பிரேமம் படத்தின் சுருண்ட கூந்தல் அழகில் பலரையும் மயக்கியவர் அனுபமா பரமேஸ்வரன். அதனால் பல இளைஞர்கள் அவருக்கு ரசிகர்கள் ஆனார்கள். பின் தமிழில் தனுஷ்க்கு ஜோடியாக கொடி படத்தில் நடித்திருந்தார்.
தமிழ், மலையாள படங்களில் அவர் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார். சமூக வலைதளத்தில் அவருக்கு டிக் டிக் வீடியோக்கள் மீது ஆர்வம் அதிகம். ஆனால் அவர் எந்த டப்ஸ் மாஸ் செய்ததில்லை.
இந்நிலையில் BJP போட்டியாளர் ஒருவர் தேர்தல் விதிமுறையை மீறியதாக திருச்சூர் மாவட்ட கலெக்டர் TV அனுபமா என்பவரால் கடும் நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளார்.
இதனால் அவரது ஆதரவாளர்கள் கலெக்டருக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக நினைத்து தவறாக நடிகை அனுபமாவை டேக் செய்து தொல்லைகள் கொடுத்து வருகிறார்கள்.
யார் என தெரியாமல் கடுமையான வார்த்தைகளை உபயோகித்துள்ளார். இதனால் நடிகை அனுபமா சங்கடத்தில் ஆழ்ந்துள்ளார்.
பாலிவுட்டில் பிரமாண்ட படங்கள் எடுப்பதற்கு பெயர் போன சஞ்சய் லீலா பன்சாலி சல்மான் கான், ஆலியா பட்டை வைத்து இன்ஷா அல்லாஹ் என்ற படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் ஆலியா சல்மான் ஜோடியாக நடிக்கிறார் என்று தெரிந்ததும் பலரும் விமர்சிக்கத் துவங்கினர்.
53 வயதாகும் சல்மான் கானுக்கு 26 வயதாகும் ஆலியா பட் ஜோடியா?. அப்பாவும், மகளும் சேர்ந்து நடித்தது போன்று இருக்கும். பன்சாலி ஏன் இப்படி ஒரு ஜோடியை தேர்வு செய்துள்ளார் என்று விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில் இது குறித்து ஆலியா பட் விளக்கம் அளித்துள்ளார்.
எனக்கு எந்த விமர்சனமும் வரவில்லை. சொல்லப் போனால் நான் மகிழ்ச்சியாக உள்ளேன். யார் என்ன பேசுகிறார்கள் என்பதை பற்றி எனக்கு கவலை இல்லை. சல்மான் அல்லது பன்சாலி சாரும் அதை எல்லாம் கண்டுகொள்ள மாட்டார்கள் என்று நினைக்கிறேன் என்கிறார் ஆலியா.
தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நெடுந்தொடர்கள் என்றாலே பெண்களும், வயதானவர்களும் தான் பார்ப்பார்கள் என்ற நிலையை மாற்றி, இளைஞர்களையும் நெடுந்தொடர் விரும்பிகளாக தற்போது வரும் சீரியல்கள் மாற்றியுள்ளது. இதற்கு முக்கிய காரணம், சீரியல்களில் நடிக்கும் முக்கிய நடிகர், நடிகைகள் தான்.
சீரியலில் ஜோடியாக நடிக்கும் பல இளம் ஜோடிகள், நிஜத்திலும் காதலர்களாக, தம்பதிகளாகிவிடுகிறார்கள். அத்துடன், அவர்கள் காதலித்த கதை, டேட்டிங் செய்த தகவல்கள் என அனைத்தையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்துக் கொள்ள அவர்களை பின் தொடரும், இளசுகள் அவர்கள் நடிக்கும் சீரியல்களையும் பார்க்க தொடங்கிவிடுகிறார்கள்.
அந்த வகையில் சீரியல் உலகில் பிரபலமான ஜோடியாக வலம் வருபவர்கள் ஆல்யா மானசா – சஞ்சீவ் ஜோடி. ‘ராஜா ராணி’ என்ற சீரியலில் நடித்து வரும் இவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தாங்கள் நிஜத்திலும் காதலிப்பதை உலகிற்கு அறிவித்திருப்பதோடு, தற்போது திருமணத்திற்கு அவசரப்படவில்லை, என்றும் தெரிவித்தவர்கள், ஜாலியாக ஊர் சுற்றுவது, பரிசுப் பொருட்களை பரிமாறிக் கொள்வது என்று சந்தோஷமாக காதலித்து வருகிறார்கள்.
