அடையாளம் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு வேறொருவராக மாறிய நடிகை நிக்கி கல்ராணி : இதோ பாருங்க!!

மலையாளம், கன்னடம் பிறகு தமிழ் என தனது சினிமா பயணத்தில் கலக்கி வருபவர் நடிகை நிக்கி கல்ராணி. தமிழில் இளம் நடிகர்களுடன் நடித்து தனக்கென்று ஒரு இடத்தையும் பிடித்துவிட்டார்.

படங்களை தாண்டி நிறைய நிகழ்ச்சிகள் கலந்துகொள்வது, விருது விழா செல்வது, போட்டோ ஷுட் என எப்போதும் பிஸியாக இருப்பார்.

அண்மையில் இவர் ஒரு போட்டோ ஷுட் நடத்தியுள்ளார், அதைப்பார்த்த ரசிகர்கள் நிக்கி கல்ராணியா இது என ஆச்சரியமாக பார்க்கின்றனர்.

உறுதியானது சிம்புவின் திருமணம்… அதுவும் விஷால் திருமணத்திற்கு முன்னரேவாம்… மணப்பெண் யார் தெரியுமா?

சமீபத்தில் சிம்புவின் தம்பிக்கும் திருமணம் முடிந்துவிட்டது. இதனால் திரையுலகிலும், உறவினர்கள் மத்தியிலும் சிம்புவின் திருமணம் எப்போது எனும் கேள்வி அதிகம் கேட்கப்படுகிறது.

ஒரு மாதத்துக்கு முன்னர் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, சிம்பு திருமணம் பற்றிய கேள்விக்கு பதில் அளித்த அவரது தந்தை டி.ராஜேந்தர், “அவர் தன்னுடன் நடித்தவரை அல்ல, பிடித்தவரை திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்திருக்கிறார்”, என கூறியிருந்தார்.

இதன் மூலம் சிம்புவுக்கு வீட்டில் பெண் பார்த்து வருவது உறுதியானது. இதனால் எப்போது வேண்டுமானாலும் சிம்புவின் திருமணம் குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில், சிம்புவின் திருமணம் குறித்து புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது அதாவது, தனது உறவுக்காரப் பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் ஆகஸ்ட் மாதம் சிம்பு திருமணம் நடக்கும் எனவும் கூறப்படுகிறது.

விஷால் திருமணத்திற்கு முன்னதாகவே சிம்புவின் திருமணம் நடைபெறும் என அவருக்கு நெருங்கிய வட்டார தகவல்கள் கூறுகின்றன. விரைவில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வைரலாகும் பிக்பாஸ் யாஷிகாவின் ஜிம் ஒர்கவுட் வீடியோ : லட்சக்கணக்கில் லைக்ஸ்!!

இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தவர் யாஷிகா ஆனந்த். அவர் அதன்பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அதிகம் பிரபலமடைந்தார்.

தற்போது கைவசம் சில படங்கள் வைத்திருக்கும் யாஷிகா அதில் பிசியாக நடித்து வருகிறார். மேலும் பிட்டாக வைத்திருக்க ஜிம்மிற்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார் அவர்.

நேற்று அவர் ஜிம்மில் ஒர்கவுட் செய்யும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதற்கு ஒரே நாளில் ஒன்றரை லட்சம் லைக்குகள் குவிந்துள்ளது.

நான் பெண்களை தான் சைட் அடிப்பேன், ஏனென்றால் : சாய் பல்லவி ஓபன் டாக்!!

தென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் நாயகி. இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் கலக்கி வருகின்றார்.

இந்நிலையில் சாய் பல்லவி NGK படத்தின் ப்ரோமோஷனுக்காக சில சேனல்களுக்கு பேட்டியளித்து வருகின்றார்.

அதில் ஒரு பேட்டியில் ‘பார்த்தவுடன் காதலில் நம்பிக்கை இருக்கிறதா?’ என்று கேட்டனர், அதற்கு அவர் ‘அதில் பெரிதாக நம்பிக்கை இல்லை.

அதே நேரத்தில் ஆண்களை விட, பெண்களை தான் அதிகம் சைட் அடிப்பேன், அதாவது, அவர்கள் அணிந்திருக்கும் உடை விஷயத்தை பார்ப்பேன். வித்தியாச வித்தியாசமாக பெண்கள் உடை அணிந்திருப்பதை கவனிப்பேன்’ என்று கூறியுள்ளார்.

கோடி ரூபாய் கொடுத்தும் விளம்பரத்தில் நடிக்காததிற்கு என் தங்கை தான் காரணம் : உண்மையை உடைத்த சாய் பல்லவி!!

சாய் பல்லவி தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இவர் நடிக்கும் படங்கள் ரசிகர்களால் மிகவும் கவரப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சாய் பல்லவி சமீபத்தில் ஒரு பேஸ் க்ரீம் விளம்பரத்தில் நடிக்க கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தும் நடிக்க மறுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் ‘நான் என் தங்கையை விட நல்ல கலர், ஒரு சில நாட்கள் அவள் என்னுடன் கண்ணாடி பார்க்கும் போது என்னை விட அவர் கலர் கம்மி என்பதை உணர்ந்தாள்.

நானும் நிறைய வெஜிடேபுள் சாப்பிடு என்றேன், அதையும் அவள் செய்தால், அப்போது தான் தெரிந்தது கலர் என்பது ஒரு சிறு பிள்ளை மனதை எப்படி மாற்றுகிறது என, அதனாலேயே அதை ஊக்கப்படுத்துவது இல்லை’ என கூறியுள்ளார்.

30 ஆண்டுகளாக இளமை மாறாமல் ஜொலிக்கும் நடிகை : வைரலான அவரது புகைப்படம்!!

30 ஆண்டுகளாக வெள்ளித்திரையில் வலம் வரும் தைவான் நாட்டு நடிகை ஒருவரின் புகைப்படம் ஒன்று வைரலாகியுள்ளது. முப்பது ஆண்டுகளுக்கு முன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அறிமுகமானவர் Stephanie Siao.

அவரது ரசிகர்கள் பலர், முப்பது ஆண்டுகள் வெற்றிகரமான நடிகையாக ஆசிய வெள்ளித்திரையில் வலம் வந்தாலும் அவர் இளமையாகிக் கொண்டே போவதாக விமர்சிக்கிறார்கள்.

பிரபல நடிகைகளான Lucy Liu, Naomi Watts, Ashley Judd மற்றும் Kylie Minogue ஆகியோர் பிறந்த அதே 1968ஆம் ஆண்டில் New Taipei நகரில் பிறந்தவர் Siao. 20 வயதில் மொடலாக களமிறங்கிய Siao, 1989இல் ரொமாண்டிக் படம் ஒன்றில் கதாநாயகியாக அறிமுகமானார்.

பின்னர் வெள்ளித்திரையில் பிரபலமான Siao, தைவானின் மிக அழகான பெண் என அழைக்கப்படுகிறார். ஆகஸ்டில் 51 வயதை எட்ட இருக்கும் Siao, சமீபத்தில் சாதாரண உடையில் ஏர்போர்ட்டில் நடந்து செல்லும் படங்கள் வைரலாகியுள்ளன.

ஒரு ரசிகர், Siao பதின்ம வயது பெண்ணைப்போல் இருக்கிறார் என்று கூற, இன்னொருவர், அவர் இளமையாகிக் கொண்டே போகிறார் என்று கருத்து தெரிவிக்க, அந்த பக்கத்தை 310 மில்லியன் பார்வையாளர்கள் பார்வையிட்டார்கள்.

Siaoவின் அந்த படத்தைப் பார்த்து அதிர்ச்சியான ஒருவர், உண்மையாகவே அவருக்கு 51 வயதுதானா என்று கேட்க மற்றொருவர், 20 வயதுள்ள நிறைய ஆண்கள் அவரைப் பார்த்து மயங்கப் போகிறார்கள் என்கிறார்.

கணத்த இதயத்துடன் விடை கொடுத்த பிரபல நடிகை : பொது இடத்தில் கட்டிப்பிடித்து நெகிழ்ச்சி!!

நடிகை இலியானா விஜய் நடித்த நண்பன் அவருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர். ஹிந்தி சினிமாவின் பல படங்களில் நடித்து வந்தவர் டாப் ஹீரோயின்களில் ஒருவர்.

சமூகவலைதளத்தில் அதிகமாக தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர். அவர் கர்ப்பமாக இருக்கிறார் என் சில வதந்திகளும் வந்து மனம் நொந்துபோனார்.

தெலுங்கில் அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருவதால் சில காலம் அங்கேயே தங்கியிருந்தவர் மீண்டும் மும்பை திரும்பியுள்ளார். இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு சென்ற தன் கணவரை விமான நிலையத்தில் கட்டிப்பிடித்து வழியனுப்பி வைத்துள்ளார். அந்த நெகிழ்ச்சியான புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது.

தேர்தலில் படுதோல்வியடைந்த முதல்வரின் மகள் : அவருக்கு வாழ்த்து கூறிய பிரபல தமிழ்ப்பட நடிகர்!!

மக்களவை தேர்தலில் நிஜாமாபாத் தொகுதியில் அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் தோற்ற நிலையில் அவருக்கு நடிகர் ராகுல் தேவ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலில் நிஜாமாபாத் தொகுதியில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி சார்பாக போட்டியிட்டார்.

அவரை பா.ஜ.க வேட்பாளர் அர்விந்த் தர்மபுரி 70,000-க்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

இதையடுத்து கவிதா தனது டிவிட்டர் பக்கத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளாக நிஜாமாபாத் தொகுதிக்கு சேவையளிக்க எனக்கு வாய்ப்பளித்த மக்களுக்கு நன்றி, இந்த முறை தேர்தலில் வெற்றி பெற்ற அரவிந்துக்கு வாழ்த்துக்கள் என கூறியிருந்தார்.

இதற்கு பதில் பதிவு செய்த வேதாளம், மழை, பரசுராம் போன்ற திரைப்படங்களில் நடித்த நடிகர் ராகுல் தேவ், என்னுடைய வாழ்த்துக்கள் மற்றும் இதற்கு நீங்கள் தகுதியானவர் தான் என குறிப்பிட்டார்.

தோல்வியடைந்த கவிதாவுக்கு ராகுல் வாழ்த்து கூறியதையடுத்து ஏன் இவ்வாறு கூறினீர்கள் என டுவிட்டரில் பலரும் அவரிடம் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

தேர்தல் முடிவுகள் வரும் நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை குஷ்பு!!

தேர்தல் முடிவுகள் வரும் நேரத்தில் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நடிகையும், காங்கிரஸ் கட்சி பிரமுகருமான குஷ்பு தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19ஆம் திகதி முடிந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தேர்தல் தொடர்பாக தனது கருத்துக்களை தொடர்ந்து கூறி வந்த நடிகையும், காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளருமான குஷ்பு டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் தொடர்பான தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்க முடியாது. நாம் ஒரு திட்டம் போட்டால் இயற்கை அதை கலைத்து விடுகிறது என வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.

தேர்தலில் சுயேச்சையாக நின்று முதல்வர் மகனையே ஜெயித்த பிரபல தமிழ்ப்பட நடிகை : குவியும் வாழ்த்துக்கள்!!

கர்நாடக மாநிலம் மண்டியா மக்களவை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட மறைந்த நடிகர் அம்பரிஷின் மனைவியான நடிகை சுமலதா அபார வெற்றி பெற்றுள்ளார்.

சுமலதா தமிழில் கழுகு, முரட்டுகாளை உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட மாநில முதல்வர் குமாரசாமியின் மகனான நிகில் கவுடாவை, சுமார் 90,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து மண்டியா மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.

முன்னதாக மக்களவை தேர்தல் தொகுதி ஒதுக்கீட்டின் போது மண்டியா தொகுதியை காங்கிரஸ் கூட்டணியில் உள்ள முதல்வர் குமாரசாமி கட்சியான ஜே.டி.எஸ். கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.

இதனால் அதிருப்தியடைந்த நடிகை சுமலாதாவிடம் வேறு தொகுதி ஒதுக்கி தருகிறோம் அதில் போட்டியிடுங்கள் என கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர்கள் கூறி பார்த்தனர். ஆனால் அதனை ஏற்காத அவர் மண்டியா தொகுதியில் சுயேச்சையாக களமிறங்கினார்.

இதனையடுத்து மண்டியா தொகுதியில் குமாரசாமியின் மகன் நிகில் களமிறக்கப்பட்டார். ஆனால் உள்ளூர் காங்கிரஸார் இதனை ரசிக்கவில்லை. தங்களது முழு ஆதரவையும் நடிகை சுமலதாவிற்கே மறைமுகமாக அளித்து வந்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த குமாரசாமி, ஒருகட்டத்தில் வாய்விட்டே புலம்பும் நிலைக்கு தள்ளப்பட்டார். இந்நிலையில் குமாரசாமி பயந்தது போலவே தற்போது மண்டியா மக்களவை தொகுதி தேர்தல் முடிவுகள் வந்துள்ளன.

வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதலே முன்னிலை வகித்த நடிகை சுமலதா, இறுதி சுற்றின் போது நிகில் கவுடாவை விட 90,000 வாக்குகள் அதிகம் பெற்று அபார வெற்றியை தன் வசமாக்கியுள்ளார்.

சுயேட்சையாக நின்று வெற்றி பெற்ற சுமலதாவுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.