நடிகை நமிதா என்ன தான் ஆனார் தெரியுமா?

நடிகை நமிதா

கவர்ச்சி நடிகை நமீதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன் பிறகு பெரிதாக படங்களில் நடிக்கவில்லை, திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். கடைசியாக அவர் நடிப்பில் வந்த படம் ‘பொட்டு’. அது பிளாப் ஆனது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

அதன் பிறகு அவரை பற்றிய செய்திகள் எதுவும் வரவில்லை. இந்நிலையில் தற்போது அவர் மீண்டும் சினிமாவை நடிக்க திரும்பியுள்ளார்.

இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் இயக்கும் படத்தில் தான் நமீதா நடிக்கவுள்ளார். அதில் அவருக்கு நெகடிவ் வேடம் என்று கூறப்படுகிறது.

6 மாத கர்ப்பிணியாக இருந்த பிரபல நடிகைக்கு நேர்ந்த கொடுமை : கணவர் செய்த மோசமான செயல்!!

அலினா ஷேக்

சினிமா நடிகைகளுக்கும் சொந்த வாழ்க்கையில் பிரச்சனைகள் இருக்கும். போஜ்புரி சினிமாவை சேர்ந்த பிரபல நடிகை அலினா ஷேக். கடந்த 2016 முதஸ்ஸீர் பெய்க் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு 2 மாத கைக்குழந்தை உள்ளது.

இந்நிலையில் அவர் தன் கணவர் மீது போலிசில் புகார் அளித்துள்ளார். அவர் கூறிதில் எனது கணவர் வீஇரவு 8 மணிக்கு திரும்பி வருவேன் என கூறிவிட்டு வெளியில் சென்றார்.

நீண்ட நேரமாகியும் அவர் வராததால் என் கணவரை காணவில்லை என புகார் செய்தேன். பின் அவர் நலமாக இருப்பது தெரியவந்தது. பின் 10 நாட்கள் கழித்து எனக்கு ரூ 100 பத்திரத்தில் முத்தலாக் கூறி விவாகரத்து செய்தார்.

இதனால் அதிர்ச்சியைடந்த நான் விவாகரத்தை ஏற்கமுடியாது என்பதால் போலிசில் புகார் அளித்தேன். ஆனால் வழக்கு பதிவு செய்ய மறுத்திவிட்டார்கள்.

அதே போல நான் 6 மாத கர்ப்பிணியாக இருந்தபோது கணவரின் வீட்டில் இருந்தவர்கள் தொடர்ந்து கொடுமை செய்து வந்தனர். இன்னும் கஷ்டங்களை அனுபவித்து வருகிறேன். புகார் கொடுக்க முயன்ற போது கணவர் என்னை தடுத்துவிட்டார் என அலினா கூறியுள்ளார்.

பெண்களை உரசியதாக ஓப்பனாக பேசிய சரவணன் : சர்ச்சையால் விஜய் டிவி எடுத்த அதிரடி நடவடிக்கை!!

சரவணன்

சென்ற சனிக்கிழமை பிக்பாஸ் எபிசோடில் கமல்ஹாசன் பெண்களிடம் தவறாக நடக்கும் ஆண்கள் பற்றி பேசிக்கொண்டிருந்தபோது, இடையில் பேசிய சரவணன் ‘நானும் இப்படி செஞ்சிருக்கேன் சார்’ என கூறினார்.

அதற்கு கமல்ஹாசனும் எந்த கண்டனமும் தெரிவிக்கவில்லை. செட்டில் இருந்த ரசிகர்களும் கைதட்டினார். இது பெரிய சர்ச்சையான நிலையில் விஜய் டிவி நடவடிக்கை எடுத்துள்ளது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது, மன்னிப்பு கேட்கும்படி பிக்பாஸ் கூறினார்.

அப்போது பேசிய சரவணன் “நான் காலேஜ் படிக்கும் வயதில் செய்த தவறுகள் பற்றி பேசினேன். அது போல யாரும் செய்யாதீர்கள் என சொல்வதற்காகத்தான் அதை சொன்னேன். ஆனால் அப்போது என்னால் முழுவதும் பேச முடியாமல் போனது. இந்த தருணத்தில் நான் மன்னிப்பு கேட்கிறேன்” என கூறியுள்ளார்.

சேரன் இப்படிப்பட்டவரா? வெளியே வந்த மீராவின் முதல் பேட்டி!!

