பிக்பாஸ் சேரன் உண்மையில் யார் தெரியுமா : பல விசயங்களை சொன்ன பிரபல நடிகை!!

பிக்பாஸ் சேரன்

தற்போது முக்கிய டிவி சானலில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்கேற்றிருப்பவர் இயக்குனர் சேரன். அவர் மீது மீரா மிதுன் சில தவறாக புகார் கூறியது பலருக்கும் முகம் சுளிப்பை உண்டாக்கியுள்ளது.

இந்நிலையில் பிக்பாஸ் சேரன் பற்றி நடிகை சங்கவி நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார். சேரனை எனக்கு இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் நாட்டாமை படத்தில் உதவியாளராக பணியாற்றிய போதிலிருந்தே தெரியும். அவர் நல்ல மனிதர், நண்பர், அற்புதமான இயக்குனர்.

என் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர். இன்னும் என் மனதில் இருக்கிறார். அவருக்கும் அவரின் குடும்பத்திற்கும் என் வாழ்த்துக்கள். பிக்பாஸ் அவர் வெற்றி பெற்றால் எனக்கு மகிழ்ச்சியே.

சேரன் அடிக்கடி கோப்படும் கேரக்டர் அல்ல. உதவி இயக்குனர்கள் மற்றவர்கள் என எல்லோரிடம் இருக்கும் திறமையை வெளிக்கொண்டுவருவார் என சங்கவி கூறியுள்ளார்.

தொழிலதிபருக்கு வந்த ஆசை : நயந்தாராவுக்காக பேசப்பட்ட 10 கோடி!!

நயந்தாரா

தென்னிந்தியா சினிமாவின் நம்பர் ஒன் நடிகையாக இருந்தாலும், தமிழ்ப் படங்களில் நடிப்பதில் தான் நயன்தாரா தீவிரம் காட்டி வருகிறார். இருப்பினும், சில தெலுங்குப் படங்களிலும் நடித்து வரும் அவர்,

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பதோடு, விஜய், ரஜினி, சிரஞ்சீவி போன்ற முன்னணி ஹீரோக்களின் படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ள தமிழகத்தை சேர்ந்த பிரபல துணிக்கடை உரிமையாளர் தன்னுடன் ஜோடியாக நயன்தாரா நடிக்க வேண்டும், என்று விரும்பியுள்ளார்.

இதற்காக சம்பளமாக நயன்தாராவுக்கு ரூ.10 கோடி வழங்குவதாக கூறினாராம். ஆனால், நயனோ பணத்தை பார்க்காமல், அந்த தொழிலதிபருடன் நடித்தால் தனது இமேஜ் டேமேஜாகிவிடும் என்று நோ சொல்லிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே, அந்த தொழிலதிபருடன் விளம்பர படங்களில் நடித்த நடிகைகள் கூட படத்தில் நடிக்க முடியாது, என்று கூறியதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது இந்த ரூ.10 கோடி மேட்டர் குறித்து கோடம்பாக்கம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்த தகவல் உண்மையா அல்லது வதந்தியா, என்பது இதுவரை உறுதியாகவில்லை என்றாலும், அந்த துணிக்கடை தொழிலதிபர் ஹீரோவாவதும், அவருக்காக ஹீரோயின் தேடுதல் வேட்டை நடப்பதும் உறுதியான தகவல் என்றே கூறப்படுகிறது.

லாஸ்லியாவுக்கு கொஞ்சம் கூட அப்பா பீல் இல்ல : வைரலாகு வீடியோவால் சேரனுக்கு குவியும் ஓட்டு!!

சேரனுக்கு குவியும் ஓட்டு

பிக்பாஸ் வீட்டில் எப்போதும் என்னுடைய அப்பா சேரன் அப்பா தான் என்று லாஸ்லியா கூறுவர். மோகன் வைத்தியா எலிமினேட் ஆன போது கூட, கமல் யார் யார் எலிமினேட் ஆக வேண்டும் நினைக்கிறீர்கள் சேரன் அப்பாவா? இல்லை மோகன் அப்பாவா என்ற போது, கொஞ்சமும் யேசிக்காமல் லாஸ்லியா சேரன் அப்பா தான் என்று கூறினார்.

இதனால் நிகழ்ச்சியைக் கண்ட ச்..சே என்னா பொண்ணுப்பா என்று லாஸ்லியா மீது அன்பை வெளிப்படுத்தினர். அவருக்கு ஓட்டை வாரி வழங்கினர்.

இந்நிலையில் நேற்று நடந்த நாட்டாமை டாஸ்க்கின் போது, மதுமிதாவுடன் ஏற்பட்ட பிரச்சனையால், சேரன் சோகத்தில் இருக்கும் போது லாஸ்லியா அதை கண்டுகொள்ளாமல் செல்கிறார்.

இதை இணையவாசி ஒருவர் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட, சேரன் அப்பா பாவம் அவர் நியாயத்தை தான் பேசி வருகிறார்.

ஆனால் வர..வர.. இந்த லாஸ்லியா பொண்ணு சரியில்லை இது நாள் வரை நடித்து கொண்டிருந்தாளோ என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனால் லாஸ்லியாவிற்கு முன்பு இருந்த ரசிகர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவது மறுக்க முடியாத உண்மை.

காதல் தோல்வியால் மன உளைச்சல் : வருங்கால கணவருக்கு நிபந்தனை போடும் ராஷ்மிகா!!

ராஷ்மிகா

கீதா கோவிந்தம் படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் ராஷ்மிகா. அந்தப்படம் மிகச் சிறப்பாக ஓடியதால் படத்தில் நடித்த ராஷிமிகாவும் பிரபல ஆனார்.


அதன் பின், தற்போது, அவர், அதே விஜய் தேவரகொண்டாவுடன் மீண்டும் இணைந்து, டியர் காம்ரேட் படத்தில் நடித்திருக்கிறார். தமிழ், கன்னடம், இந்தி, தெலுங்கு என நான்கு மொழிகளில் ஒரே நேரத்தில் இப்படம் இன்று வெளியாகிறது.

இந்நிலையில், பிரபல ஊடகம் ஒன்றுக்கு நடிகை ராஷ்மிகா பேட்டி அளித்துள்ளார். அதில், தன்னுடைய கணவர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்பது குறித்து அவர் கூறியிருக்கிறார்.

அதில், அவர் கூறியிருப்பதாவது, எனது வருங்காலக் கணவர் எப்போதும் உண்மையைப் பேசுபவராக இருக்க வேண்டும். இனியாகவும் பேச வேண்டும். என்னுடைய உணர்வுகளை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.

அவருடைய உணர்வுகளை புரிந்து கொண்டு கட்டாயம், அவர் சொல்படி நடப்பேன். என்னுடன், அவர் அதிக நேரம் செலவிட வேண்டும். மற்றபடி, ஒருவரை மற்றொருவர் புரிந்து கொண்டாலே போதும்; சண்டை-சச்சரவுகள் இருக்காது. இருவருக்குமான வயது வித்தியாசம், ஒரு பொருட்டே அல்ல. இவ்வாறு ராஷ்மிகா மந்தனா கூறியிருக்கிறார்.

முன்னதாக, தன்னுடன் நடித்த ரக்ஷித் ஷெட்டி என்பவரை, நடிகை ராஷ்மிக மந்தனா காதலித்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து, 2017ல், நிச்சயதார்த்தமும் செய்து கொண்டனர். பின் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைத் தொடர்ந்து, இருவரும் பிரிந்து விட்டனர்.

இந்த காதல் தோல்வியைத் தொடர்ந்துதான், தனக்கு வரும் கணவர் எப்படி இருக்க வேண்டும் என்றெல்லாம், ராஷ்மிகா நிபந்தனை விதிக்கத் துவங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஆமா நான் கவினை தெரிஞ்சே சைட் அடிக்குறேன் : காதலை ஏற்றுக்கொண்ட லொஸ்லியா!!

காதலை ஏற்றுக்கொண்ட லொஸ்லியா

பிக் பாஸ் வீட்டில் இருந்து வனிதா சென்ற பிறகு படு போராக சென்று கொண்டு இருந்தது. ஆனால், நேற்றைய நிகழ்ச்சியில் சாண்டி மற்றும் மதுமிதாவிற்கும் இடையே நிகழ்ச்சியில் சண்டையால் பிக் பாஸ் வீடே இரண்டாக ஆகி விட்டது. இதுநாள் வரை அமைதியாக இருந்த மது நேற்று ருத்ர தாண்டவம் ஆகிவிட்டார்.

இது ஒரு புறம் இருக்க பிக் பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோக்கள் எப்படியோ இணையத்தில் தினமும் வெளியாகிவிடுகிறது. அந்த வகையில் இன்றைய எபிசோடின் மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில், குறிப்பாக ஆரம்பத்தில் அபிராமியுடன் காதல் கிசுகிசுக்கப்பட்ட கவின் பின்னர் சாக்ஷியுடன் ரொமான்ஸ் செய்ய ஆரம்பித்தார். இதனால் பார்வையாளர்களே மிகுந்த வெறுப்புள்ளாகினர். பின்னர் நெட்டிசன்ஸ் பலரும் பிளே பாய் கவின் என்று மோசமாக விமர்சித்தனர்.

இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள மூன்றாவது ப்ரோமோ வீடியோவில் மதுமிதா மற்றும் ரேஷ்மா இருவரும் லாஸ்லியாவை கவினுடன் இணைத்து கிண்டல் செய்கின்றனர்.

இதனால் லாஸ்லியா கவினுடன் சென்று பஞ்சாயத்து வைக்க, எப்போதும் லாஸ்லியாவிற்கு பரிந்து பேசும் கவின் ‘அந்த புள்ளை தான் வந்த முதல் நாளிலே சொல்லிடிச்சே’ என்று கூற, அதற்கு லாஸ்லியா முன்ன தெரியாமல் அடிச்ச, இப்போ தெரிந்தே சைட் அடிக்கிறேன் என்று கூறுகிறார்.

இதை வைத்து பார்க்கும் போது கவினின் அடுத்த ரூட் லொஸ்லியாவுடன் தான் என்பது தெள்ளத்தெளிவாக புரிகிறது. எனவே அடுத்த ஒரு வாரத்திற்கு லெஸ்லியா – கவின் ரொமான்ஸ் பிக்பாஸில் ஓடும்.

மீண்டும் பிக்பாஸ் வீட்டில் நுழைந்த போலீஸ் : கைதாகும் முக்கிய போட்டியாளர்?

மீரா மிதுன்

பிக் பாஸ் 3ல் பங்கேற்றுள்ள நடிகை மீரா மிதுனிடம் விசாரணை நடத்த போலீஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளது. பிக்பாஸ் செட் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் எழும்பூர் காவல்நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மிஸ் தமிழ்நாடு 2019 நடத்துவதாக கூறி, பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாகப் புகார் வந்த நிலையில் அது பற்றிய விசாரணை தான் போலீஸ் மேற்கொண்டு வருகின்றனர்.

மீரா மிதுன் கைத்தவாரா என்பது இன்னும் கேள்விக்குறியாக உள்ளது.

Actress Meera Mithun Hot Photoshoot HD Wallpapers

மகளின் செயலால் தனது வாழ்க்கையையே இழந்த சேரன் : இவ்வளவு சோகமா?

வாழ்க்கையையே இழந்த சேரன்

பிக்பாஸ் போட்டியாளர்களின் குடும்பங்களை பற்றிய தகவல்கள் தற்போது வைரலாக பேசப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இயக்குனர் சேரனின் குடும்பத்தை பற்றி பார்த்தால், சேரனின் மனைவியின் பெயர் செல்வராணி. மூத்த மகளின் பெயர் நிவேதா ப்ரியதர்ஷினி. இளைய மகளின் பெயர் தாமினி.

இதில் இளைய மகள் தாமினி சேரனின் பேச்சை கேட்காமல் ஒருவரை காதலித்து அவருடன் சென்றுவிட்டார். இந்த பிரச்சனையினால் சேரன் முழுவதுமாக மனம் உடைந்துவிட்டராம்.

இதிலிருந்து மீளவே அவருக்கு மட்டுமில்லாமல் அவரது குடும்பத்திற்கே பல வருடங்கள் ஆகியுள்ளது. இதனால் தான் அவரால் முன்பு கொடுக்கப்பட்ட ஆட்டோகிராப், பொக்கிஷம் போன்ற தரமான படங்களை தற்போது கொடுக்க முடியவில்லையாம். இவரது இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திருமணம் படமும் அவ்வளவாக ஒடவில்லை.

இதையெல்லாம் மறக்கவும் மீண்டும் புத்துயிர் பெறவும் தான் அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளாராம். இதையே அவரது நண்பர் இயக்குனர் சமுத்திரகனியும் கடந்த மாதம் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

மீராவின் இடுப்பை பிடித்து தூக்கிய சேரன் : புதிய சர்ச்சை!!

புதிய சர்ச்சை

பிக்பாஸ் வீட்டில் நேற்று டாஸ்க் இல்லாத போது போட்டியாளர்களான் சேரன், லாஸ்லியா, மதுமிதா மற்றும் சிலர் விளையாட்டுத்தனமாக ஓடி விளையாடினர்,

அப்போது லாஸ்லியா, மீரா ஆகியோர் ஓடிய போது, சேரன் மீராவின் இடுப்பை பிடித்து தூக்கியுள்ளார். இந்த விளையாட்டு டாஸ்க் முடிந்த பின்னர் மீரா, சேரன் என்னுடைய இடுப்பை பிடித்து தூக்கினார்.

இதனால் எனக்கு ஒரு மாதிரி இருந்தது என்று அனைவர் முன்னிலையிலும் கூறினார். இதை சற்றும் எதிர்பார்க்காத சேரன் நான் அப்படி செய்திருந்தால், என்னை மன்னித்துவிடு என்று கூறினார்.

அதற்கு மீராவோ நீங்கள் வேண்டுமென்றே பண்ணீனார் என்று கூறினார். இதனால் மிகுந்த வேதனையடைந்த சேரன் எனக்கு மகள்கள் இருக்கிறாள். ஒரு டைரக்டராக நல்ல பெயர் உண்டு, மகள்கள் இருக்கிறாள் என்று கதறி அழுதார்.

மெர்சல் நடிகை நித்யா மேனன் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

நடிகை நித்யா மேனன்

விக்ரமின் கடாரம் கொண்டான் படத்திற்கு தடை விதித்த நாடு : கடும் வருத்தத்தில் ரசிகர்கள்!!

கடாரம் கொண்டான்

நடிகர் விக்ரம் மற்றும் அக்ஷரா ஹாசன் நடித்துள்ள கடாரம் கொண்டான் படம் நேற்று முன்தினம் திரைக்கு வந்தது.

மலேசியாவில் நடப்பது போல எடுக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் கடாரம் கொண்டான் மலேசியாவில் வெளியாகவில்லை.

Film Censorship Board of Malaysia இந்த படத்திற்கு தடை விதித்துள்ளது என படத்தை விநியோகிக்கும் லோட்டஸ் பைவ் ஸ்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் அங்கு உள்ள ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.