நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார். இவர் மும்பையை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமன்னா அங்கு தான் பிறந்து வளர்ந்தார்.
தற்போது தமன்னா மும்பையில் ஒரு புதிய வீடு வாங்கியுள்ளாராம். அதற்காக அவர் செலவிட்ட தொகை பற்றி அறிந்தால் உங்களுக்கு தலைசுற்றிப்போகும். கடற்கரைக்கு மிக அருகில் இருக்கும் இடம் என்பதால் அவர் இரண்டு மடங்கு பணம் கொடுத்து வாங்கியுள்ளார்
Versova-Juhu லிங்க் ரோட்டில் Bayview என்ற அபார்ட்மெண்டில் 14வது தளத்தில் தான் தமன்னா வீடு வாங்கியுள்ளார். ஒரு சதுர அடிக்கு 80,778 ருபாய் அவர் கொடுத்துள்ளார். மொத்தம் 16.6 கோடி ருபாய் தமன்னா பில்டருக்கு கொடுத்துள்ளார். அதோடு ஒரு கோடி ருபாய் வரி மற்றும் பதிவு செய்வதற்கு செலவாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் பங்கேற்றவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. அவர் அந்த நிகழ்ச்சியில் செய்த சில விஷயங்கள் சர்ச்சையாகி கடும் விமர்சனத்திற்கு உள்ளனார்.
இந்நிலையில் தற்போது அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் லிப்கிஸ் பற்றி பேசியுள்ளார் அவர். “லிப்கிஸ் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. நான் ரொம்ப ரொமான்டிக் பெர்சன்.
நீங்கள் எது கொடுத்தாலும் இரண்டு மடங்காக திருப்பி கொடுத்துவிடுவேன்” என கூறியுள்ளார். மேலும் நடிகர் சிம்பு மீது தனக்கு க்ரஷ் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் அவர்.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது நேற்று ஆரம்பமாகியுள்ளது. நேற்று இரவு 8 மணி முதல் முதல் நாள் காட்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
நேற்று போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் வீட்டுக்குள் உள்நுழைந்தனர். போட்டியாளர்கள் விவரம் பற்றி லைவ் அப்டேட்ஸ் இதோ..
1. பாத்திமா பாபு (செய்தி வாசிப்பாளர்) : பிக்பாஸ் வீட்டின் முதல் போட்டியாளராக பாத்திமா பாபு களமிறங்கி உள்ளார். செய்தி வாசிப்பாளர் மற்றும் சின்னத்திரைகளில் இவர் நடித்து பிரபலமானவர்.
2. லோஸ்லியா (செய்தி வாசிப்பாளர்) : 2-வது போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் லொஸ்லியா சென்றுள்ளார். இலங்கையைச் சேர்ந்த இவர் செய்தி வாசிப்பாளராக இருந்து உள்ளார்.
3. சாக்ஷி அகர்வால் : 3-வது போட்டியாளராக காலா படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்து பிரபலமானவர் சாக்ஷி அகர்வால் இடம் பெற்றுள்ளார். விஸ்வாசம் படத்திலும் மருத்துவராக நடித்துள்ளார்.
4. ஜாங்கிரி மதுமிதா (காமெடி நடிகை) : பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் 4வது போட்டியாளராக நடிகை மதுமிதா பங்கேற்றுள்ளார். ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் ஜாங்கிரி என்ற காமெடி கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை மதுமிதா. அந்தப் படத்தை அடுத்து மிரட்டல், அட்டக்கத்தி, கண்பேசும் வார்த்தைகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்த அவர் விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு தங்கையாக நடித்திருந்தார். சினிமா மட்டுமின்றி சீரியல்களிலும் நடித்துவரும் மதுமிதாவுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். சமீபத்தில் இவருக்கு திருமணம் நடைபெற்றது.
5. கவின் (நடிகர்) : பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் முதல் ஆண் போட்டியாளராக கவின் பங்கேற்றுள்ளார். திருச்சியை சேர்ந்த இவர் சின்னத்திரை நடிகராக பிரபலமானவர். கனா கானும் காலங்கள், சரவணன் மீனாட்சி போன்ற தொடர்களில் நடித்துள்ளார்.