மீராவின் முதல் பேட்டி

பிக்பாஸ் வீட்டில் சேரனுடன் ஏற்பட்ட மனக்கசப்பினால், மக்களிடம் மோசமான விமர்சனங்களை பெற்ற மீரா மிதுன், கடந்த வாரம் வெளியேற்றப்பட்டார். வெளியேற்றப்பட்ட சில மணி நேரங்களிலே கவர்ச்சி புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, வைரலாக்கினார்.

இந்நிலையில் அவர் பிரபல தமிழ் ஊடகம் ஒன்றிற்கு முதல் முறையாக பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவருடன் முதலில் கேட்ட கேள்வியே சேரன் பிரச்சனை தான், அதற்கு மீரா, அவர் என்னை பிடித்த விதம் ஹார்ஷாக இருந்தது, அதன் காரணமாகவே அப்படி கூறினேன்.

அப்புறம் ஏன் சிரீத்து கொண்டே வந்தீர்கள் என்ற போது, நான் பொதுவாகவே எந்த ஒரு விஷயத்தையும் முகத்தில் காட்டமாட்டேன், அதனாலே தான் சிரித்தேன்.

அதுமட்டுமின்றி அந்த விஷயத்தை சேரன் வேறு ஒரு மாதிரி கொண்டு சென்றுவிட்டார். அது எப்படி சொல்வது சென்சிடிவ்வாகவே கொண்டு சென்றுவிட்டார், இதனாலே போட்டியாளர்கள் அவரிடம் சென்று பேசினர்.

என்னை பொறுத்தவரை அவர் ஒரு நாடகத்தை போட்டு, அப்படியே மாற்றிவிட்டார் என்று தான் கூறுவேன், ஒரு வேளை அவருக்கு அது உண்மையாக கூட வலித்திருக்கலாம், ஆனால் என்னுடைய கருத்து இது தான்.

கடைசியில் ஏன் சேரனை அந்த வார்த்தை ஜெயிச்சீட்டேங்க வாழ்த்துக்கள் என்று கூறினீர்கள், என்ற போது பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருக்கும் போது சும்மா டயலாக் பற்றி பேசிக் கொண்டிருந்த போது, சேரன் சார் தான்,

இந்த வீட்ல எனக்கு முன்னாடி வெளியே அனுப்புவேன் என்று அண்ணாமலை டயலாக் போன்று செய்து காட்டினார். அதன் காரணமாகவே வெளியேறும் போது, நீங்கள் ஜெயிச்சுட்டேங்க சார் என்று அவரிடம் கூறினேன் என்று முடித்தார்.

கவீனை கட்டிப்பிடித்து தோளில் சாய்ந்து உருக்கமாக உதவி கேட்ட ரேஷ்மா : என்ன கேட்டார் தெரியுமா?

உதவி கேட்ட ரேஷ்மா

பிக்பாஸ் வீட்டில் நேற்று ஓபன் நாமினேஷன் நடந்தது. இந்த ஓபன் நாமினேஷனில் மதுமிதா, கவீன், ஷாக்சி, அபிராமி, ரேஷ்மா ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளனர். அதன் பின் கவீனை நாமினேட் செய்த ரேஷ்மா, கிட்சனில் இருந்த போது, கவீனை கட்டிப்பிடித்து, தோளில் சாய்ந்து அவரிடம் ஒரு உதவி கேட்டார்.

அப்போது ரேஷ்மா, நான் இந்த வாரம் வெளியேறிவிட்டால், என் குழந்தைகளுக்கு பணம் கட்டிவிடுடா என்று கேட்டார். அதற்கு கவீன் அதெல்லாம் ஒன்னும் இல்லைடா கண்டிப்பா என்று கூறினார்.

அதன் பின் மீண்டும் ரேஷ்மா மன்னிப்பு கேடக, ஆனால் கவீனோ நான் அதற்காக டல்லாக இல்லை, எல்லா விஷயமும் தெரிந்தும், ஷாக்சி என்னை நாமினேட் செய்தது தான் ஒரு மாதிரி இருக்கிறது என்று கூறினார்.

சேரன் மீது பொய் புகார் கூறியது போல பிரபல நடிகர் மீது பழி சுமத்திய மீரா : அவரே வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!!

சேரன் மீது பொய் புகார்

மீரா மிதுன் சைக்கோ என்றும், அவர் உண்மை முகம் குறித்தும் நடிகரும் அவருடன் நடனமாடியவருமான சய்ஃப் அலி கான் பேட்டி அளித்துள்ளார். பிக்பாஸில் போட்டியாளர்களில் ஒருவரான மீரா மிதுன் சென்ற வாரம் குறைந்த வாக்குகளால் வெளியேறியுள்ளார். இந்நிலையில் மீரா குறித்து ஜோடி No.1ல் அவருடன் சேர்ந்து நடனமாடிய சய்ஃப் அலி கான் பேசியுள்ளார்.

