பிக்பாஸ் வீட்டில் நேற்று அனைவரையும் கண்கலங்க வைத்தவர் ஜாங்கிரி மதுமிதா தான், அவர் தன்னுடைய அம்மா மற்றும் அப்பாவின் காதல் கதை பற்றி கூறிய போது, என் அம்மாக்கு படிப்பு என்றால் அவ்வளவு பிடிக்கும், பார்க்க மிக அழகாக இருப்பார்.
அப்படி இருக்கையில் எங்க அப்பா வை ஒன் சைடாக காதலித்து, அம்மாவின் தாத்தா பாட்டியை ஐஸ் வைத்து திருமணம் செய்து கொண்டார். என் அப்பா குடி பழக்கத்திற்கு அடிமையானவர், இருப்பினும் அம்மா வாழ்ந்து வந்தாங்க, அப்புறம் அப்பா தொடர்ந்து குடித்து.. குடித்து.. சீக்கிரமே இறந்து போய்விட்டார்.
அப்பா இறந்த போது அம்மாவுக்கு வயது 30 கூட இருக்காது, அக்கா மூன்று பேர் மட்டும் தான், அண்ணன், தம்பி கிடையாது.
அப்பாவின் முகத்தை பார்த்தது கூட கிடையாது, ஒரு வயது இருக்கும் போதே இறந்துவிட்டார். எட்டாம் வகுப்பு படிக்கும் வரை என்னுடைய பிறந்தநாள் கூட தெரியாது, ஆனால் பள்ளி ஆண்டு விழாவின் போது குழந்தைகள் அவர்கள் அப்பா மற்றும் அம்மாவுடன் வருவார்கள்.
பிறந்தநாளுக்கு அப்பா அந்த கிப்ட் கொடுத்தார், இந்த கிப்ட் கொடுத்தார் என்று நண்பர்கள் கூறுவார்கள். இதனால் நான் என் அம்மாவிடம் நான் அப்பாவை பார்க்க வேண்டும் என்று கெஞ்சினேன், அப்பா ரெம்ப குடிப்பார் என்பதால், அவர் போட்டோவை கூட அவர் வைத்திருக்கவில்லை.
அதன் பின் தொடர்ந்து கெஞ்சிய போது அவர் அப்பாவின் பழைய வரைந்த புகைப்படத்தை காட்டினார், அதன் ஒரு பகுதி வழியாக சென்ற போது அது தான் அப்பாவின் கல்லறை என்று கூறினார். நான் என் அப்பாவை பார்க்க வேண்டும், அவர் இருந்தால் நான் இவ்வளவு கஷ்டப்பட்டிருக்கமாட்டேன் என்று கண்கலங்க, போட்டியாளர்கள் அவரை கட்டியணைத்து ஆறுதல் கூறினர்.