பிறந்தநாளில் படுக்கையறை செல்பியை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த நித்யாமேனன்!!

மலையாள சினிமாவில் முன்னணி நடிகை நித்யா மேனன். தமிழிலும் ஓகே கண்மணி, மெர்சல் உள்ளிட்ட பல ஹிட் படங்கள் நடித்துள்ளார்.

இதனால் நித்யாவிற்கு கோலிவுட்டிலும் கணிசமான ரசிகர் கூட்டம் உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் (ஏப்ரல் 8) சென்ற தனது பிறந்தநாளில் ரசிகர்களுக்காக ஸ்பெஷல் செல்பி ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தூங்கி எழுந்து படுக்கறையிலேயே மேக்கப் எதுவும் போடாமல் டி-ஷர்ட்டில் நித்யாமேனன் உள்ளது தான் அந்த செல்பியில் உள்ள ஸ்பெஷல். இதை பார்த்த ரசிகர் பலரும் தூங்கு மூஞ்சியில் கூட நீங்கள் அழகாக தான் உள்ளீர்கள் என்று புகழ்ந்து வருகின்றனர்.

சீரியலுக்கு நோ சொன்ன “கருவாப்பையா..” கார்த்திகா!

‘தூத்துக்குடி’ படத்தில் நாயகியாக நடித்த கார்த்திகா, அப்படத்தில் இடம்பெறும் “கருவாப்பையா…கருவாப்பையா…” என்ற பாடல் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துவிட்டார்.

’பிறப்பு’, ‘ராமன் தேடிய சீதை’, ‘தைரியம்’, ‘மதுரை சம்பவம்’, ‘365 காதல் கடிதம்’, ‘வைதேகி’, ‘நாளைய பொழுதும் உன்னோடு’ ஆகிய படங்களில் நடித்த கார்த்திகா, தனது தங்கையின் படிப்பிற்காக சிறிது காலம் மும்பையில் இருந்தார்.

தங்கையின் படிப்பு முடிந்து சென்னை திரும்பிய கார்த்திகா வடபழனியில் உள்ள பிரபல மால் திரையரங்கிற்கு படம் பார்க்க சென்றுளார். அங்கு அவரை அடையாளம் தெரிந்துகொண்ட ரசிகர்கள் கருவாப்பையா கார்த்திகா என்று சூழ்ந்துகொண்டனர். தன்னை மறக்காத ரசிகர்களை கண்டு மகிழ்ச்சியடைந்த கார்த்திகா மீண்டு திரைப்படங்களில் நடிக்க தயாராகிவிட்டார்.

பிரபல தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க அழைப்பு வந்தது. ஆனால், திரைப்படங்களில் தான் நடிப்பேன் என்று உறுதியாக இருக்கும் கார்த்திகா, பட வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறார்.

தற்போது சில படங்களில் நடிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் கார்த்திகா, நல்ல கதையம்சம் கொண்ட, தனக்கு நல்ல கதாபாத்திரங்கள் நிறைந்த படங்கள் என்றால் நடிக்க தயார், என்று கூறுகிறார்.

சிறந்த சீரியல், சீரியல் ஜோடி என விருதுகளை அள்ளிய சீரியல் பிரபலங்கள் : லிஸ்ட் இதோ!!

இப்போது சீரியல் மோகம் யாரையும் விட்டு வைப்பதில்லை. பெரியவர்களை விட இளம் தலைமுறைகளை அதிகம் ஈர்த்து வருகிறது. இதனால் மற்ற சானல்களுக்கு நடுவே தீவிர போட்டி இருந்து வருகிறது.

இதில் விஜய் தொலைக்காட்சியும் சரவணன் மீனாட்சி, ராஜா ராணி, மௌனராகம், சின்னத்தம்பி, மாப்பிள்ளை என பல சீரியல்கள் இன்னும் நம் மனங்களில் ஓடிக்கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் வருட வருடம் அந்த தொலைக்காட்சி விருது வழங்கும் விழாவை நடத்தி வருகிறது. இதில் விருதுகளை அள்ளிய சீரியல் பிரபலங்கள்! யார் யாருக்கு என்ன விருது என பார்க்கலாம்.

1. Best Director Award – நாம் இருவர் நமக்கு இருவர் இயக்குனர் தாய் செல்வம், 2. Best Actor Award – நாம் இருவர் நமக்கு இருவர் ஹீரோ செந்தில், 3. Best Pair Award – நாம் இருவர் நமக்கு இருவர் ஜோடி செந்தில் மற்றும் ரக்ஷா,

4. Best Child Artist Award – மௌனராகம் குழந்தை ஷரின், 5. Best Actress Award – ராஜா ராணி கதாநாயகி ஆல்யா மானசா, 6. Best Comedian Award – ராஜா ராணி நகைச்சுவை நடிகை ஷாப்னம்

7. Best Family Award – பாண்டியன் ஸ்டோர்ஸ், 8. Best Supporting Actress Female – பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம், சுஜிதா 9. Budding Young Couple – ஈரமான ரோஜாவே ஹீரோ, ஹீரோயின் – பவித்ரா, திரவியம்.

சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் விருதை வென்ற முக்கிய பிரபலம் : குவியும் பாராட்டுக்கள்!!

தற்போது அனைத்து டிவி சானல்களுக்கு மிகுந்த சவாலாக இருக்கும் ஒன்று விஜய் டிவி. ரியாலிட்டி ஷோக்கள், சீரியல்கள் என பல விதத்தில் மக்களை கவர்ந்துவிடுகிறார்கள்.

இதில் கலந்துகொண்டவர்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகி ரசிகர்கள், ரசிகைகளை அதிக அளவில் பெற்றுவிட்டார்கள். அதில் டிடி, கோபிநாத் ஆகியோர் மிக முக்கியமானவர்கள்.

இதில் 5 ம் வருட விருது வழங்கும் விழா அண்மையில் நடத்தப்பட்டது. இதில் சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளருக்கான (ஆண் பிரிவு) விருதை ரியோ பெற்றுள்ளார். இதற்காக அவருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்த ரியோ தற்போது சிவகார்த்திகேயன் தயாரிப்பில் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா படத்தில் ஹீரோவாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

யாரும் எதிர்ப்பாராத நேரத்தில் 175 ஏக்கர் நிலத்தை ராணுவ வீரர்களுக்கு வழங்கிய சினிமா பிரபலம்!!

பிரபல நடிகர் சுமன். 80களில் ஆக்ஷன் ஹீரோவாக நடித்தவர். தற்போது குணசித்ர வேடங்களில் நடித்து வருகிறார். தற்சமயம் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் வாட்ச்மேன் படத்தில் நடித்து முடித்துள்ள இவர் அப்படத்தின் அறிமுக நிழ்ச்சியில் பேசியதாவது:

இந்த படத்தில் எனக்கு நல்ல ஒரு கதாப்பாத்திரத்தையும், அதை சிறப்பாக செய்ய சுதந்திரத்தையும் கொடுத்த விஜய்க்கு நன்றி. 9 மொழிகளில் 450 படங்களில் நடித்திருக்கிறேன். தமிழ் சினிமாவில் நடிப்பது எப்போதுமே எனக்கு மகிழ்ச்சி அளிக்கும் விஷயம். இந்த கதை மிகவும் புதுமையாக இருந்தது.

நமது நாட்டின் உண்மையான வாட்மேன்கள் ராணுவ வீரர்கள்தான். நாம் நிம்மதியாக வாழ அவர்கள் உறையும் பனியில் காவல் புரிகிறார்கள். அவர்களுக்குள் ஜாதி, மத பேதமில்லை. ஆனால் நாம்தான் ஜாதி, மதத்தின் பெயரால் கலவரம் செய்து கொண்டிருக்கிறோம்.

அவர்களுக்கு என்னால் முடிந்த உதவி செய்ய முடிவு செய்தேன். அதன்படி சினிமா ஸ்டூடியோ கட்ட ஐதராபாத் அருகே நான் வாங்கிய 175 ஏக்கர் நிலத்தை இந்தியாவின் வாட்ச்மேன்களாக இருக்கும் ராணுவ வீரர்களுக்கு தானமாக கொடுக்க இருக்கிறேன் என்றார் சுமன்.

சின்ன வயதில் நடந்த சம்பவம் : நிவேதா பெத்துராஜ் கூறியுள்ள அதிர்ச்சி தகவல்!!

நன்கு தமிழ் தெரிந்த தமிழ்நாட்டு பெண்கள் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக ஜெயிப்பது மிக கடினம் என்கிற நிலைமை தான் தற்போது உள்ளது.

அதையெல்லாம் தாண்டி ஜெயித்த சில தமிழ் நடிகைகளில் நிவேதா பெத்துராஜும் ஒருவர். ஒரு நாள் கூத்து படம் மூலம் அறிமுகமான அவர் அதன்பிறகு பல படங்களில் நடித்துவருகிறார். தற்போது கைவசம் பல படங்கள் வைத்துள்ளார் அவர்.

இந்நிலையில் தனக்கு சின்ன வயதில் நடந்த சம்பவம் பற்றி அவர் ஒரு பேட்டியில் பேசியுள்ளார். சின்ன வயதில் அவரை மதுரை அருகே உள்ள மடப்புரம் காளி கோவிலுக்கு அழைத்து சென்றார்களாம், அங்கு அவருக்கு சாமி வந்துவிட்டதாம். அப்போது முதல் எனக்கு கடவுள் பக்தி அதிகம் என நிவேதா பெத்துராஜ் கூறியுள்ளார்.

கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் தண்ணீரில் மிதக்கும் நடிகை : புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்!!

அடியே கொல்லுதே என தமிழக இளைஞர்களை ஒரே ஒரு படம் மூலம் கலக்கியவர் நடிகை சமீரா ரெட்டி. அந்த படத்தை தொடர்ந்து தமிழில் நிறைய படங்கள் நடித்தார் ஆனால் அதெல்லாம் அவருக்கு சரியான வரவேற்பை கொடுக்கவில்லை.