6. அபிராமி (நேர்கொண்ட பார்வை பட நடிகை) : பிக் பாஸ் 3வது சீசனில் 6வது போட்டியாளராக அபிராமி களமிறங்கி உள்ளார். பிரபல மாடலான இவர் பல விளம்பரங்களில் நடித்து உள்ளார். அஜித் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
7.சரவணன் (பருத்தி வீரன் சித்தப்பு) : 7வது போட்டியாளராக நடிகர் சரவணன் பிக்பாஸ் வீட்டில் நுழைந்துள்ளார். தமிழ் சினிமாவில் 20 படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடித்து உள்ளார். நீண்ட இடைவெளிக்கு பருத்தி வீரன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
8. வனிதா விஜயகுமார் (நடிகர் விஜயகுமாரின் மகள்) : 8வது போட்டியாளராக நடிகை வனிதா பிக்பாஸ் வீட்டில் நுழைந்துள்ளார். நடிகர் விஜயகுமாரின் மகள் இவர். தமிழில் சந்திரலேகா, மாணிக்கம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது இவருக்கு 2 மகள்கள் உள்ளனர்.
9.சேரன் (இயக்குனர்) : 9வது போட்டியாளராக இயக்கனரும், நடிகருமான சேரன் பிக்பாஸ் வீட்டில் நுழைந்துள்ளார். பாரதிகண்ணம்மா, பொற்காலம், ஆட்டோகிராப் உள்ளிட்ட படங்களை இயக்கிய சேரன் இறுதியாக திருமணம் என்ற படத்தை இயக்கியிருந்தார்.
10.ஷெரின் (துள்ளுவதோ இளமை, விசில் பட ஹீரோயின்) : 10வது போட்டியாளராக நடிகை ஷெரின் பிக்பாஸ் வீட்டில் நுழைந்துள்ளார். துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் ஷெரின். தொடர்ந்து விசில், நண்பேன்டா உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் சமீபகாலமாக படங்களில் நடிக்க வாய்ப்பில்லாமல் தவித்து வருகிறார்.
11.மோகன் வைத்தியா (பாடகர், வீணையாளர், நடிகர்) : 11வது போட்டியாளராக மோகன் வைத்யா பிக்பாஸ் வீட்டில் நுழைந்துள்ளார். கடந்த பிக்பாஸ் சீசனில் பங்கேற்ற ஆனந்த் வைத்தியநாதன் போல் இந்த முறை பாடகரும், நடிகருமான மோகன் வைத்யா பங்கேற்க உள்ளார்.
12. சாண்டி (டான்ஸ் மாஸ்டர்) : பிக்பாஸ் வீட்டில் அடுத்ததாக வருகைதந்துள்ள போட்டியாளர் நடன இயக்குநர் சாண்டி.
13.தர்ஷன் (மாடலிங், மிஸ்டர் ஸ்ரீலங்கன் டைட்டில் வின்னர்) பிக்பாஸ் வீட்டில் அடுத்ததாக வருகை தந்துள்ள போட்டியாளர் தர்ஷன். இவர் இலங்கைத் தமிழர்; மாடலிங் துறையில் உள்ளார்.
14.முகேன் ராவ் (பாடகர்) : பிக்பாஸ் வீட்டிற்குள் அடுத்த போட்டியாளர் மலேசிய தமிழரும், பாடகருமான முகென் ராவ் வருகை தந்துள்ளார்.
15.ரேஷ்மா (விமான பணிப்பெண், தொகுப்பாளனி, நடிகை) : பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ள பதினைந்தாவது போட்டியாளர் ரேஷ்மா. வேலைனு வந்துட்டா வெள்ளைகாரன் படத்தின் புஷ்பா என்ற கதாபாத்திரம் மூலம் பிரபலமானவர் நடிகை ரேஷ்மா.
நடிகர் விஷால் பெண் ஒருவரின் வீட்டுக்குள் இரவில் சுவர் ஏறி குதித்து சென்றார் என அவதூறு பரப்பிய பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர்.
தமிழில் வெளியான மணிரத்னம் இயக்கிய அஞ்சலி திரைப்படத்தில் நடித்தவர் காயத்ரி சாய். சென்னையில் குடியிருக்கும் இவருக்கு 16 வயதில் மகள் உள்ளார்.
இந்நிலையில் ’கொங்கு நாட்டு இளவரசி’ என்ற பெயரில் பேஸ்புக்கில் கணக்கு வைத்திருக்கும் விஷ்வதர்ஷினி என்ற பெண் காயத்ரியுடன் நட்பானார். பின்னர் ஒரு நாள் காயத்ரி வீட்டுக்கு சென்ற விஷ்வதர்ஷினி அவரிடம் அவசரமாக ரூ 20,000 கடன் கேட்ட நிலையில் காயத்ரியும் கொடுத்தார்.
இதன்பின்னர் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் விஷ்வதர்ஷினி தனது பேஸ்புக்கில் காயத்ரி மற்றும் அவர் மகள் குறித்து அவதூறு பரப்பினார். மேலும் நடிகர் விஷால், காயத்ரி வீட்டின் சுவர் ஏறிக் குதித்து இரவில் சென்றதாகவும் பதிவிட்டு அதிரவைத்தார்.
இது தொடர்பாக காயத்ரி கடந்தாண்டு நவம்பர் மாதம் பொலிசில் புகார் அளித்த நிலையில் பொலிசார் விஷ்வதர்ஷினி மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த அவர் சில மாதங்கள் கழித்து நேற்று கைது செய்யப்பட்டார்.
இது குறித்து காயத்ரி கூறுகையில், இந்த வழக்கு தொடர்பாக எனக்கு நீதி கிடைத்துள்ளது. விரைவில் விஷ்வதர்ஷினிக்கு தண்டனை கிடைக்க வேண்டும். விஷ்வதர்ஷினியைக் கைது செய்த சென்னை போலீஸ் ஆணையருக்கு நன்றி. விஷால் எனக்கு சிறு வயது முதலே நன்றாகத் தெரியும். என் வீட்டுக்கு வருவார், அவர் ஏன் சுவர் ஏறி குதித்து வரவேண்டும் என கூறியுள்ளார்.
மகளை பராமரிப்பது தொடர்பான வழக்கில் நடிகை வனிதா விஜயகுமார் நீதிமன்றத்தில் ஆஜர் ஆன நிலையில் அது தொடர்பில் பேட்டியளித்துள்ளார். நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமார் தொடர்ந்து எதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி வருகிறார்.
விஜயகுமாருக்கு சொந்தமான வீட்டில் அத்துமீறி நுழைந்ததாக அவர் மீது ஏற்கனவே வழக்கு உள்ளது. இந்நிலையில் ஐதராபாத்தை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவரை கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு வனிதா திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு 10 வயதில் மகள் உள்ளார். இந்த நிலையில் கணவன்- மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியாக பிரிந்து வசித்து வருகின்றனர்.
ஆனந்தராஜ் மகளை தன்னுடன் ஐதராபாத்திற்கு அழைத்து சென்று வளர்த்து வந்தார். கடந்த 2012-ம் ஆண்டு வனிதா விஜயகுமார் ஐதராபாத் சென்று தன்னுடைய மகளை தன்னுடன் சென்னைக்கு அழைத்து வந்துவிட்டார்.
இதை அறிந்த ஆனந்தராஜ் தன்னுடைய மகளை வனிதா விஜயகுமார் கடத்தி சென்று விட்டதாக ஐதராபாத் பொலிசில் புகார் செய்தார்.
அதைத் தொடர்ந்து வனிதா திருவள்ளூர் நீதிமன்றத்தில் தன்னுடைய மகளுக்கு தான்தான் பாதுகாப்பு அளிப்பதாக கூறி தன் கணவரிடம் குழந்தையை ஒப்படைக்க மறுப்பு தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து நேற்று இந்த வழக்கு விசாரணைக்காக நடிகை வனிதா திருவள்ளூரில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்.
விசாரணைக்காக அவரது கணவர் வராததால் தீர்ப்பு எதுவும் வழங்கப்படவில்லை.பின்னர் வெளியே வந்த வனிதா நிருபர்களிடம் கூறுகையில், என்னுடைய மகளை நானே என் முழு பராமரிப்பில் வைத்து கொள்ளவேண்டும் என நீதிமன்றத்தில் முறையிட்டேன், நல்ல தீர்ப்பு வரும் என நம்புகிறேன் என கூறியுள்ளார்.
நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் ஒர்க்அவுட் செய்ய ஜிம்மிற்கு செல்லும்போது ரொம்ப குட்டியான ஷார்ட்ஸ் அணிந்து செல்வது வழக்கமானது.
அதை ரசிகர்கள் பலர் விமர்சித்துள்ள நிலையில் பாலிவுட்டின் முன்னணி நடிகை கத்ரீனா கைஃப் தூபியா நடத்தி வரும் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கிண்டலாக விமர்சித்துள்ளார்.
அந்நிகழ்ச்சியில் பிரபலங்கள் ஜிம்முக்கு ஒர்க்அவுட் செல்வது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ஜான்வி கபூர் அணிந்து வரும் ரொம்ப, ரொம்ப குட்டியான ஷார்ட்ஸை பார்த்து தான் கவலையாக உள்ளது.
அவர் நான் போகும் ஜிம்முக்கும் வருகிறார். அடிக்கடி சேர்ந்து ஒர்க்அவுட் செய்கிறோம். ஜான்வி பற்றி சில நேரம் கவலையாக இருக்கும் என்று கூறினார்.
நடிகர் அமலா பாலுக்கு தற்போது மிககுறைந்த பட வாய்ப்புகளே வருகின்றன. ஆடை, அதோ அந்த பறவை போல என இரண்டு தமிழ்ப்படங்கள் மட்டுமே கைவசம் உள்ளது. ரத்னகுமார் இயக்கிய ஆடை படத்தின் சென்சார் நேற்று முடிந்தது. படத்தை பார்த்த சென்சார் போர்டு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் அமலா பால் ஆடை இல்லாமல் உடலில் டேப் மட்டும் சுற்றி நடித்திருந்த காட்சி இருந்தது உங்களுக்கு நினைவிருக்கும். அது ஒன்றிற்காகவே அடல்ட் ஒன்லி சான்றிதழ் கொடுக்கப்பட்டிருக்கலாம்.
மேலும் அமலா பால் படம் முழுவதும் கவர்ச்சியாகவே தான் வருகிறார் என்றும் கூறப்படுகிறது.
ஹாப்பி வெட்டிங், மேட்ச் பாக்ஸ் போன்ற மலையாள படங்களில் நடித்தவர் நடிகை திரிஷ்யா ரகுநாத். சமீபத்தில் தண்ணீரில் இருப்பது போல் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார்.
அதைப்பார்த்த ஒருவர், இப்படி கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிட்டு ஏன் உங்களது இமேஜை கெடுத்துக் கொள்கிறீர்கள், ஒரு சகோதரனின் அட்வைஸ் என கூறியிருந்தார்.
அதற்கு நடிகை, புகைப்படத்தில் எல்லாவற்றையும் முடிந்தவரை மூடிக்கொண்டு தான் இருக்கிறேன். குறிப்பாக மார்பகத்தையும் மூடிதான் உள்ளேன், அதை வெட்டி எறிய முடியாது. எனக்கு அட்வைஸ் செய்வதற்கு பதில் நீங்கள் பார்க்கும விதத்தை மாற்றிக் கொள்ளுங்கள் என பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் போல் தெலுங்கு சினிமாவில் எஸ்.எஸ்.ராஜமௌலி உள்ளார். அவர் இயக்கிய நான் ஈ, பாகுபலி போன்ற படங்கள் எல்லாம் பெரிய அளவில் வெற்றிகண்ட படங்கள்.
இப்போது அவர் அங்கு முன்னணி நடிகர்களான ராம் சரண் மற்றும் ஜுனியர் என்.டி.ஆரை வைத்து ஒரு பெரிய பட்ஜெட் படம் இயக்கி வருகிறார், தற்போது அப்படத்தை RRR என்று ரசிகர்கள் அழைத்து வருகின்றனர்.
இதில் என்.டி.ஆருக்கு ஜோடியாக வெளிநாட்டு நடிகை எட்கர் ஜோன்ஸ் நடிப்பதாக இருந்து பின் அவர் திடீரென விலகினார்.
அந்த வேடத்தில் பாலிவுட் நடிகைகளான ஷ்ரத்தா கபூர் அல்லது பரிணீதி சோப்ராவை நடிக்க வைக்க படக்குழு பார்த்தனர்.
இந்த நேரத்தில் படக்குழு நடிகை சாய் பல்லவியை அந்த வேடத்தில் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறுகின்றனர்.
பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை சுஜா வருணி. தமிழில் சில படங்களில் நடித்தவருக்கு வாய்ப்புகள் பெருமளவில் அமையவில்லை.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவர் நீண்ட நாட்களாக தான் காதலித்து வந்த நடிகரும் தயாரிப்பாளருமான சிவக்குமாரை திருமணம் செய்து கொண்டார்.
தற்போது அவர் கர்ப்பமாக இருக்கிறார். அண்மையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சக நண்பரான கணேஷ் தன் மனைவி நிஷாவுடன் சுஜாவுக்கு ஹோட்டலில் விருந்து வைத்துள்ளார்.
அண்மையில் Get Together சந்திப்பில் டிவி சானல் பிரபலம் அஞ்சனா, இயக்குனர் அட்லீ மனைவி பிரியா, ஜி.வி.பிரகாஷ் மனைவி சைந்தவி ஆகியோர் இணைந்துள்ளனர். இதில் சுஜாவும் கலந்துகொண்டார்.
தன் தாய்மையை அழகாக வெளிப்படுத்தும் விதமாக அவரை அவரின் கணவர் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.