இப்படி சந்தோஷமான காதல் ஜோடிகளாக இருந்த ஆல்யா மானசா – சஞ்சீவ் ஜோடி தற்போது ரொம்பவே வருத்தத்தில் இருக்கிறார்கள். அதற்கு காரணம், அவர்களது சீரியல் ஒளிபரப்பாகும் சேனல் தானாம்.
அதாவது, தங்களது சேனலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடிப்பவர்களை உற்சாகப்படுத்துவதற்காக சேனல் நிர்வாகம், பிரத்யேகமாக சீரியல் மற்றும் அதில் நடிப்பவர்களுக்கு ஆண்டு தோறும் விருது வழங்கி கெளரவித்து வருகிறது. இதை முன்னணி சேனல்கள் சிலர் செய்து வருகின்றது.
அந்த வகையில், விஜய் தொலைக்காட்சியும் ஆண்டு தோறும் விருது வழங்கும் விழா நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான விருது விழா நடைபெற்று முடிந்த நிலையில், சீர்யல் நடிகர்கள் பலர் ஒவ்வொரு பிரிவிலும் விருது வென்றிருக்கிறார்கள். சிலருக்கு எதிர்ப்பார்த்த விருது கிடைக்கவில்லை, பலருக்கு எதிர்பாரத விருது கிடைத்திருக்கிறதாம்.
இந்த நிலையில், ராஜா ராணி புகழ் ஜோடி ஆல்யா மானசா – சஞ்வீவ் தங்களுக்கு சிறந்த ஜோடி பிரிவில் விருது நிச்சயம், என்று எண்ணியிருந்தார்களாம். ஆனால், அந்த விருது ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில் நடிக்கும் செந்தில் – ரக்ஷா ஜோடிக்கு விழங்கப்பட்டுவிட்டதாம்.
இந்த சீரியலுக்கு முன்பாகவே ஒளிபரப்பாகி வரும் ‘ராஜா ராணி’ சீரியலில் பலரை ஈர்த்த ஜோடியாக கருதப்பட்ட ஆல்யா மானசா – சஞ்சீவ், நிஜத்திலும் காதலர்களாகி மக்களிடம் பிரபலமடைந்த நிலையில், அவர்களுக்கு கிடைக்க வேண்டிய விருது வேறு ஒரு ஜோடிக்கு கிடைத்ததால், ரொம்பவே அப்செட்டாகிவிட்டார்களாம். இருந்தாலும், ஆல்யா மானசாவுக்கு சிறந்த நடிகைக்கான விருதை கொடுத்து அவர்களை சேனல் நிர்வாகம் கூலாக்கியிருக்கிறது. விருது பெற்றவர்களின் பட்டியல் இதோ,
1. Best Director Award – நாம் இருவர் நமக்கு இருவர் இயக்குனர் தாய் செல்வம், 2. Best Actor Award – நாம் இருவர் நமக்கு இருவர் ஹீரோ செந்தில், 3. Best Pair Award – நாம் இருவர் நமக்கு இருவர் ஜோடி செந்தில் மற்றும் ரக்ஷா,
4. Best Child Artist Award – மௌனராகம் குழந்தை ஷரின், 5. Best Actress Award – ராஜா ராணி கதாநாயகி ஆல்யா மானசா, 6. Best Comedian Award – ராஜா ராணி நகைச்சுவை நடிகை ஷாப்னம்
7. Best Family Award – பாண்டியன் ஸ்டோர்ஸ், 8. Best Supporting Actress Female – பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம், சுஜிதா 9. Budding Young Couple – ஈரமான ரோஜாவே ஹீரோ, ஹீரோயின் – பவித்ரா, திரவியம்
80,90களில் பிசியாக நடித்து வந்தவர் நடிகை கஸ்தூரி. சத்யராஜ் உள்பட முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். தற்போதும் பல படங்களில் கவர்ச்சி வேடம், குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
அவ்வப்போது சமூகத்தில் நடக்கும் அநியாயங்களுக்கு தனது குரலை வலுவாக கொடுத்து வருகிறார். ஆனால் இவரது ஒரு சில கருத்துகள் முகம் சுளிக்கும் விதமாக அமைகின்றன.
அப்படி தான் தற்போது KKR அணிக்கு எதிராக மிகவும் நிதானமாக விளையாடி வந்த CSK அணியை பல்லாண்டு வாழ்க படத்தில் எம்.ஜி.ஆர் நடிகை லதாவை தடவுவதை விட அதிகமாக தடவி கொண்டு ஆடி கொண்டிருக்கிறார்களே என பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
மலையாள சினிமாவில் முன்னணி நடிகை நித்யா மேனன். தமிழிலும் ஓகே கண்மணி, மெர்சல் உள்ளிட்ட பல ஹிட் படங்கள் நடித்துள்ளார்.
இதனால் நித்யாவிற்கு கோலிவுட்டிலும் கணிசமான ரசிகர் கூட்டம் உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் (ஏப்ரல் 8) சென்ற தனது பிறந்தநாளில் ரசிகர்களுக்காக ஸ்பெஷல் செல்பி ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தூங்கி எழுந்து படுக்கறையிலேயே மேக்கப் எதுவும் போடாமல் டி-ஷர்ட்டில் நித்யாமேனன் உள்ளது தான் அந்த செல்பியில் உள்ள ஸ்பெஷல். இதை பார்த்த ரசிகர் பலரும் தூங்கு மூஞ்சியில் கூட நீங்கள் அழகாக தான் உள்ளீர்கள் என்று புகழ்ந்து வருகின்றனர்.
‘தூத்துக்குடி’ படத்தில் நாயகியாக நடித்த கார்த்திகா, அப்படத்தில் இடம்பெறும் “கருவாப்பையா…கருவாப்பையா…” என்ற பாடல் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துவிட்டார்.
’பிறப்பு’, ‘ராமன் தேடிய சீதை’, ‘தைரியம்’, ‘மதுரை சம்பவம்’, ‘365 காதல் கடிதம்’, ‘வைதேகி’, ‘நாளைய பொழுதும் உன்னோடு’ ஆகிய படங்களில் நடித்த கார்த்திகா, தனது தங்கையின் படிப்பிற்காக சிறிது காலம் மும்பையில் இருந்தார்.
தங்கையின் படிப்பு முடிந்து சென்னை திரும்பிய கார்த்திகா வடபழனியில் உள்ள பிரபல மால் திரையரங்கிற்கு படம் பார்க்க சென்றுளார். அங்கு அவரை அடையாளம் தெரிந்துகொண்ட ரசிகர்கள் கருவாப்பையா கார்த்திகா என்று சூழ்ந்துகொண்டனர். தன்னை மறக்காத ரசிகர்களை கண்டு மகிழ்ச்சியடைந்த கார்த்திகா மீண்டு திரைப்படங்களில் நடிக்க தயாராகிவிட்டார்.
பிரபல தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க அழைப்பு வந்தது. ஆனால், திரைப்படங்களில் தான் நடிப்பேன் என்று உறுதியாக இருக்கும் கார்த்திகா, பட வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறார்.
தற்போது சில படங்களில் நடிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் கார்த்திகா, நல்ல கதையம்சம் கொண்ட, தனக்கு நல்ல கதாபாத்திரங்கள் நிறைந்த படங்கள் என்றால் நடிக்க தயார், என்று கூறுகிறார்.
இப்போது சீரியல் மோகம் யாரையும் விட்டு வைப்பதில்லை. பெரியவர்களை விட இளம் தலைமுறைகளை அதிகம் ஈர்த்து வருகிறது. இதனால் மற்ற சானல்களுக்கு நடுவே தீவிர போட்டி இருந்து வருகிறது.
இதில் விஜய் தொலைக்காட்சியும் சரவணன் மீனாட்சி, ராஜா ராணி, மௌனராகம், சின்னத்தம்பி, மாப்பிள்ளை என பல சீரியல்கள் இன்னும் நம் மனங்களில் ஓடிக்கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் வருட வருடம் அந்த தொலைக்காட்சி விருது வழங்கும் விழாவை நடத்தி வருகிறது. இதில் விருதுகளை அள்ளிய சீரியல் பிரபலங்கள்! யார் யாருக்கு என்ன விருது என பார்க்கலாம்.
1. Best Director Award – நாம் இருவர் நமக்கு இருவர் இயக்குனர் தாய் செல்வம், 2. Best Actor Award – நாம் இருவர் நமக்கு இருவர் ஹீரோ செந்தில், 3. Best Pair Award – நாம் இருவர் நமக்கு இருவர் ஜோடி செந்தில் மற்றும் ரக்ஷா,
4. Best Child Artist Award – மௌனராகம் குழந்தை ஷரின், 5. Best Actress Award – ராஜா ராணி கதாநாயகி ஆல்யா மானசா, 6. Best Comedian Award – ராஜா ராணி நகைச்சுவை நடிகை ஷாப்னம்
7. Best Family Award – பாண்டியன் ஸ்டோர்ஸ், 8. Best Supporting Actress Female – பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம், சுஜிதா 9. Budding Young Couple – ஈரமான ரோஜாவே ஹீரோ, ஹீரோயின் – பவித்ரா, திரவியம்.
