இதை பார்த்ததில் இருந்து தூக்கமே வரவில்லை : சின்மயி!!

பாடகி சின்மயி மீடு புகார் கூறி பாலியல் தொல்லை கொடுத்தவர்களுக்கு எதிராக போராடி வருகிறார். மேலும் அவர் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டதால் அதற்காகவும் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில் சின்மயி சமீபத்தில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தை பார்த்து ட்விட்டரில் பிரமிப்புடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்ததில் இருந்து தூக்கமே வரவில்லை என கூறியுள்ள அவர் படத்தின் நடித்த விஜய் சேதுபதி, சமந்தா உட்பட அனைவரையும் புகழ்ந்து பேசியுள்ளார்.

மேலும் கள்ளக்காதல் வைத்துள்ள பெண்னாக நடித்ததற்காக சமந்தாவை சிலர் ட்ரோல் செய்வது பற்றியும் சின்மயி அதிர்ச்சி தெரிவித்துள்ளார். அதே ஒரு ஆண் நடிகர் படத்தில் கிஸ்/கள்ளக்காதல் வைத்திருந்தால் யாரும் விமர்சிப்பதில்லையே என்று சின்மயி கேள்வி கேட்டுள்ளார்.

கர்ப்பமாக இருப்பதே தெரியாமல் இருந்த நடிகை எமி ஜாக்சன்!!

லண்டன் நடிகை எமி ஜாக்சனுக்கும், லண்டன் தொழிலதிபர் ஜார்ஜ்க்கும் நிச்சயதார்த்தம் முடிந்திருந்த நிலையில் தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் எமி ஜாக்சன்.

திருமணம் செய்துகொள்ளாமல் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என விமர்சனங்கள் எழுந்தாலும் லண்டனை சேர்ந்த எமிக்கு இது பெரிதாக தெரியவில்லை.

இந்நிலையில் இதுகுறித்து பேட்டியளித்துள்ள எமி, நான் கர்ப்பமாக இருப்பது எனக்கே ஆறு வாரங்களுக்கு தெரியாது. தாமதமாக தெரிந்துகொண்ட பின்னர் அதற்கான சிகிச்சைகளை எடுத்து வருகிறேன்.

விரைவில் எனது காதலரை திருமணம் செய்துகொள்ளவிருக்கிறேன். நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. தற்போது உலகம் சுற்றும் நான் எனது குழந்தை பிறந்தபின்னர், குழந்தையுடன் சேர்ந்து உலகம் சுற்றுவேன் என கூறியுள்ளார்.

நடிகையை தவறாக தொட்ட நடிகை ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் : வைரல் வீடியோவால் சர்ச்சை!!

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர். அவர் படம் தயாரிப்பதில் மீண்டும் முழு மூச்சில் களமிறங்கியுள்ளார். அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை தயாரிக்கும் அவர், தலயின் அடுத்த படத்திற்கும் கால்ஷீட் வாங்கி வைத்துள்ளார்.

இதெல்லாம் ஒரு புறமிருக்க ஒரு புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார் போனி கபூர். ஒரு திருமண விழாவில் கலந்துகொண்ட அவர் பிரபல நடிகை ஊர்வசியை தகாத முறையில் தொட்டதாக கூறி ஒரு வீடியோ வைரலானது.

அந்த வீடியோ பார்த்துவிட்டு பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர். ஆனால் போனி கபூர் ஜென்டில்மேன், அவரை ட்ரோல் செய்யாதீர்கள், அவரை நான் ஆதரிக்கிறேன் என அந்த நடிகை ட்விட்டரில் பேசியுள்ளார்.

என் வாழ்க்கையை அழித்துவிட்டீர்கள் : தவறாக பரவிய விடியோவால் கதறி அழுத பிரபல நடிகை!!

டிவி நடிகை ரூஹி சைலேஸ்வர் சிங் என்பவர் சமீபத்தில் குடித்துவிட்டு காரை தாறுமாறாக ஓட்டி விபத்து ஏற்படுத்தியதோடு போலீஸ் ஒருவரையும் கன்னத்தில் அறைந்த வீடியோ வைரலாக பரவியது.

ஆனால் அது பற்றி மீடியாவில் செய்தி வெளியான போது அதில் வேறொரு நடிகை ருஹி சிங்கின் புகைப்படம் தவறாக பயன்படுத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

முன்னாள் மிஸ் இந்தியாவான ருஹி சிங் முன்னணி மீடியாக்களில் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளது. இதனால் என் நல்ல பெயரை முழுமையாக அழித்துவிட்டீர்கள் என கண்ணீருடன் பேசியுள்ளார் ருஹி சிங்.

“அந்த வீடியோவில் இருப்பது நான் அல்ல. என் புகழ் மற்றும் வாழ்க்கையை அளித்துவிட்டீர்கள். முன்னணி மீடியாக்கள் கூட எதையும் விசாரிக்காமல் என் புகைப்படத்தை பயன்படுத்தியுள்ளீர்கள்” என அவர் உருக்கமாக பேசியுள்ளார்.

இளம் பெண்ணை ஹீரோயினாக்குகிறேன் என பலமுறை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தயாரிப்பாளர்!!

இப்போது சினிமா மோகம் பலரையும் தொற்றிக்கொண்டுள்ளது. இதில் நடிக்க வாய்ப்பு தேடி பலரும் வருகிறார்கள். இதில் நடிகையாக வேண்டும் என நினைப்பவர்கள் சில பாலியல் ரீதியாக பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது. அண்மையில் பலரும் மீ டூவில் பாலியல் புகார் அளித்து வந்தனர்.

தற்போது தெலுங்கில் சினிமாவில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் கசிந்துள்ளனர். ஒருவர் தன்னை தயாரிப்பாளர் என 19 வயது பெண்ணிடம் அறிமுகப்படுத்தி 2016 ல் பட வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.

பின் போனில் தொடர்புகொண்டு அந்த பெண்ணிடம் பழகி தன் வீட்டு வரசொல்லி ஆடிசன் செய்கிறேன் என கூறியுள்ளார். பின்னர் அந்த தயாரிப்பாளர் அந்த பெண்ணை தன் காம இச்சைக்கு பயன்படுத்தியுள்ளார்.

பின் அந்த பெண்ணை நிர்வாணமாக புகைப்படம் எடுத்து அதை வைத்து பிளாக் மெயில் செய்து பல முறை தன் ஆசைக்கு இணங்க வைத்துள்ளான். இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண் தற்போது போலிசில் புகார் அளிக்க விசாரணையில் அவன் போலியான ஆசாமி என்பது தெரியவந்துள்ளது.

வைரலான நடிகை குஷ்புவின் கவர்ச்சி புகைப்படம் : ரசிகர் கேட்ட கேள்வி!!

நடிகையும், தேசிய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்புவின் கவர்ச்சியான புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலானதையடுத்து, அந்த புகைப்படம் குறித்து ரசிகர் எழுப்பிய கேள்விக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார் குஷ்பு.

அந்த புகைப்படத்தை பதிவிட்டு, இது என்ன உங்கள் தேனிலவின் போது எடுக்கப்பட்ட புகைப்படமா? அல்லது சுற்றுலாவுக்கு சென்றபோது எடுத்த புகைப்படமா என கேள்வி கேட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்துள்ள குஷ்பு, அது எனது தேனிலவு புகைப்படம் கிடையாது. எனது திரைப்படங்களில் நான் இதுபோன்ற ஆடையை அணிந்தது கிடையாது. இது மார்பிங் செய்யப்பட்ட புகைப்படம் என பதிலளித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தனது டுவிட்டர் பக்கத்தில் காங்கிரஸ் கட்சியின் பிரசாரம் மற்றும் செயல்பாடுகள் குறித்து பதிவிட்டு பரபரப்பாக செயல்பட்டு வரும் குஷ்பு, இதற்கு இடையிலும் ரசிகரின் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

பிக் பாஸ் ஜூலியால் பறிபோன வாய்ப்புகள் : போராடி ரீஎண்ட்ரி ஆகும் பிரபல சின்னதிரை நடிகை!!

சின்னத்திரை ரசிகர்களுக்கு பரிட்சயமான முகம் என்றாலும் சில காலமாக சீரியல்களில் வாய்ப்பு இல்லாமல் தவித்து வந்தார் நடிகை ஜூலி.

இவர் ஒரு முன்னணி தொலைக்காட்சியின் சீரியலில் நடித்துக்கொண்டிருக்கும்போதே மற்றொரு டிவியின் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றார். அதன் காரணமாக சீரியல்களில் இருந்து ஓரங்கட்டப்பட்டேன் என தெரிவித்துள்ளார் ஜூலி.

மேலும் பிக் பாஸ்’ ஜூலியால் தன் வாய்ப்புகள் பறிபோனதாக அவர் இதற்கு முன்பு குற்றம்சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு நீண்ட காலம் வீட்டில் இருந்த அவர் தற்போது பல டிவி சேனல்களுக்கு சென்று வாய்ப்பு கேட்டுள்ளார். அதன் காரணமாக தற்போது ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் ‘சத்யா’ சீரியலில் சித்தி ரோலில் நடிக்க வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது.

காஜல் அகர்வால் செய்த காரியத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!!

குயீன் படத்தின் தமிழ் ரீமேக்கான பாரீஸ் பாரீஸ் படத்தை பெரிதும் எதிர்பார்க்கிறார் காஜல் அகர்வால். அவர் தற்போது சீதா என்கிற தெலுங்கு படத்தில் வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் காஜல் ஒரு நல்ல காரியம் செய்துள்ளார். அது குறித்து அவர் கூறியதாவது, ஆந்திர மாநிலத்தில் உள்ள அரக்கு பகுதிக்கு நான் சென்றேன். அங்குள்ள ஆதிவாசி குழந்தைகள் படிக்க பள்ளிக்கூடம் இல்லாததை பார்த்தேன். அவர்களுக்கு பள்ளிக்கூடம் கட்ட பணம் கொடுத்தேன்.

என்னை பார்ப்பவர்கள் அனைவரும் திருமணம் எப்பொழுது என்று கேட்கிறார்கள். நான் தற்போது படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன்.

திருமணம் செய்ய முடிவு செய்யும்போது அது குறித்து நானே அறிவிப்பு வெளியிடுகிறேன். தற்போது பாரீஸ் பாரீஸ் பட ரிலீஸுக்காக காத்திருக்கிறேன் என்றார்.

திருமணத்திற்கு முன்பே நடிகை எமி ஜாக்சனுக்கு குழந்தை பிறக்க போகிறது : வைரலாகும் புகைப்படங்கள்!!

தமிழ் சினிமா நடிகைகளில் ஒருசிலர் ஆரம்பத்திலேயே பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெறுவர். அப்படி வெளிநாட்டில் பிறந்த எமி ஜாக்சன் இந்திய சினிமா படங்களில் கலக்கி இருக்கிறார்.

இவரது நடிப்பில் கடைசியாக ரஜினியின் 2.0 படம் வெளியாகி இருந்தது. இப்படத்தை பற்றி பேசாத நபரே இல்லை என்று கூறலாம். அண்மையில் George Panayiotou என்பவரை நிச்சயதார்த்தம் செய்த எமி ஜாக்சன் தற்போது கர்ப்பமாக உள்ளாராம்.

அவரே தன்னுடைய காதலனுடன் எடுத்த புகைப்படத்தை போட்டு தகவலை வெளியிட்டுள்ளார்.

ஐஸ்வர்யா ராயின் அழகின் ரகசியம் என்ன தெரியுமா?

தகுதியும் திறமையும் அழகாக சங்கமித்த நடிகை ஐஸ்வர்யா ராய். அழகி என்றவுடன் அனைவரும் உடனே சொல்லும் பெயர் ஐஸ்வர்யா ராய்.

உலக அழகி பட்டம் பெற்ற இவர், 45 வயதாகிவிட்டபோதிலும் இன்றும் இளமையுடன் இருக்கிறார்.

ஐஸ்வர்யா ராயின் அழகு ரகசியம் : ஐஸ்வர்யா ராய் பிங்க், பிரவுன் கலர் லிப்ஸ்டிக்குளை தனது சருமம் மற்றும் உடைக்கு ஏற்றது போலவும், கண்களுக்கும் போடுவாராம்.

சருமத்திற்காக வெள்ளரிக்காய், கடலை மாவு, பால் மற்றும் மஞ்சள் கலந்து மாஸ்க்கையும், தலைமுடியின் ஆரோக்கியத்திற்காக யோகர்ட்டை பயன்படுத்துவதுடன் அடிக்கடி தனது முகத்தை சுத்தமான நீரில் கழுவிக் கொள்வாராம்.

ஆயுர்வேதப் பொருட்களை மட்டுமே உபயோகிப்பார். வீட்டு சமையல் பொருட்களையே மேனி பராமரிப்புக்கும் பயன்படுத்துவார். இரவு உறங்கச் செல்லும் முன் மேக்கப் கலைக்க ஐஸ்வர்யா பயன்படுத்துவது சுத்தமான பசும் பால்.

ஐஸ்வர்யா ராயின் உணவு ரகசியம் : ஐஸ்வர்யா ராய் தனது உணவில் வேகவைத்த உணவுகள், நார்சத்து மிகுந்த உணவுகள் ஆகிய உணவுகளை சாப்பிடுவாராம்.

அதிலும் பச்சைக் காய்கறிகள், பழங்களை அதிகமாக அடிக்கடி எடுத்துக் கொள்வதுடன், வீட்டில் சமைக்கப்பட்ட உணவுகளை அதிகம் விரும்பி சாப்பிடுவாராம்.

மேலும் இவர் உடலையும் மனதையும் சீரான முறையில் பராமரிக்க, தினமும் தவறாமல் யோகா செய்து வருகிறார்.