சய்ஃப் கூறுகயில் நான் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் வேறொரு நபருடன் ஆடுகையில் அவர் அந்த ஷோ வை விட்டு வெளியேறி விட்டார். பின்னர் மீரா எனக்கு ஜோடியாகி என்னுடன் சேர்ந்து நடனமாடினார்.

அப்போது ஒரு நாள், நடன ஒத்திகை செய்து பார்த்துக் கொண்டிருக்கும் போது அவர் திடிரென்று என்னை விட்டு தள்ளி போய்ட்டார். காரணம் நான் அவரை தவறாக தொட்டு நடனமாடினார் என்று அங்குள்ள சகப் போட்டியாளர்கள் மத்தியில் கூறினார்.

அப்போது அந்த வார்த்தை அதிர்ச்சியை அளித்தது, நான் தலை குனிந்து போனேன். அதே போல் தான் பிக்பாஸ் வீட்டில் சேரனுக்கும் நடந்துள்ளது. அவரின் பேச்சு ஒரு சைக்கோ போல இருந்தது என கூறியுள்ளார்.

பிக்பாஸ் சாண்டிக்கு வெளியில் ஜெயில் காத்திருக்கிறது : வசந்ததபாலனால் ஷாக் ஆன ரசிகர்கள்!!

பிக்பாஸ் சாண்டி

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் மிகவும் பிடித்த நபராக இருப்பவர் தான் டான்ஸ் மாஸ்டர் சாண்டி. இவர் அந்த இடத்தில் இருந்தால் கலகலப்பாக இருக்கும் என்று போட்டியாளர்கள் பலரும் சொல்லியிருக்கார்கள்.

ஆனால் அதுவே சில நேரங்களில் கோபத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்து விடுகிறது என சேரன் சார் சமீபத்தில் கமலிடம் நேரடியாக கூறினார். இதனால் சாண்டி கொஞ்சம் அடக்கி வாசிக்கிறே என்று அதை கூட தன்னுடைய தொனியில் சொன்னார்.

இந்நிலையில் வெயில், அங்காடி தெரு, அரவான், காவியத் தலைவன் படங்களை இயக்கிய வசந்த பாலன் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில், வென்று வாருங்கள், உங்களுக்கு ஜெயில் காத்திருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார்.

இதனால் இதைக் கண்டவுடன் ஷாக் ஆன சாண்டி ரசிகர்கள், அதன் பின் அதை படித்து பார்த்த போது, அவர் இயக்கி வரும் ஜெயில் படத்தில் ஜீ.வி.பிரகாஷ் நடிக்கிறார். இதில் நடன இயக்குனராக சாண்டி பணியாற்றியுள்ளார்.

அவர் வெளியில் வரும் போது ஜெயில் படம் ரிலிசாகவுள்ளதால், அதை குறிக்கும் வகையிலே வெளீயில் வாருங்கள் சாண்டி ஜெயில் காத்திருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த பதிவு…

பிக்பாஸை விட்டு வெளியே வந்தவுடன் மீரா யாரோட இருக்கார் பாருங்க : திட்டி தீர்க்கும் ரசிகர்கள்!!

மீரா

பிக்பாஸிலிருந்து நேற்று முன்தினம் மீரா வெளியேற்றப்பட்டார். இவர் வெளியேற்றப்பட்டதற்கு முக்கிய காரணமே சேரனைப் பற்றி இவர் சொன்ன விதம் தான், அதன் காரணமாகவே ஒரே நாளில் ஷாக்சி தப்பி மீரா வெளியேற்றப்பட்டார்.


இதனால் வெளியேற்றப்பட்ட அவர், எந்த ஒரு ஊடகத்திற்கும் பேட்டி கொடுக்காமல் இருந்ததால், இவர் சீக்ரெட் ரூமில் அடைக்கப்பட்டாரா? என்ற சந்தேகம் எழுந்தது.

இந்நிலையில் மீரா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி என்று கூறி, ஒரு ஹாட்டான புகைப்படத்தை பதிவேற்றம் செய்துள்ளார்.

இதைக் கண்ட இணையவாசிகள் நீ செய்தது தவறு என்று அவருடைய கமெண்ட்டில் திட்டி வருகின்றனர். அதுமட்டுமின்றி அவர் தன்னுடைய ஸ்டோரியில் யாரோ ஒரு இளைஞனோடு இருப்பது போன்றும், அதற்கு மீரா ஒரு மாதிரி ரியாக்‌ஷன் கொடுப்பது போன்றும், உள்ளது.

அதைக் கண்டதும் இணையவாசிகள் வெளியில் வந்தும் கூட சேரனிடம் மன்னிப்பு கேட்கவில்லை, அதற்கு இது வேறா என்றும் திட்டி வருகின்றனர்.

மீரா மிதுன் பல பேரை ஏமாத்தியிருக்கா : பல்வேறு ரகசியங்களை உடைத்த நெருங்கிய தோழி!!

மீரா மிதுன்

மீரா மிதுன் குறித்து யாருக்கும் தெரியாத பல திடுக்கிடும் தகவல்களை அவரின் முன்னாள் தோழி நிஷா ஷெரீப் பகிர்ந்து கொண்டுள்ளார். தனியார் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், மீரா யார் சொல்வதையும் காது கொடுத்து கேட்க மாட்டார். தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என இருப்பார்.

அவளுக்காக இரண்டு முறை பேஷன் ஷோ செய்து கொடுத்தேன், ஆனால் அதற்கு பணம் கொடுக்காமல் அவர் என்னை ஏமாற்றிவிட்டார், இதன்பின்னர் அவருக்காக நான் ஷோ நடத்தவில்லை.

பின்னர் என்னை பற்றி மற்றவர்களிடம் அவர் தவறாக பேசினார் என்பதை என் நண்பர் மூலம் தெரிந்து கொண்டேன். இதிலிருந்து அவருடன் பேசுவதை விட்டு விட்டேன், அவரே போன் செய்தால் பேசுவேன்.

இன்ஸ்டாகிராமில் ஒருவர் எனக்கு மெசேஜ் அனுப்பினார், மீரா மிதுனுடன் நான் வெளியில் சென்றேன், என்னிடம் அவர் பத்தாயிரம் ரூபாய் வாங்கி கொண்டு ஏமாற்றிவிட்டார் என கூறினார்.

அவளால் வாழ்க்கையில் ஏமாந்து பாதிக்கப்பட்டவர்கள் ஏராளமானவர்கள் உள்ளார்கள். நண்பர்கள் உறவினர்கள் என பலரை அவர் ஏமாற்றியுள்ளார் என கூறியுள்ளார்.

ஜாக்குலினை காக்க வைத்த வெள்ளித்திரை : மீண்டும் அழைத்துக் கொண்ட சின்னத்திரை!!

ஜாக்குலின்

கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளினியாக தொலைக்காட்சி ஏரியாவில் அறிமுகமான ஜாக்குலினுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். இவருக்கு என்று பல ரசிகர் ஆர்மிகள் உருவாகியுள்ள நிலையில், அம்மணிக்கு வெள்ளித்திரை அழைப்புகளும் ஏராளமாக வர தொடங்கியது.

இதையடுத்து நயன்தாரா நடிப்பில் உருவான ‘கோலமாவு கோகிலா’ படத்தில் அவருக்கு தங்கையாக நடித்த ஜாக்குலின், சினிமாவில் ஹீரோயின் அவதாரம் எடுக்க காத்துக் கொண்டிருந்தார். ஆனால், அவர் எதிர்ப்பார்த்தபடி நல்ல வாய்ப்புகள் எதுவுமே அவரை தேடி வரவில்லை.

வரும் வாய்ப்புகள் அனைத்தும் உப்புமா படங்களாகவும், அல்லது ஹீரோயின் தங்கை, தோழி என்ற குணச்சித்திர வேடங்களாகவே வந்ததால் அம்மணி நொந்து போய்விட்டால்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியான ‘கோலமாவு கோகிலா’ படத்திற்குப் பிறகு, சுமார் ஒரு வருடமான சினிமாவில் நல்ல வாய்ப்பு கிடைக்கும் என்று காத்துக் கொண்டிருந்த ஜாக்குலினுக்கு இதுவரை அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காததால், வெறுத்துப் போனவர் தற்போதும் மீண்டும் சின்னத்திரைக்கே திரும்பிவிட்டார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் ‘தேன்மொழி பி.ஏ’ என்ற புதிய தொடரில் தேன்மொழி என்ற கதாபாத்திரத்தில் ஜாக்குலின் நடிக்கிறார். இந்த தொடர் விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது.