பிக்பாஸ் வீட்டில் இருக்கும் இடம் தெரியாமல் இருப்பவர் யார் என்றால் அது பருத்தி வீரன் சித்தப்பு சரவணன் தான், அவர் தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பவர்.
ஆனால் வீட்டில் இருக்கும் வனிதா, அபிராமி மற்று மதுமிதாவின் சண்டையால் செமையாய் குழம்பு போய் இருக்கும் சரவணன், என்னால் இதை எல்லாம் பார்க்க முடியவில்லை, இதற்கு மேலும் நான் இருந்தால் பையத்தியக்காரன் ஆகிவிடுவேன்,
என்னை வெளியேற்றிவிட்டு, வேறு யாராவது எடுத்துக் கோங்க என்று கெஞ்சியுள்ளார். இதனால் சரவணன் அதிக நாட்கள் பிக்பாஸ் வீட்டில் நீடிக்கமாட்டார் என்றே தெரிகிறது.
பிக் பாஸ் சீசன் 3 கடந்த மாதம் தொடங்கி ஒளிபரப்பாகி வருகிறது. போட்டியின் துவக்கத்திலேயே காதல், மோதல் என்று பரபரப்பாக ஒளிபரப்பாகிய பிக் பாஸ் நிகழ்ச்சியில், தற்போது தமிழ் பெண்கள் மற்றும் தமிழ் கலாச்சாரம் குறித்து பேசிய மதுமிதா மீது சக பெண் போட்டியாளர்கள் கடும் கோபமடைந்திருப்பதோடு அவரை தனிமை படுத்தியுள்ளனர்.
இதனால், மதுமிதாவின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டு அவர் தனியாக புலம்பி வருகிறார். இது நீடித்தால் அவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவார், என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், வனிதா மற்றும் மீரா மிதுன் ஆகியோரை போலீஸார் கைது செய்வதற்காக பிக் பாஸ் வீட்டுக்குள் விரைவில் நுழைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆள்கடத்தில் வழக்கில் வனிதா விஜயகுமாரை தெலுங்கானா போலீஸார் கைது செய்ய முடிவு செய்துள்ளனர். இதனால், தெலுங்கானா போலீஸ் குழு விரைவில் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைய உள்ளார்களாம்.
அதேபோல், அழகிப் போட்டி நடத்துவதாக சில மோசடிகளை செய்ததாக மீரா மிதுன் மீது புகார்கள் எழுந்துள்ளது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் அவர் மீது கொடுக்கப்பட்டுள்ள புகார்களின் விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், அவர் யாருக்கும் தெரியாமல் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றுவிட்டாராம்.
இதனால், மீரா மிதுனை தேனாம்பேட்டை போலீஸார் கைது செய்ய முடிவு செய்துள்ளார்களாம். எனவே, விரைவில் அவர்களும் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைய உள்ளதாக கூறப்படுகிறது.
பிக் பாஸ் போட்டியாளர்களுக்கிடையே ஏற்படும் சண்டைகள் தான் பெரும் சர்ச்சையை உருவாக்கும் என்றால், தற்போது போட்டியாளர்களை போலீஸார் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட உள்ள தகவால் பிக் பாஸ் போட்டியே தற்போது சர்ச்சையாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தினமும் போட்டியாளர்கள் சண்டை தான் போட்டு வருகின்றனர். ஆனால் இலங்கையில் இருந்து போட்டியாளராக வந்துள்ள லாஸ்லியா யாருடனும் சண்டை போடாமல் அமைதியாகத்தான் இருக்கிறார்.
வனிதா, அபிராமி, சாக்ஷி, ஷெரின் ஆகியோர் வில்லி கேங் போல செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் தொடர்ந்து மதுமிதா மற்றும் மீரா மிதுன் போன்றவர்களை டார்கெட் செய்து வருகின்றனர்.
இன்று முகன் ராவ் பற்றிய பஞ்சாயத்து தான் பிக்பாஸில் நடந்தது. இந்நிலையில் லாஸ்லியா பற்றி வனிதா கேங் பேசியுள்ளார்.
“அவ கடந்த மூன்று நாட்களாக அவங்க (மதுமிதா டீம்) பக்கம் தான் இருக்கா. நடுநிலையாக இருப்பது போல நடிக்கிறா” என வனிதா குற்றம் சாட்டியுள்ளார்.
