வனிதா மகள் கொடுத்த வாக்குமூலம், சர்ச்சையில் புதிய திருப்பம் : போலீஸ் விசாரணையால் அதிர்ந்த பிக்பாஸ் வீடு!!

தற்போது பிக்பாஸ் வீட்டில் நடந்து வரும் பல சண்டைகளுக்கு காரணமானவர் வனிதா விஜயகுமார். பிரபல நடிகர் விஜயகுமாரின் மகள் தான் இவர்.

இவரது இரண்டாவது கணவர் ஆனந்தராஜை இவர் 2012ல் விவாகரத்து செய்துவிட்டார். அவர்களுக்கு ஜெயந்திகா என்ற ஒரு மகள் உள்ளார். விவாகரத்து ஆன பிறகு ஆனந்தராஜ் உடன் தான் அவரது மகள் வசித்துவந்தார்.

அதனப்பிறகு சமீபத்தில் மகளை அழைத்துவந்த வனிதா திருப்பி அனுப்பவில்லை. அதனால் அவர் தன்னுடைய மகளை கடத்திவிட்டார் என போலீசில் புகாரை அளித்தார். இது பற்றி விசாரிக்க தெலுங்கானா போலீசார் இன்று பிக்பாஸ் செட்டுக்கு வந்துள்ளனர். இதனால் பிக்பாஸ் வீடு பரபரப்பாக இருந்துள்ளது.

மேலும் அவர்கள் மாலையில் வனிதா மகள் ஜெயந்திகாவை நேரில் வரவைத்து விசாரித்துள்ளனர். அவர் அளித்த வாக்குமூலத்தில் தான் தாயுடன் செல்ல விரும்புவதாக தெரிவித்துள்ளார். இதனால் வனிதா கைதாவதில் இருந்து தப்பியுள்ளார்.

தாலியை கழட்டி வைத்துவிட்டு பிக்பாஸ் வந்தாரா மதுமிதா? உண்மை இதுதான்!!

பிக்பாஸில் நடிகை மதுமிதா மற்றும் வனிதா இடையே நேற்று கடும் வாக்கு வாதம் நடந்தது. காலையில் பிக்பாஸ் கொடுத்த டாஸ்க் தான் இதற்கு காரணம்.

ஒரு motivational ஸ்பீச் கொடுங்கள் என மதுமிதாவுக்கு டாஸ்க் கொடுக்கப்பட்டது. மதுமிதா பேசும்போது இடையில் புகுந்த வனிதா அவரை பேசவிடாமல் வாக்கு வாதம் செய்தார்.

இது சண் டையாக வெடித்தது. அப்போது வனிதா மதுமிதா தாலியை கழட்டி வைத்துவிட்டு வந்தார் என குற்றம் சாட்டினார். அதற்கு மதுமிதா தான் மோதிரம் அணிந்திருப்பதாக காட்டியுள்ளார்.

பெற்ற மகளை கடத்திய பிக்பாஸ் வனிதா : கைது செய்ய துடிக்கும் போலீஸார்!!

நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதாவிற்கும் தெலுங்கானாவை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவருக்கும் கடந்த 2012ல் திருமணம் நடந்தது. பிறகு கருத்து வேறுபாட்டின் காரணமாக விவகாரத்து பெற்ற இவர்களுக்கு ஜோவிதா என்ற மகள் உள்ளார்.

இந்நிலையில் ஜோவிதாவை வனிதா கடந்த பிப்ரவரி மாதம் சென்னைக்கு அழைத்து வந்துள்ளார். இதனையடுத்து தனது மகளை கடத்தி சென்றுவிட்டதாக வனிதா மீது ஆனந்தராஜ் போலீஸில் ஆள் கட த்தல் புகார் ஒன்றை கொடுக்க வனிதாவை கைது செய்ய தெலுங்கானா போலீஸார் மும்முரம் காட்டி வருகின்றனர்.

மேலும் தற்சமயம் பிக்பாஸ் வீட்டினுள் வனிதா உள்ளதால் பிக்பாஸ் வீடு செட் அமைக்கப்பட்டுள்ள நசரத்பேட்டை போலீஸாரிடம் தெலுங்கானா போலீஸார் உதவியை கோரியுள்ளனர். இதனால் எந்நேரத்திலும் வனிதா கைதாகலாம் என கூறப்படுகிறது.

நடிக்க முடியாது என படப்பிடிப்பை நிறுத்திவிட்டு வெளியேறிய நடிகை தமன்னா!!

நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார். ஹிந்தியில் சயீரா நரசிம்ம ரெட்டி, குயின் படத்தின் ரீமேக், ஹிந்தி ஒரு படம் என ரிலீஸ்க்காக காத்திருக்கிறார்.

இந்நிலையில் தெலுங்கில் ராஜீ காரி காதி படத்தின் 3 ம் பாகத்தை எடுத்து வருகிறார்கள். இதில் ஹீரோயினாக தமன்னா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கிவிட்ட நிலையில் தமன்னா நடித்துவந்துள்ளார்.

ஆனால் அவரிடம் தெரியாமலேயே கதையில் இயக்குனர் ஓம்கர் மாற்றம் செய்திருந்தது தனக்கு பிடிக்காததால் அந்த படத்தில் இருந்து நடிக்க முடியாது என கூறி விலகிவிட்டாராம். இதனால் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளது.

நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை நீக்கிய சௌந்தர்யா ரஜினிகாந்த், இது தான் காரணமா?

சௌந்தர்யா ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் ஒரு டெக்னிஷியனாக அறிமுகமாகி கோச்சடையான், வேலையில்லா பட்டதரி-2 ஆகிய படங்களை இயக்கியவர். இவர் சமீபத்தில் தான் இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டார்.

அடுத்து ஒரு படம் இயக்கும் வேலைகளில் இவர் பிஸியாக இருப்பதாக தெரிகின்றது, இந்நிலையில் நீச்சல் குளத்தில் தன் குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை சௌந்தர்யா இணையத்தில் ஷேர் செய்தார்.

ஆனால், என்ன நினைத்தார் என்று தெரியவில்லை, அந்த புகைப்படத்தை அவர் தன் பக்கத்திலிருந்து நீக்கினார். இதற்கு ரசிகர்களே காரணம் என்று கூறப்படுகின்றது, பலரும் ரஜினி மகள் இப்படி செய்யலாமா? என்று கமெண்ட் தெரிவிக்க அதை தொடர்ந்தே நீக்கினார் என கூறப்படுகின்றது.

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற மதுமிதா முடிவா? சிவலிங்கத்திடம் பேசிய கண்ணீர் புகைப்படம்!!

பிக்பாஸ் வீட்டில் உள்ல மதுமிதா தமிழ் பெண்கள் மற்றும் தமிழ் கலாச்சாரம் பற்றி பேசியது மற்ற போட்டியாளர்கள் பலருக்கும் பிடிக்கவில்லை. அதனால் அவரை பலரும் நாமினேஷனில் குறிப்பிட்டனர்.

தன்னிடமிருந்து அனைவரும் ஒதுங்கிய நிலையில் மதுமிதா நேற்று தனியாக ஒரு சிறிய சிவலிங்கத்தை வைத்து பேசிக்கொண்டிருந்தார். இன்னைக்கு நீ என் கனவுல வரியா? எதாவது ஒரு விஷயம் எனக்கு தெரியணும். நீ தப்புனு சொன்னாலும் நான் ஏத்துக்குவேன். சரினு சொன்னாலும் ஏத்துக்குவேன்.

என் மனசுல கல்லை தூக்கி வைத்தது போல வெயிட்டாக இருக்கு. வீட்ல பிரச்சனைனா பரவால.. இங்கே எனக்கு வீடே பிரச்சனையா இருக்கு என கண்ணீருடன் பேசியுள்ளார் மதுமிதா.

அவர் இப்படி பேசுவதால் மனதளவில் நொந்து போயுள்ளார் என தெளிவாக தெரிகிறது இதையடுத்து அவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்துவிட்டதாகவே பார்க்கப்படுகிறது.

பிக்பாஸில் நெருக்கமாக இருந்த அபிராமி-சாக்ஷி இடையே ஏற்பட்ட விரிசல் : காரணம் இதுதான்!!

அபிராமி-சாக்ஷி

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் 3 ஷோவில் தற்போது 16 போட்டியாளர்கள் உள்ளனர். அதில் ஆரம்பம் முதலே அபிராமி வெங்கடாச்சலம் மற்றும் சாக்ஷி அகர்வால் இருவரும் நெருக்கமாகவே இருந்து வருகின்றனர்.

இன்று எலிமினேஷனுக்கான நாமினேஷன் நடைபெற்றது. அந்த லிஸ்டில் நடிகை சாக்ஷி அகர்வால் பெயர் இடம்பெற்றிருந்தது. ஆனால் அது பற்றி அபிராமி பெரிதாக ரியாக்ட் செய்யவில்லை.

ஆனால் லிஸ்டில் சேரன் பெயர் அறிவிக்கப்பட்டதும் அபிராமி ஷாக் ஆகி, அவர் ஏன் நாமினேட் ஆனார் என அதிர்ச்சியுடன் கேட்டார்.

இதை பார்த்த சாக்ஷி அகர்வால் கோபமாகி, ‘நான் நாமினேட் ஆனது பற்றி உனக்கு கவலை இல்லை. ஆனால் சேரனுக்கு மட்டும் ஷாக்” என இரவு பேசும்போது அபிராமியிடம் சண்டை போட்டார்.

சைக்கோ கணவரை பற்றி பல உண்மைகளை போட்டு உடைத்த மீரா மிதுன் : கண்ணீருடன் பிக்பாஸ் போட்டியாளர்கள்!!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கடந்த மூன்று நாட்களாகவே மீரா மிதுனின் பிரச்சனை தான் ஹைலைட்டாக இருந்து வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறுவதற்கு முன்பாக இவர் பாஸ் போட்டி நடத்துவதாக கூறி பலரை மோசடி செய்ததாக தகவல்கள் வெளியாகின.

அதே போல மீரா மிதுன் அழகி என்ற பெயரில் பல்வேறு மோசடிகளை செய்துள்ளார் என்று கேரளாவை சேர்ந்த ஜோ மைக்கேல் என்ற நபர் தொடர்ந்து குற்றம்சாட்டி மைக்கேல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பேட்டி அளித்த ஜோ மைக்கேல், மீரா மிதுன் மீது பல்வேறு மோசடி வழக்குகள் இருக்கிறது.

அதிலும் ஜோ மைக்கேல் தான் மீரா குறித்த பல ஷாக்கிங் உண்மைகளை கூறி வருகிறார். அவர் கூறிய மிக முக்கியமான குற்றசாட்டில் மீரா மிதுனுக்கு திருமணமாகி விவாகரத்தும் ஆகிவிட்டது என்பது தான். இந்த நிலையில் தனக்கு திருமணம் முடிந்து விவாகரத்தும் ஆகிவிட்டதை முதல் முறையாக ஒப்புக்கொண்டுள்ளார் மீரா மிதுன்.

நேற்று ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் மீரா மிதுன் பேசுகையில் மனைவி அல்லது கணவர் பற்றி சொல்லுங்கள் என்று டாஸ்க் வந்தது. அப்போது பேசிய மீரா டாஸ்க் 5 வருடத்திற்கு முன்னர் என்னுடைய அப்பா எனக்கு ஒருவரை பார்த்து திருமணம் செய்து வைத்தார். அனால், திருமணம் முடிந்து சில நாட்கள் கழித்து தான் அவன் ஒரு சைக்கோ என்று தெரிந்தது.

இப்படி ஒருவரை எனக்கு திருமணம் செய்துவிட்டோமே என்று அப்பா மிகவும் சங்கடமடைந்தார். அந்த திருமணம் சட்டபடி பதிவு செய்யபடாததால் எனக்கு என்னுடைய அப்பா, என் கணவரை எனக்கு மூன்று சாய்ஸ் கொடுத்தார். ஒன்று வெளிநாடு சென்று படி இல்லை இதை அனைத்தையும் மறந்துவிடு. இது ரெண்டும் இல்லனா உன் இஷ்டம் என்று கூறிவிட்டார்.

ஆனால் நான் என் கணவருக்காக காத்திருப்பதாக சொன்னேன். ஒரு முறை என் பிறந்தநாளன்று நானே அவர் வேலை செய்யும் இடத்திற்கு சென்றேன். பின்னர் நான் பேசிகொண்டே இடத்திற்கு போது என்னை அவர் அறைந்துவிட்டார். அவர் அடித்தும் எனக்கு ரத்தம் வந்து விட்டது பின்னர் இரவு 2 மணிக்கு அந்த இடத்தில் இருந்து ஆட்டோவில் வீட்டுக்கு வந்து விட்டேன்.

என் கணவர் குறித்து நான் ரொம்ப ஆசையாக இருந்தேன் ஆனால், இப்படி ஆகிவிட்டது. அந்த சம்பவத்திற்கு பின்னர் யார் மீதும் எனக்கு எந்த எண்ணமும் வரவில்லை என்று கண்ணீர் மல்க கூறினார். மீரா மிதுன் தனது திருமணம் குறித்து பேசியதை (ஜூன் 29) எபிசோடில் 41 நிமிடத்தில் நீங்கள் காணலாம்.

பிக் பாஸ் லொஸ்லியாவின் கவர்ச்சி புகைப்படம் லீக் : அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

லொஸ்லியா

பிக் பாஸ் மூன்றாவது சீசன் ஆரம்பத்திலேயே சண்டை, காதல் என்று அமர்க்களமாக தொடங்கினாலும், தற்போது சுவாரஸ்யம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. இருப்பினும், போட்டியாளர்களில் ஒருவரான லொஸ்லியாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்திருக்கிறார்கள். எப்படி ஓவியாவுக்கு ஆர்மி தொடங்கப்பட்டதோ அதுபோல் தற்போது லொஸ்லியாவுக்கு ஆர்மிகள் தொடங்கப்பட்டுள்ளன.

பிக் பாஸ் வீட்டில் லொஸ்லியா எது செய்தாலும் அது தான் டிரெண்டாகி விடுகிறது. அவர் நடனம் ஆடுவது, பாட்டு பாடுவது என அனைத்தையும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து கொண்டாடி வருகிறார்கள்.

இந்த நிலையில், லொஸ்லியாவின் கவர்ச்சி புகைப்படம் ஒன்று லீக்காகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.

லொஸ்லியா ஆரிமை அதிர்ச்சியடைய செய்திருக்கும் இந்த கவர்ச்சி புகைப்படத்தால் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதங்களே எழுந்துள்ளனர். மேலும், சிலர் அந்த புகைப்படத்தில் இருப்பது லொஸ்லியாவே இல்லை, என்றும் மறுத்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்…

என் நண்பர்கள் சொல்லி அனுப்பியது இதுதான் : கேமரா முன் புலம்பும் கெவின்!!

புலம்பும் கெவின்

விஜய் டீவி நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் எதிர்பார்த்த படியே விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. நேற்று முதல் எலிமினேஷனுக்காக நாமினேஷன் நடந்தது இதில் கெவின் பெயர் வந்தது அனைவருமே ஷாக்காக தான் பார்த்தார்கள், கெவினுக்கு நல்ல பெயர் இருக்கு இவர் எப்படி என கேட்டுக்கொண்டார்கள்.

பின்பு எலிமினேஷன் முடிந்த பின் கெவின் மற்றும் சாக்‌ஷி இருவரும் சமையல் செய்யும் இடத்தில் கேமரா பார்த்தபடி போசிக்கொண்டனர். அப்போது கெவின் உலகத்திலே நான் தான் நல்லவனு நெனச்சு வாழ்ந்துட்டு இருந்தேன் எனக்கே இப்படியா எனக் கேட்ட சாக்‌ஷியும் நானுதான் எனக்கூற அதற்கு கெவின் என் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கூறியது இது தான்.

பிக்பாஸ் வீட்டில் நாயம், தர்மம் நீ பேசத… நாயம் தான் பேச கூடாது, ஜாலியா இருந்திட்டு நாயமா இருக்கிற இடத்தில நாயமா இருக்கேனு சொல்லிட்டு வந்தேன் ஆனா இப்படி இருக்கே என கேமரா முன் புலம்பிக்கொண்டு இருக்கிறார் கெவின்.

எது எப்படியோ முதல் எலிமினேஷனுக்காக நாமினேஷனில் பலரது பெயரும் வந்தது அதில் மீராவுக்கும், மதுமிதாவுக்கும் தான் அதிக எதிர்ப்பு இருக்கு என்பது தெரியவந்துள்ளது.