மீண்டும் நடிக்க வருவாரா என்று பார்த்தால் திருமண வாழ்க்கையில் சந்தோஷமாக உள்ளார். இப்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார். கர்ப்ப காலத்தில் வித்தியாசமாக போட்டோ ஷுட் நடத்தி ரசிகர்களை ஷாக் ஆக்கி வருகிறார்.

இப்போது என்னவென்றால் தண்ணீரில் மிதக்கும் ஒரு புகைப்படத்தை போட்டுள்ளார். கர்ப்பமாக இருக்கும் இந்த வேலையிலும் இப்படி செய்வதா என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

  

கணவரால் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நடிகை சந்தியா : இறுதி சடங்கிற்காக பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட உடல் பாகங்கள்!!

தனது கணவரால் கொலை செய்யப்பட்டு துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட நடிகை சந்தியாவின் உடல் பாகங்கள் இறுதி சடங்கிற்காக அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஜனவரி மாதம் 21-ந் தேதி பெருங்குடி குப்பை கிடங்கில் சந்தியாவின் 2 கால்கள், ஒரு கையும், பிப்ரவரி மாதம் 6-ந் தேதி
சென்னை ஜாபர்கான்பேட்டை பாலத்தின் அடியில் உள்ள பெருங்குடி குப்பை கிடங்கில் நடிகை சந்தியாவின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டது.

சந்தியாவின் தலை, உடல், மற்றொரு கை ஆகியவற்றை பெருங்குடி குப்பை கிடங்கில் பல நாட்களாக தேடியும் கிடைக்காததால், உடலை தேடும் பணியை பொலிசார் கைவிட்டனர்.

தவறான நடத்தை காரணமாக தனது மனைவியை கொலை செய்த சந்தியாவின் கணவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் தங்கள் மகள் சந்தியாவுக்கு இறுதி சடங்குகள் செய்ய வேண்டி இருப்பதால், பொலிசார் இதுவரை கண்டெடுத்த சந்தியாவின் உடல் பாகங்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என அவரது தாய் பிரசன்னகுமாரி, தந்தை ராமச்சந்திரன் ஆகியோர் பள்ளிக்கரணை மனு கொடுத்தனர்.

இதனைத்தொடர்ந்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பதப்படுத்தி வைத்து இருந்த சந்தியாவின் உடல் பாகங்களை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

ஒரு இரவு வரச்சொன்ன பிரபல தயாரிப்பாளர்- நடிகை கொடுத்த பதிலடி!!

பெண்களுக்கு நாட்டில் நடக்காத கொடுமைகளே இல்லை. அன்றாடம் ஏதாவது ஒரு இடத்தில் பெண்களுக்கு அநியாயம் நடக்கத் தான் செய்கிறது.

அதிலும் சமீபகாலமாக அப்படிபட்ட விஷயங்களை நாம் கேட்டு வருகிறோம், சினிமாவிலும் பெண்களுக்கு பிரச்சனைகள் உள்ளது. சமீபத்தில் பிரபல நடிகை ஸ்ருதி தன்னை ஒரு இரவு வரச் சொன்ன தயாரிப்பாளர் குறித்து கூறியிருந்தார்.

அண்மையில் அப்படி தயாரிப்பாளர் சொன்ன நேரத்தில் பயப்படாமல் அவருக்கு பதிலடி கொடுத்ததை ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதில், நான் உங்களுடன் படுக்க வேண்டும் என்றால், ஹீரோவை யாருடன் படுக்க வைக்க போகிறீர்கள் என்று கேட்டேன், அவர் அதிர்ந்து போய்விட்டார். அவரை பற்றி அனைவருக்கு தெரிவித்தேன், உடனே படத்தில் இருந்து அந்த தயாரிப்பாளரை நீக்கிவிட்டார்கள் என்றார்.

இதை பார்த்ததில் இருந்து தூக்கமே வரவில்லை : சின்மயி!!

பாடகி சின்மயி மீடு புகார் கூறி பாலியல் தொல்லை கொடுத்தவர்களுக்கு எதிராக போராடி வருகிறார். மேலும் அவர் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டதால் அதற்காகவும் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில் சின்மயி சமீபத்தில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தை பார்த்து ட்விட்டரில் பிரமிப்புடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்ததில் இருந்து தூக்கமே வரவில்லை என கூறியுள்ள அவர் படத்தின் நடித்த விஜய் சேதுபதி, சமந்தா உட்பட அனைவரையும் புகழ்ந்து பேசியுள்ளார்.

மேலும் கள்ளக்காதல் வைத்துள்ள பெண்னாக நடித்ததற்காக சமந்தாவை சிலர் ட்ரோல் செய்வது பற்றியும் சின்மயி அதிர்ச்சி தெரிவித்துள்ளார். அதே ஒரு ஆண் நடிகர் படத்தில் கிஸ்/கள்ளக்காதல் வைத்திருந்தால் யாரும் விமர்சிப்பதில்லையே என்று சின்மயி கேள்வி கேட்டுள்ளார்.