தற்போது அனைத்து டிவி சானல்களுக்கு மிகுந்த சவாலாக இருக்கும் ஒன்று விஜய் டிவி. ரியாலிட்டி ஷோக்கள், சீரியல்கள் என பல விதத்தில் மக்களை கவர்ந்துவிடுகிறார்கள்.
இதில் கலந்துகொண்டவர்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகி ரசிகர்கள், ரசிகைகளை அதிக அளவில் பெற்றுவிட்டார்கள். அதில் டிடி, கோபிநாத் ஆகியோர் மிக முக்கியமானவர்கள்.
இதில் 5 ம் வருட விருது வழங்கும் விழா அண்மையில் நடத்தப்பட்டது. இதில் சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளருக்கான (ஆண் பிரிவு) விருதை ரியோ பெற்றுள்ளார். இதற்காக அவருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.
சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்த ரியோ தற்போது சிவகார்த்திகேயன் தயாரிப்பில் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா படத்தில் ஹீரோவாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரபல நடிகர் சுமன். 80களில் ஆக்ஷன் ஹீரோவாக நடித்தவர். தற்போது குணசித்ர வேடங்களில் நடித்து வருகிறார். தற்சமயம் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் வாட்ச்மேன் படத்தில் நடித்து முடித்துள்ள இவர் அப்படத்தின் அறிமுக நிழ்ச்சியில் பேசியதாவது:
இந்த படத்தில் எனக்கு நல்ல ஒரு கதாப்பாத்திரத்தையும், அதை சிறப்பாக செய்ய சுதந்திரத்தையும் கொடுத்த விஜய்க்கு நன்றி. 9 மொழிகளில் 450 படங்களில் நடித்திருக்கிறேன். தமிழ் சினிமாவில் நடிப்பது எப்போதுமே எனக்கு மகிழ்ச்சி அளிக்கும் விஷயம். இந்த கதை மிகவும் புதுமையாக இருந்தது.
நமது நாட்டின் உண்மையான வாட்மேன்கள் ராணுவ வீரர்கள்தான். நாம் நிம்மதியாக வாழ அவர்கள் உறையும் பனியில் காவல் புரிகிறார்கள். அவர்களுக்குள் ஜாதி, மத பேதமில்லை. ஆனால் நாம்தான் ஜாதி, மதத்தின் பெயரால் கலவரம் செய்து கொண்டிருக்கிறோம்.
அவர்களுக்கு என்னால் முடிந்த உதவி செய்ய முடிவு செய்தேன். அதன்படி சினிமா ஸ்டூடியோ கட்ட ஐதராபாத் அருகே நான் வாங்கிய 175 ஏக்கர் நிலத்தை இந்தியாவின் வாட்ச்மேன்களாக இருக்கும் ராணுவ வீரர்களுக்கு தானமாக கொடுக்க இருக்கிறேன் என்றார் சுமன்.
நன்கு தமிழ் தெரிந்த தமிழ்நாட்டு பெண்கள் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக ஜெயிப்பது மிக கடினம் என்கிற நிலைமை தான் தற்போது உள்ளது.
அதையெல்லாம் தாண்டி ஜெயித்த சில தமிழ் நடிகைகளில் நிவேதா பெத்துராஜும் ஒருவர். ஒரு நாள் கூத்து படம் மூலம் அறிமுகமான அவர் அதன்பிறகு பல படங்களில் நடித்துவருகிறார். தற்போது கைவசம் பல படங்கள் வைத்துள்ளார் அவர்.
இந்நிலையில் தனக்கு சின்ன வயதில் நடந்த சம்பவம் பற்றி அவர் ஒரு பேட்டியில் பேசியுள்ளார். சின்ன வயதில் அவரை மதுரை அருகே உள்ள மடப்புரம் காளி கோவிலுக்கு அழைத்து சென்றார்களாம், அங்கு அவருக்கு சாமி வந்துவிட்டதாம். அப்போது முதல் எனக்கு கடவுள் பக்தி அதிகம் என நிவேதா பெத்துராஜ் கூறியுள்ளார்.