தார். இதோ அவரின் புகைப்படங்கள்…

பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த போலீசாரிடம் வனிதா சொன்னது என்ன? மகள் முடிவுக்கு பின் ஆப்பா?

பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களிடம் சண்டை போட்டு கொண்டு ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்து வருகிறார் வனிதா. இந்நிலையில் ஹைதராபாத்துக்கு வந்த வனிதா தனது மகள் ஜெனிதாவை கடத்தி வைத்துள்ளார் என அவரின் இரண்டாவது கணவர் ஆனந்த்ராஜ் தெலுங்கானா போலீசில் புகார் அளித்தார்.

இதை தொடர்ந்து அவரிடம் விசாரிக்க ஆந்திர பொலிசார் முன்னர் சென்னை வந்த போது வனிதா தலைமறைவானார். இந்நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் அவர் இருப்பதை அறிந்த தெலங்கானா போலீசார், தமிழகக் காவல்துறையின் உதவியை நாடியுள்ளது.

நசரத்பேட்டை காவல்துறை உதவியுடன் தெலுங்கானா காவலர்கள், வனிதா விஜய்குமாரிடம் விசாரணை நடத்த பூந்தமல்லியில் ஈ.வி.பி. ஃபிலிம் சிட்டியில் அமைந்துள்ள பிக் பாஸ் அரங்கத்துக்குள் சென்றார்கள்.

அங்கு அவரிடம் மூன்று மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது, அப்போது கடத்தப்பட்டதாக சொல்லப்படும் ஜெனிதா, எங்கு உள்ளார் என்பதை வனிதா போலீசாரிடம் சொல்ல மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து மாலை 5 மணிக்கு வனிதா மகளை நேரில் அழைத்து போலீசார் விசாரிக்கவுள்ளனர், அப்போது மகள் தாயுடன் செல்ல விருப்பம் தெரிவிக்கிறாரா? அல்லது தந்தையுடன் செல்ல விருப்பம் தெரிவிக்கிறாரா? என்பதை பொறுத்தே வனிதாவின் கைது குறித்து முடிவு செய்யப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பிக்பாஸ் வீட்டை விட்டு என்னை வெளியேற்றுங்கள் : பைத்தியக்காரன் ஆகிவிடுவேன் என சித்தப்பு வேதனை!!

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் இடம் தெரியாமல் இருப்பவர் யார் என்றால் அது பருத்தி வீரன் சித்தப்பு சரவணன் தான், அவர் தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பவர்.

ஆனால் வீட்டில் இருக்கும் வனிதா, அபிராமி மற்று மதுமிதாவின் சண்டையால் செமையாய் குழம்பு போய் இருக்கும் சரவணன், என்னால் இதை எல்லாம் பார்க்க முடியவில்லை, இதற்கு மேலும் நான் இருந்தால் பையத்தியக்காரன் ஆகிவிடுவேன்,

என்னை வெளியேற்றிவிட்டு, வேறு யாராவது எடுத்துக் கோங்க என்று கெஞ்சியுள்ளார். இதனால் சரவணன் அதிக நாட்கள் பிக்பாஸ் வீட்டில் நீடிக்கமாட்டார் என்றே தெரிகிறது.

பிக் பாஸ் வீட்டுக்குள் நுழையும் போலீஸ் : கைதாகும் வனிதா, மீரா மிதுன்!!

பிக் பாஸ் சீசன் 3 கடந்த மாதம் தொடங்கி ஒளிபரப்பாகி வருகிறது. போட்டியின் துவக்கத்திலேயே காதல், மோதல் என்று பரபரப்பாக ஒளிபரப்பாகிய பிக் பாஸ் நிகழ்ச்சியில், தற்போது தமிழ் பெண்கள் மற்றும் தமிழ் கலாச்சாரம் குறித்து பேசிய மதுமிதா மீது சக பெண் போட்டியாளர்கள் கடும் கோபமடைந்திருப்பதோடு அவரை தனிமை படுத்தியுள்ளனர்.

இதனால், மதுமிதாவின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டு அவர் தனியாக புலம்பி வருகிறார். இது நீடித்தால் அவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவார், என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், வனிதா மற்றும் மீரா மிதுன் ஆகியோரை போலீஸார் கைது செய்வதற்காக பிக் பாஸ் வீட்டுக்குள் விரைவில் நுழைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆள்கடத்தில் வழக்கில் வனிதா விஜயகுமாரை தெலுங்கானா போலீஸார் கைது செய்ய முடிவு செய்துள்ளனர். இதனால், தெலுங்கானா போலீஸ் குழு விரைவில் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைய உள்ளார்களாம்.

அதேபோல், அழகிப் போட்டி நடத்துவதாக சில மோசடிகளை செய்ததாக மீரா மிதுன் மீது புகார்கள் எழுந்துள்ளது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் அவர் மீது கொடுக்கப்பட்டுள்ள புகார்களின் விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், அவர் யாருக்கும் தெரியாமல் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றுவிட்டாராம்.

இதனால், மீரா மிதுனை தேனாம்பேட்டை போலீஸார் கைது செய்ய முடிவு செய்துள்ளார்களாம். எனவே, விரைவில் அவர்களும் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைய உள்ளதாக கூறப்படுகிறது.

பிக் பாஸ் போட்டியாளர்களுக்கிடையே ஏற்படும் சண்டைகள் தான் பெரும் சர்ச்சையை உருவாக்கும் என்றால், தற்போது போட்டியாளர்களை போலீஸார் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட உள்ள தகவால் பிக் பாஸ் போட்டியே தற்போது சர்ச்சையாகியுள்ளது.

லொஸ்லியா உண்மையில்லை, அவ நடிக்கிறா : டார்கெட் செய்யும் வில்லி கேங்!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தினமும் போட்டியாளர்கள் சண்டை தான் போட்டு வருகின்றனர். ஆனால் இலங்கையில் இருந்து போட்டியாளராக வந்துள்ள லாஸ்லியா யாருடனும் சண்டை போடாமல் அமைதியாகத்தான் இருக்கிறார்.

வனிதா, அபிராமி, சாக்ஷி, ஷெரின் ஆகியோர் வில்லி கேங் போல செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் தொடர்ந்து மதுமிதா மற்றும் மீரா மிதுன் போன்றவர்களை டார்கெட் செய்து வருகின்றனர்.

இன்று முகன் ராவ் பற்றிய பஞ்சாயத்து தான் பிக்பாஸில் நடந்தது. இந்நிலையில் லாஸ்லியா பற்றி வனிதா கேங் பேசியுள்ளார்.

“அவ கடந்த மூன்று நாட்களாக அவங்க (மதுமிதா டீம்) பக்கம் தான் இருக்கா. நடுநிலையாக இருப்பது போல நடிக்கிறா” என வனிதா குற்றம் சாட்டியுள்ளார்.

வனிதா மகள் கொடுத்த வாக்குமூலம், சர்ச்சையில் புதிய திருப்பம் : போலீஸ் விசாரணையால் அதிர்ந்த பிக்பாஸ் வீடு!!

தற்போது பிக்பாஸ் வீட்டில் நடந்து வரும் பல சண்டைகளுக்கு காரணமானவர் வனிதா விஜயகுமார். பிரபல நடிகர் விஜயகுமாரின் மகள் தான் இவர்.

இவரது இரண்டாவது கணவர் ஆனந்தராஜை இவர் 2012ல் விவாகரத்து செய்துவிட்டார். அவர்களுக்கு ஜெயந்திகா என்ற ஒரு மகள் உள்ளார். விவாகரத்து ஆன பிறகு ஆனந்தராஜ் உடன் தான் அவரது மகள் வசித்துவந்தார்.

அதனப்பிறகு சமீபத்தில் மகளை அழைத்துவந்த வனிதா திருப்பி அனுப்பவில்லை. அதனால் அவர் தன்னுடைய மகளை கடத்திவிட்டார் என போலீசில் புகாரை அளித்தார். இது பற்றி விசாரிக்க தெலுங்கானா போலீசார் இன்று பிக்பாஸ் செட்டுக்கு வந்துள்ளனர். இதனால் பிக்பாஸ் வீடு பரபரப்பாக இருந்துள்ளது.

மேலும் அவர்கள் மாலையில் வனிதா மகள் ஜெயந்திகாவை நேரில் வரவைத்து விசாரித்துள்ளனர். அவர் அளித்த வாக்குமூலத்தில் தான் தாயுடன் செல்ல விரும்புவதாக தெரிவித்துள்ளார். இதனால் வனிதா கைதாவதில் இருந்து தப்பியுள்ளார்.

தாலியை கழட்டி வைத்துவிட்டு பிக்பாஸ் வந்தாரா மதுமிதா? உண்மை இதுதான்!!

பிக்பாஸில் நடிகை மதுமிதா மற்றும் வனிதா இடையே நேற்று கடும் வாக்கு வாதம் நடந்தது. காலையில் பிக்பாஸ் கொடுத்த டாஸ்க் தான் இதற்கு காரணம்.

ஒரு motivational ஸ்பீச் கொடுங்கள் என மதுமிதாவுக்கு டாஸ்க் கொடுக்கப்பட்டது. மதுமிதா பேசும்போது இடையில் புகுந்த வனிதா அவரை பேசவிடாமல் வாக்கு வாதம் செய்தார்.

இது சண் டையாக வெடித்தது. அப்போது வனிதா மதுமிதா தாலியை கழட்டி வைத்துவிட்டு வந்தார் என குற்றம் சாட்டினார். அதற்கு மதுமிதா தான் மோதிரம் அணிந்திருப்பதாக காட்டியுள்ளார்.

பெற்ற மகளை கடத்திய பிக்பாஸ் வனிதா : கைது செய்ய துடிக்கும் போலீஸார்!!

நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதாவிற்கும் தெலுங்கானாவை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவருக்கும் கடந்த 2012ல் திருமணம் நடந்தது. பிறகு கருத்து வேறுபாட்டின் காரணமாக விவகாரத்து பெற்ற இவர்களுக்கு ஜோவிதா என்ற மகள் உள்ளார்.

இந்நிலையில் ஜோவிதாவை வனிதா கடந்த பிப்ரவரி மாதம் சென்னைக்கு அழைத்து வந்துள்ளார். இதனையடுத்து தனது மகளை கடத்தி சென்றுவிட்டதாக வனிதா மீது ஆனந்தராஜ் போலீஸில் ஆள் கட த்தல் புகார் ஒன்றை கொடுக்க வனிதாவை கைது செய்ய தெலுங்கானா போலீஸார் மும்முரம் காட்டி வருகின்றனர்.

மேலும் தற்சமயம் பிக்பாஸ் வீட்டினுள் வனிதா உள்ளதால் பிக்பாஸ் வீடு செட் அமைக்கப்பட்டுள்ள நசரத்பேட்டை போலீஸாரிடம் தெலுங்கானா போலீஸார் உதவியை கோரியுள்ளனர். இதனால் எந்நேரத்திலும் வனிதா கைதாகலாம் என கூறப்படுகிறது.

நடிக்க முடியாது என படப்பிடிப்பை நிறுத்திவிட்டு வெளியேறிய நடிகை தமன்னா!!

நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார். ஹிந்தியில் சயீரா நரசிம்ம ரெட்டி, குயின் படத்தின் ரீமேக், ஹிந்தி ஒரு படம் என ரிலீஸ்க்காக காத்திருக்கிறார்.

இந்நிலையில் தெலுங்கில் ராஜீ காரி காதி படத்தின் 3 ம் பாகத்தை எடுத்து வருகிறார்கள். இதில் ஹீரோயினாக தமன்னா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கிவிட்ட நிலையில் தமன்னா நடித்துவந்துள்ளார்.

ஆனால் அவரிடம் தெரியாமலேயே கதையில் இயக்குனர் ஓம்கர் மாற்றம் செய்திருந்தது தனக்கு பிடிக்காததால் அந்த படத்தில் இருந்து நடிக்க முடியாது என கூறி விலகிவிட்டாராம். இதனால் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளது.