திருமணத்திற்கு முன்பே நடிகை எமி ஜாக்சனுக்கு குழந்தை பிறக்க போகிறது : வைரலாகும் புகைப்படங்கள்!!

தமிழ் சினிமா நடிகைகளில் ஒருசிலர் ஆரம்பத்திலேயே பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெறுவர். அப்படி வெளிநாட்டில் பிறந்த எமி ஜாக்சன் இந்திய சினிமா படங்களில் கலக்கி இருக்கிறார்.

இவரது நடிப்பில் கடைசியாக ரஜினியின் 2.0 படம் வெளியாகி இருந்தது. இப்படத்தை பற்றி பேசாத நபரே இல்லை என்று கூறலாம். அண்மையில் George Panayiotou என்பவரை நிச்சயதார்த்தம் செய்த எமி ஜாக்சன் தற்போது கர்ப்பமாக உள்ளாராம்.

அவரே தன்னுடைய காதலனுடன் எடுத்த புகைப்படத்தை போட்டு தகவலை வெளியிட்டுள்ளார்.

ஐஸ்வர்யா ராயின் அழகின் ரகசியம் என்ன தெரியுமா?

தகுதியும் திறமையும் அழகாக சங்கமித்த நடிகை ஐஸ்வர்யா ராய். அழகி என்றவுடன் அனைவரும் உடனே சொல்லும் பெயர் ஐஸ்வர்யா ராய்.

உலக அழகி பட்டம் பெற்ற இவர், 45 வயதாகிவிட்டபோதிலும் இன்றும் இளமையுடன் இருக்கிறார்.

ஐஸ்வர்யா ராயின் அழகு ரகசியம் : ஐஸ்வர்யா ராய் பிங்க், பிரவுன் கலர் லிப்ஸ்டிக்குளை தனது சருமம் மற்றும் உடைக்கு ஏற்றது போலவும், கண்களுக்கும் போடுவாராம்.

சருமத்திற்காக வெள்ளரிக்காய், கடலை மாவு, பால் மற்றும் மஞ்சள் கலந்து மாஸ்க்கையும், தலைமுடியின் ஆரோக்கியத்திற்காக யோகர்ட்டை பயன்படுத்துவதுடன் அடிக்கடி தனது முகத்தை சுத்தமான நீரில் கழுவிக் கொள்வாராம்.

ஆயுர்வேதப் பொருட்களை மட்டுமே உபயோகிப்பார். வீட்டு சமையல் பொருட்களையே மேனி பராமரிப்புக்கும் பயன்படுத்துவார். இரவு உறங்கச் செல்லும் முன் மேக்கப் கலைக்க ஐஸ்வர்யா பயன்படுத்துவது சுத்தமான பசும் பால்.

ஐஸ்வர்யா ராயின் உணவு ரகசியம் : ஐஸ்வர்யா ராய் தனது உணவில் வேகவைத்த உணவுகள், நார்சத்து மிகுந்த உணவுகள் ஆகிய உணவுகளை சாப்பிடுவாராம்.

அதிலும் பச்சைக் காய்கறிகள், பழங்களை அதிகமாக அடிக்கடி எடுத்துக் கொள்வதுடன், வீட்டில் சமைக்கப்பட்ட உணவுகளை அதிகம் விரும்பி சாப்பிடுவாராம்.

மேலும் இவர் உடலையும் மனதையும் சீரான முறையில் பராமரிக்க, தினமும் தவறாமல் யோகா செய்து வருகிறார்.

நயன்தாரா பேசிய மோசமான கெட்ட வார்த்தை, மீண்டும் தொடங்கிய சர்ச்சை!!

நயன்தாரா தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் என கொண்டாடப்படுபவர். இவர் நடிப்பில் அறம், இமைக்கா நொடிகள், கோலமாவு கோகிலா என ஹாட்ரிக் ஹிட் அடித்தார்.

சமீபத்தில் கூட இவர் நடிப்பில் ஐரா படம் திரைக்கு வந்து நன்றாக ஓடி வருகின்றது, இந்நிலையில் இப்படத்தில் நயன்தாரா மிக மோசமான வசனம் ஒன்றை பேசியுள்ளார்.

ஆம், ஒருவர் நயன்தாரா குறித்து ஆபாசமாக பேசுவார், அதற்கு நயன்தாரா அந்த கதாபாத்தின் பெயர் ஆதியை மிக மோசமான கெட்டவார்த்தை ஒன்றுடன் குறிப்பிட்டு பதிலடி கொடுப்பார்.
இந்த காட்சி சமூக வலைத்தளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை வரலட்சுமியின் படப்பிடிப்பில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமி படத்தின் படப்பிடிப்பில் நடந்த தீவிபத்தில் தாயும் மகளும் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

போடா போடி, சர்க்கார் போன்ற பல தமிழ் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் வரலட்சுமி சரத்குமார். இவர் தற்போது ரணம் எனும் கன்னட படத்தில் நடித்து வருகிறார்.

ரணம் படத்தின் படப்பிடிப்பு பெங்களூருவுக்கு அருகில் உள்ள பாகலூரில் நடைபெற்று வருகிறது. அங்கு இரண்டு கார்கள் மோதி தீப்பிடிப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்ட போது எதிர்பாராதவிதமாக, அங்கிருந்த கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறி தீவிபத்து ஏற்பட்டது.

அப்போது படப்பிடிப்பை வேடிக்கை பார்த்துக் கொண்டிருடந்த 5 வயது சிறுமியும், அந்த குழந்தையின் தாயும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் குறித்து பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.

கடைக்குட்டி சிங்கம் சீரியலில் இருந்து ஷிவானி வெளியேறியது இதனால் தான் : அதிர்ச்சிக் காரணம்!!

கடைக்குட்டி சிங்கம் சீரியலில் நடித்து வந்த நடிகை ஷிவானி, சீரியல் துவங்கிய ஒரு மாதத்திற்குள்ளேயே அந்த சீரியலில் இருந்து வெளியேறிவிட்டார். காரணம் என்ன என விசாரிக்கையில் கிடைத்த தகவல் இதுதான்..

பகல் நிலவு சீரியலில் ஷிவானி-அசீம் ஜோடிக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் தான் அதே ஜோடியை வைத்து கடைக்குட்டி சிங்கம் என்ற சீரியலில் உடனே துவங்கினார்கள்.

சிறிய இடைவெளி எடுத்து ஓய்வெடுத்த பிறகு அடுத்த சீரியலில் நடிக்கலாம் என்று தான் ஷிவானி எண்ணினாராம். ஆனால் சேனல் தான் அவரை வற்புறுத்தி நடிக்க வைத்ததும்.

வேண்டாவெறுப்பாக நடிக்க ஆரம்பித்த அவர் தற்போது சின்ன பிரச்சனை ஏற்பட்டதால் உடனே விலகிவிட்டாராம் ஷிவானி.
இந்த சீரியலில் நடிக்கும் ஒருவரிடம் ஏற்பட்ட சண்டையால் தான் ஷிவானி வெளியேறிவிட்டார் என்றும் கூறப்படுகிறது.

நடிகர் தனுஷ் எங்களுக்கு பிறந்த மகன் என கூறிய தம்பதி மீண்டும் கிளப்பிய சர்ச்சை!!

நடிகர் தனுஷ் எங்களது மகன் என கூறிய மேலூர் தம்பதி இது தொடர்பான வழக்கை கேரளா அல்லது கர்நாடகாவுக்கு மாற்றக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதி, நடிகர் தனுஷ் தங்களது மகன் என்றும், அவர் மாதந்தோறும் பரமாரிப்புத் தொகையாக ரூ. 65 ஆயிரம் தங்களுக்கு வழங்க வேண்டும் எனவும் மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து வந்த நிலையில், மதுரை தம்பதிகள் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது இந்நிலையில் தற்போது மீண்டும் கதிரேசன், மீனாட்சி தம்பதி இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

அதில் மதுரையில் இருந்து வழக்கை கேரளா அல்லது கர்நாடகா மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த சில மாதங்களாக இந்த விவகாரம் ஓய்ந்திருந்த நிலையில், தனுஷூக்கு உரிமை கோரும் மதுரை தம்பதிகள் வழக்கு மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

நடுரோட்டில் நடிகை நமீதா கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு!!

சுற்றுலா சென்ற நடிகை நமீதாவின் காரை தேர்தல் பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தி சோதனை நடத்திய நிலையில் அவர்களுடன் நமீதா கடும் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அதிமுக கட்சியில் இணைந்த நடிகை நமீதா, கடந்த தேர்தலின்போது நட்சத்திர பேச்சாளராக வாக்கு சேகரித்தார். ஆனால், நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு யாருக்கும் ஆதரவு இல்லை என ஒதுங்கி உள்ளார்.

இந்நிலையில், அவரின் காரை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் நடுரோட்டில் பரபரப்பு ஏற்பட்டது. நாடாளுமன்றத் தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க சேலம் மாவட்டத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அப்போது, அந்த வழியாக வந்த சொகுசு காரை சோதனை செய்வதற்காக அதிகாரிகள் நிறுத்தினர். அந்த காரில் நடிகை நமீதா மற்றும் அவருடைய கணவர் உட்பட 4 பேர் இருந்தனர்.

இதனையடுத்து, அந்த காரை சோதனை செய்ய அதிகாரிகள் முயன்றனர். இதற்கு நமீதா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் நடுரோட்டில் வாக்குவாதம் ஏற்பட்டது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி தான், வாகன சோதனை நடத்தப்பட்டு வருவதாக அவர்களிடம் அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் இந்த சோதனையின் போது அவர்களிடம் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பணம், நகை எதுவும் இல்லை என்பது தெரியவந்தது.