குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நுழைந்து பின் நடிகையாக வலம் வந்தவர் மோனிகா. அழகி, பகவதி, சண்டக்கோழி போன்ற படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
இவர் திருமணத்திற்காக தன் நிஜ பெயரான மாருதி ராஜ் என்பதை மோனிகா என்று மாற்றினார். கிடந்த 2014ம் ஆண்டு இந்துவாக இருந்த இவர் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்.
பின் 2015ம் ஆண்டு மாலிக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமா பக்கம் தலைகாட்டாமல் இருக்கும் நடிகைகள் போல் இவரும் இப்போது எங்கே என்ன செய்கிறார் என்பது தெரியவில்லை. சமூக வலைதளங்களில் கூட ஒரு அப்டேட்டும் அவரை பற்றி இல்லை.
நடிகர் விஜய்யின் சச்சின், ஜெயம் ரவி நடித்த சந்தோஷ் சுப்ரமணியம் உள்ளிட்ட பல படங்களில் செம ஜாலியான ஹீரோயினாக நடித்து தமிழ் ரசிகர்களை ஈர்த்தவர் நடிகை ஜெனிலியா.
அவர் தற்போது ட்விட்டரில் நடிகர் ஜெயம் ரவியின் கோமாளி பட போஸ்ட்டரை பார்த்துவிட்டு ‘என்ன இது ஜெயம் ரவி. உனக்கே வயசே ஆகாதா? மீண்டும் டீன் ஏஜ் பையன் போலவே இருக்க..” என்று பதிவிட்டுள்ளார்.
கோமாளி படத்தில் ஜெயம்ரவி பள்ளிக்கூட மாணவர் போல இருக்கும் 9வது போஸ்டர் வெளியிடப்பட்டது. அதற்கு தான் ஜெனிலியா இப்படி
பிரபல திரைப்பட நடிகையான ரோஜாவுடன் பூசாரி எடுத்த செல்பி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், சிலர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஆந்திராவில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரும் திரைப்பட நடிகையுமான ரோஜா வெற்றி பெற்ற நிலையில், அவர் தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் காங்கேயம் பகுதியில் இருக்கும் சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்துள்ளார்.
இந்த கோவில் மிகவும் பிரபலமான ஒன்று, இந்த கோவிலுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாநிலங்களிலிருந்தும் அரசியல் பிரமுகர்கள் முதல் சினிமா நட்சத்திரங்கள் வரை வருகை புரிந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
அந்தவகையில் நடிகை ரோஜா சிவன்மலை கோவிலுக்கு வந்த போது அறநிலையத்துறை ஊழியர் ஒருவர் செல்பி எடுத்துள்ளார்.
அப்போது அவர், தன்னுடைய பணியை மறந்து கொடிமரம் பகுதியில் ராஜகோபுரம் நுழைவாயிலை அடைத்து நின்றபடி செல்பி எடுத்ததால், அங்கிருந்த பக்தர்கள் எரிச்சலடைத்ததாக கூறி பிரச்சனை கிளம்பியுள்ளது.
தற்போது இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருவதால், பலரும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர்கள் செந்தில்-ராஜலட்சுமி. இவர்கள் பாடும் பாடல்கள் எல்லாம் மக்களுக்கு பிடித்திருந்தது.
மேடை நிகழ்ச்சிகளை தொடர்ந்து இப்போது அதிக படங்களில் பாட ஆரம்பித்துவிட்டார்கள். சமீபத்தில் நாட்டுப்புற பாடல்களுக்கு ஒரு பெரிய அங்கீகாரம் கொடுத்த புஷ்பவனம் குப்புசாமி, நாங்கள் உயர்ந்த நிலைக்குக் கொண்டு சென்ற மக்கள் இசையை சிலர் தவறான வழியில் கொண்டு செல்கிறார்கள் என்று சிலரை குறிப்பிட்டு கூறியிருந்தார்.
இதுகுறித்து செந்தில்-ராஜலட்சுமி ஒரு பேட்டியில், மூத்த கலைஞராக நாட்டுப்புற கலைக்கு அவருடைய பங்கு மிக முக்கியமானது. நாட்டுப்புற இசை வெறும் இசை மட்டும் இல்லை, அது சாதி அரசியலைப் பேசக்கூடிய ஒரு கலை. குழந்தைகள், பெண்கள் என எங்களது பாடல்களை கேட்கிறார்கள் அதற்கு ஏற்றர் போல் தான் யோசித்து பாடுகிறோம்.
முந்தைய காலத்தில் வேலை செய்யும் கலைப்பு தெரியக் கூடாது என்பதற்காக ஆடி, பாடுவார்கள். இதை நான்தான் உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றேன் என்று யாருமே சொல்ல முடியாது. ஒரே இடத்தில் உட்கார்த்து இருந்துகொண்டே பாடுவதையும் நாட்டுப்புற கலை என்று சொல்வதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியிருக்கிறார்.
அதைப் பார்த்த ரசிகர்கள் மிகவும் திமீராக பேசுகிறார், சரியில்லை இவர்கள் என மோசமாக அந்த பேட்டி குறித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
நடிகை எமி ஜாக்சன் தமிழில் சில படங்களே நடித்தாலும் பெரிய பட்ஜெட் படங்களாக தான் நடித்துள்ளார். வெளிநாட்டு முகம் என்பதாலேயே அவரை படங்களில் கமிட் செய்தவர்கள் உள்ளார்கள். சினிமா பக்கம் கடந்த சில வருடங்களாக காணாமல் இருந்த அவர் தற்போது கர்ப்பமாகியுள்ளார்.
சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதை உறுதிப்படுத்த மோசமான உடை அணிந்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார் எமி ஜாக்சன். அதில், நான் கருத்தரித்து 22 வாரங்கள் ஆகிவிட்டது. அதை உறுதிபடுத்தும் விதமாக இந்த வீடியோவை வெளியிடுகிறேன்.
இவ்வளவு நாட்கள் இது பற்றி உங்களிடம் பேச வேண்டும் என எனக்குத் தோன்றவில்லை. ஆனால், இனி தொடர்ந்து இதுபோன்ற கர்ப்பகால வீடியோக்களை பதிவேற்றுவேன் என்று கூறியுள்ளார். அந்த வீடியோ அவரது இன்ஸ்டா பக்கத்தில் Pregnancy என்ற பெயரில் உள்ளது.
இருட்டு அறையில் முரட்டு குத்து மற்றும் பிக்பாஸ் புகழ் நடிகை யாஷிகா ஆனந்த் தற்சமயம் கைவசம் பல படங்கள் வைத்துள்ளார். அதில் பிசியாக தற்போது நடித்துவருகிறார்.
இந்நிலையில் அவர் தன் சொந்த வாழ்க்கை பற்றி தற்போது பேசியுள்ளார். நான் இன்னும் சிங்கிள் தான் என கூறியுள்ள அவர், தற்போது தெலுங்கு நடிகர் விஜய் தேவர்கொண்டாவை திருமணம் செய்ய ஆசை என கூறியுள்ளார்.
”ஆனால் சின்ன வயதில் நடிகர் சூர்யாவை திருமணம் செய்ய் ஆசை இருந்தது. தற்போது அவர் மீது அதிக மரியாதை உள்ளது” என அவர் மேலும் பேசியுள்ளார்.
யாஷிகா ஆனந்த் இப்படி ஓப்பனாக கூறியிருப்பது ரசிகர்களுக்கு ஆச்சர்யம் ஏற்படுத்தியுள்ளது. மேலும் பாய் பிரென்ட் உடன் திருமணம் முடிந்த பிறகு சுவிட்சர்லாந்துக்கு செல்ல வேண்டும் என ஆசை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அண்மைகாலமாக சினிமாவில் Me Tooல் தாங்கள் சந்தித்த பாலியல் தொந்தரவுகளை புகார்களாக வெளியிட்டு அதிர்ச்சியை எற்படுத்தினர். இந்நிலையில் மும்பையை சேர்ந்த 45 வயது நடிகர் தீபக் ஜெயின் தற்போது சிக்கியுள்ளார். சினிமாவில் காஸ்டிங் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார்.
இந்நிலையில் அவர் தன் காதலியை தாக்கியதாக வந்த புகாரால் அவரை போலிசார் கைது செய்துள்ளனர். கடந்த வெள்ளியன்று தீபக் ஜெயின் என்பவர் ஜாக்கேஸ்வரி ஹோட்டலில் வைத்து கைது செய்யப்பட்டார்.
விசாரணையில் “சில நாட்களுக்கு முன் இளம் பெண்(25) வேலை தேடி ஹரியானாவிலிருந்து மும்பை வந்துள்ளார். அங்கு அவருக்கு அவர் ஒரு புகழ்பெற்ற தொலைக்காட்சியின் நடிகை ஒருவரின் அறிமுகம் கிடைத்துள்ளது. அவர் அந்த பெண்ணை தன் நண்பர் ஜெயினுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.
பின் அந்த பெண்ணும் ஜெயினும் தொடர்பில் இருந்துள்ளனர். பின்னர் அந்த பெண் வேறொருவருடன் காதலில் இருப்பதாக சந்தேகப்பட்ட ஜெயின் அவரை துஷ்பிரயோகம் செய்து தாக்குதல் நடத்தியுள்ளார். இருப்பினும் தன் வழிக்கு வந்துவிடுமாறு அவர் வற்புறுத்த அந்த பெண் தொடர்ந்து மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த இயக்குனர் அந்த பெண்ணின் உடையில்லா புகைப்படங்களை அவளின் உறவினர்களுக்கு அனுப்பி சமாதானத்திற்கு கூப்பிட்டுள்ளனர். இந்த விசயத்தை உறவினர்கள் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணிடம் கூற பின் அவள் போலிசில் புகார் அளிக்க தீபக் கைது செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
நடிகை சாய் பல்லவி செல்வராகவன் இயக்கத்தில் NGK படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடித்த அனுபவம் பற்றி ஒரு பேட்டியில் அவர் பகிர்ந்துள்ளார்.
செல்வராகவன் ரொம்ப ஸ்ட்ரிக்ட் என கூறியுள்ள அவர், விரும்பும் ரிசல்ட் வரும்வரை மீண்டும் மீண்டும் எடுப்பார். ஒரு நாள் அப்படி காலை முதல் மாலை வரை அவர் எதிர்பார்த்த நடிப்பு என்னிடம் வரவில்லை, நாளை பாப்போம் என கூறிவிட்டார்.
நான் வீட்டிற்க்கு சென்று அம்மாவிடம் கதறி அழுதேன். எனக்கு நடிப்பு வரவில்லை, டாக்டர் வேலைக்கே சென்று விடுகிறேன் என கூறினேன்.
இரவு முழுவதும் அழுதுவிட்டு மறுநாள் காலை முதல் ஷாட்டிலேயே செல்வராகவன் ஓகே செய்தார். ‘அம்மா போன் செய்தார்களா?’ என் கேட்டேன். ‘இல்லை, நான் கேட்டது இப்போது கிடைத்தது’ என பதில் அளித்தாராம் செல்வராகவன்.
தமிழ் மற்றும் மலையாள படங்களில் ஹீரோயினாக நடித்து வருபவர் நடிகை மியா ஜார்ஜ். சின்னத்திரையில் பிரபலமாகி அதன் மூலம் சினிமாவுக்கு அறிமுகம் ஆனவர் அவர்.
இந்நிலையில் அவரது பெயர் கொண்ட ஒரு சமூக வலைதள பக்கத்தில் மியா ஒரு படம் இயக்கப்போகிறார் என்றும், அதற்காக நடிகர்கள் தேர்வு நடைபெறுகிறது என்றும் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. மேலும் மியாவுடன் சேட் செய்த ஸ்கீரீன்ஷாட்களும் வெளியானது.
இதை பார்த்து அதிர்ச்சியான நடிகை, “என்னுடைய பெயரில் போலி கணக்கு துவங்கி யாரோ தவறாக மோசடி செய்து வருகின்றனர். இதை யாரும் நம்ப வேண்டாம். நான் யாருடனும் சேட் செய்வதில்லை” என விளக்கம் கொடுத்துள்ளார்.
பிக்பாஸ் சீசன் 3 வரும் ஜுன் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மூன்றாவது முறையாக மீண்டும் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியே.
அண்மையில் இதில் கலந்துகொள்ளப்போகிறவர்கள் என சில பிரபலங்களின் பெயர்களும் வந்தது. இதில் ஆண் பெண் குரலில் பாடி அசத்தும் சாக்ஷியின் பெயரும் இருந்தது.
ஆனால் அது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சி மீது சில எதிர்மறை விமர்சனங்கள் வைக்கப்பட்டு வந்தாலும் எதையாவது செய்து பரபரப்பை கூட்டி TRPல் இடம் பிடித்து விடுகிறார்கள்.
இதற்கிடையில் LGBTQ சமூகத்தை சேர்ந்தவர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என கூறியுள்ளார். இந்த ஐடியாவை கொண்டு தான் சாக்ஷி பெயரும் சொல்லப்பட்டதாம்.
தற்போது இந்த LGBTQ சமூகத்தில் இருந்து தர்மதுரை பட திருநங்கை ஜீவா சுப்ரமணியம், அருவி பட திருநங்கை எமிலி, சமூக ஊடகவியலாளர், சாஃப்ட்வேர் இன்ஜினியர் திருநங்கை கல்கியின் பெயரும் இடம் பெற்றுள்ளதாம்.