தற்போது பிக்பாஸ் வீட்டில் நடந்து வரும் பல சண்டைகளுக்கு காரணமானவர் வனிதா விஜயகுமார். பிரபல நடிகர் விஜயகுமாரின் மகள் தான் இவர்.
இவரது இரண்டாவது கணவர் ஆனந்தராஜை இவர் 2012ல் விவாகரத்து செய்துவிட்டார். அவர்களுக்கு ஜெயந்திகா என்ற ஒரு மகள் உள்ளார். விவாகரத்து ஆன பிறகு ஆனந்தராஜ் உடன் தான் அவரது மகள் வசித்துவந்தார்.
அதனப்பிறகு சமீபத்தில் மகளை அழைத்துவந்த வனிதா திருப்பி அனுப்பவில்லை. அதனால் அவர் தன்னுடைய மகளை கடத்திவிட்டார் என போலீசில் புகாரை அளித்தார். இது பற்றி விசாரிக்க தெலுங்கானா போலீசார் இன்று பிக்பாஸ் செட்டுக்கு வந்துள்ளனர். இதனால் பிக்பாஸ் வீடு பரபரப்பாக இருந்துள்ளது.
மேலும் அவர்கள் மாலையில் வனிதா மகள் ஜெயந்திகாவை நேரில் வரவைத்து விசாரித்துள்ளனர். அவர் அளித்த வாக்குமூலத்தில் தான் தாயுடன் செல்ல விரும்புவதாக தெரிவித்துள்ளார். இதனால் வனிதா கைதாவதில் இருந்து தப்பியுள்ளார்.
பிக்பாஸில் நடிகை மதுமிதா மற்றும் வனிதா இடையே நேற்று கடும் வாக்கு வாதம் நடந்தது. காலையில் பிக்பாஸ் கொடுத்த டாஸ்க் தான் இதற்கு காரணம்.
ஒரு motivational ஸ்பீச் கொடுங்கள் என மதுமிதாவுக்கு டாஸ்க் கொடுக்கப்பட்டது. மதுமிதா பேசும்போது இடையில் புகுந்த வனிதா அவரை பேசவிடாமல் வாக்கு வாதம் செய்தார்.
இது சண் டையாக வெடித்தது. அப்போது வனிதா மதுமிதா தாலியை கழட்டி வைத்துவிட்டு வந்தார் என குற்றம் சாட்டினார். அதற்கு மதுமிதா தான் மோதிரம் அணிந்திருப்பதாக காட்டியுள்ளார்.
நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதாவிற்கும் தெலுங்கானாவை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவருக்கும் கடந்த 2012ல் திருமணம் நடந்தது. பிறகு கருத்து வேறுபாட்டின் காரணமாக விவகாரத்து பெற்ற இவர்களுக்கு ஜோவிதா என்ற மகள் உள்ளார்.
இந்நிலையில் ஜோவிதாவை வனிதா கடந்த பிப்ரவரி மாதம் சென்னைக்கு அழைத்து வந்துள்ளார். இதனையடுத்து தனது மகளை கடத்தி சென்றுவிட்டதாக வனிதா மீது ஆனந்தராஜ் போலீஸில் ஆள் கட த்தல் புகார் ஒன்றை கொடுக்க வனிதாவை கைது செய்ய தெலுங்கானா போலீஸார் மும்முரம் காட்டி வருகின்றனர்.
மேலும் தற்சமயம் பிக்பாஸ் வீட்டினுள் வனிதா உள்ளதால் பிக்பாஸ் வீடு செட் அமைக்கப்பட்டுள்ள நசரத்பேட்டை போலீஸாரிடம் தெலுங்கானா போலீஸார் உதவியை கோரியுள்ளனர். இதனால் எந்நேரத்திலும் வனிதா கைதாகலாம் என கூறப்படுகிறது.
நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார். ஹிந்தியில் சயீரா நரசிம்ம ரெட்டி, குயின் படத்தின் ரீமேக், ஹிந்தி ஒரு படம் என ரிலீஸ்க்காக காத்திருக்கிறார்.
இந்நிலையில் தெலுங்கில் ராஜீ காரி காதி படத்தின் 3 ம் பாகத்தை எடுத்து வருகிறார்கள். இதில் ஹீரோயினாக தமன்னா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கிவிட்ட நிலையில் தமன்னா நடித்துவந்துள்ளார்.
ஆனால் அவரிடம் தெரியாமலேயே கதையில் இயக்குனர் ஓம்கர் மாற்றம் செய்திருந்தது தனக்கு பிடிக்காததால் அந்த படத்தில் இருந்து நடிக்க முடியாது என கூறி விலகிவிட்டாராம். இதனால் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளது.
சௌந்தர்யா ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் ஒரு டெக்னிஷியனாக அறிமுகமாகி கோச்சடையான், வேலையில்லா பட்டதரி-2 ஆகிய படங்களை இயக்கியவர். இவர் சமீபத்தில் தான் இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டார்.
அடுத்து ஒரு படம் இயக்கும் வேலைகளில் இவர் பிஸியாக இருப்பதாக தெரிகின்றது, இந்நிலையில் நீச்சல் குளத்தில் தன் குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை சௌந்தர்யா இணையத்தில் ஷேர் செய்தார்.
ஆனால், என்ன நினைத்தார் என்று தெரியவில்லை, அந்த புகைப்படத்தை அவர் தன் பக்கத்திலிருந்து நீக்கினார். இதற்கு ரசிகர்களே காரணம் என்று கூறப்படுகின்றது, பலரும் ரஜினி மகள் இப்படி செய்யலாமா? என்று கமெண்ட் தெரிவிக்க அதை தொடர்ந்தே நீக்கினார் என கூறப்படுகின்றது.
பிக்பாஸ் வீட்டில் உள்ல மதுமிதா தமிழ் பெண்கள் மற்றும் தமிழ் கலாச்சாரம் பற்றி பேசியது மற்ற போட்டியாளர்கள் பலருக்கும் பிடிக்கவில்லை. அதனால் அவரை பலரும் நாமினேஷனில் குறிப்பிட்டனர்.
தன்னிடமிருந்து அனைவரும் ஒதுங்கிய நிலையில் மதுமிதா நேற்று தனியாக ஒரு சிறிய சிவலிங்கத்தை வைத்து பேசிக்கொண்டிருந்தார். இன்னைக்கு நீ என் கனவுல வரியா? எதாவது ஒரு விஷயம் எனக்கு தெரியணும். நீ தப்புனு சொன்னாலும் நான் ஏத்துக்குவேன். சரினு சொன்னாலும் ஏத்துக்குவேன்.
என் மனசுல கல்லை தூக்கி வைத்தது போல வெயிட்டாக இருக்கு. வீட்ல பிரச்சனைனா பரவால.. இங்கே எனக்கு வீடே பிரச்சனையா இருக்கு என கண்ணீருடன் பேசியுள்ளார் மதுமிதா.
அவர் இப்படி பேசுவதால் மனதளவில் நொந்து போயுள்ளார் என தெளிவாக தெரிகிறது இதையடுத்து அவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்துவிட்டதாகவே பார்க்கப்படுகிறது.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் 3 ஷோவில் தற்போது 16 போட்டியாளர்கள் உள்ளனர். அதில் ஆரம்பம் முதலே அபிராமி வெங்கடாச்சலம் மற்றும் சாக்ஷி அகர்வால் இருவரும் நெருக்கமாகவே இருந்து வருகின்றனர்.
இன்று எலிமினேஷனுக்கான நாமினேஷன் நடைபெற்றது. அந்த லிஸ்டில் நடிகை சாக்ஷி அகர்வால் பெயர் இடம்பெற்றிருந்தது. ஆனால் அது பற்றி அபிராமி பெரிதாக ரியாக்ட் செய்யவில்லை.
ஆனால் லிஸ்டில் சேரன் பெயர் அறிவிக்கப்பட்டதும் அபிராமி ஷாக் ஆகி, அவர் ஏன் நாமினேட் ஆனார் என அதிர்ச்சியுடன் கேட்டார்.
இதை பார்த்த சாக்ஷி அகர்வால் கோபமாகி, ‘நான் நாமினேட் ஆனது பற்றி உனக்கு கவலை இல்லை. ஆனால் சேரனுக்கு மட்டும் ஷாக்” என இரவு பேசும்போது அபிராமியிடம் சண்டை போட்டார்.