பிக் பாஸ் சீசன் 3 போட்டியில் நேற்று முன்தினத்துடன் மூன்று போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டிருக்கும் நிலையில், புதிய போட்டியாளர்களை களம் இறக்க பிக் பாஸ் முடிவு செய்துள்ளார்.
இதற்கிடையே, பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான இலங்கையை சேர்ந்த தர்ஷனை காதலிப்பதாக கூறி நடிகை சனம் ஷெட்டி பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதோடு, தர்ஷனுடன் தான் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.
சனம் ஷெட்டியின் இந்த பேட்டியால் தர்ஷன் மீது ரசிகர்களின் பார்வையும் பட ஆரம்பித்திருக்கிறது. இந்த நிலையில், சிம்புவை சமீபத்தில் சந்தித்த சனம் ஷெட்டி, பிக் பாஸ் போட்டியாளர்கள் ஒவ்வொருவரை பற்றியும் பேசியதோடு, சிம்புவுடன் நெருக்கமாக புகைப்படம் எத்துக் கொண்டு அதை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்க்தை பார்த்து கலாய்க்க தொடங்கியிருக்கும் நெட்டிசன்கள், “தர்ஷனை காதலிப்பதாக அறிவித்த சனம் ஷெட்டி, அதற்குள்ளே சிம்பு வசம் சென்றுவிட்டாரே” என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள். வைராகி வரும் அந்த புகைப்படம் இதோ,
பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் தமிழ் பிக் பாஸ் சீசன் 3 யில் இதுவரை மூன்று போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.
கடந்தவார எலிமினேஷன் ரவுண்டில் மோகன் வைத்யா வெளியேற்றப்பட்டார். இதையடுத்து புதிய போட்டியாளர்களாக யார் களங்க இறப்போகிறார்கள் என்பதை அறிந்துக் கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளார்கள். விரைவில் புதிய போட்டியாளர்களை களம் இறக்கும் முணைப்பில் நிகழ்ச்சி குழுவும் ஈடுபட்டுள்ளது.
இதற்கிடையே தெலுங்கு பிக் பாஸ் சீசன் 3 நேற்று தொடங்கியது. நாகர்ஜூனா தொகுத்து வழங்கும் இதில் புதிய போட்டியாளர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதில், தமிழ் சினிமாவில் பிரபல நடன இயக்குநராக உள்ள பாபா பாஸ்கரும் இடம் பிடித்துள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கில் ஏகப்பட்ட படங்களில் நடன இயக்குநராக பணியாற்றி வரும் பாபா பாஸ்கர், ஜி.வி.பிரகாஷ் குமார், பார்த்திபன் நடித்த ‘குப்பத்து ராஜா’ படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விவாகரத்துக்குப் பிறகு நடிப்பதில் தீவிரம் காட்டி வரும் அமலா பால், தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, இந்தி ஆகிய மொழித் திரைப்படங்களில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வந்தவர், தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பதில் பேரார்வமாக இருக்கிறார்.
ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதையோடு வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் அமலா பால், சம்பள விஷயத்திலும் சில சலுகைகளை வழங்க ரெடியாக இருக்கிறாராம். அவரது இத்தகைய கனவை நினைவாக்குவது போல அவருக்கு கிடைத்த படம் தான் ‘ஆடை’.
ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்திருக்கும் அமலா பால், அப்படத்தை பெரிதும் எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தார். அப்படத்திற்குப் பிறகு ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகள் அனைத்தும் தன்னையே தேடி வரும் என்பது அவரது அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்ததோடு,
தற்போது நம்பர் ஒன் நடிகையாக இருப்பதோடு, ஹீரோயின் சப்ஜக்ட் படங்களில் அதிகமாக நடிக்கும் நயன்தாராவின் இடத்தையும் பிடித்துவிடலாம் என்ற நம்பிக்கையை அவருக்கு ஆடை கொடுத்திருந்தது.
இதற்கிடையே, 19 ஆம் தேதி வெளியாக இருந்த ஆடை படம், தயாரிப்பாளரின் கடன் பிரச்சினையால் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் பதறிய அமலா பால், படம் வெளியானால் தான் தனது கனவு நினைவாகும் என்று படத்தின் மீதான பிரச்சினை தீரும் வரை படக்குழுவினருடனே பயணித்தவர் ஒரு கட்டத்தில்,
பணம் தான் பிரச்சினை என்பதை அறிந்தவர், தனது சொந்த பணம் சுமார் ரூ.40 லட்சத்திற்கு மேல் வழங்கி பிரச்சினையை தீர்த்து படம் வெளியாக உதவி செய்ததாக கூறப்படுகிறது. அமலா பால் நம்பியிருந்த ‘ஆடை’ அவரை நயன்தாரா இடத்திற்கு கொண்டு செல்கிறதா இல்லையா, என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
பிக்பாஸில் நேற்று போட்டியாளர்கள் அனைவருக்கும் வித்தியாசமான டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது பிக்பாஸ் தரும் சீட்டில் உள்ள பாடல் வரிகளை ஒரு போட்டியாளர் மற்றொரு போட்டியாளருக்கு டெடிக்கேட் செய்ய வேண்டும். மேலும் பாடியும் காட்ட வேண்டும்.
அந்த வகையில் கவின் திருமலை படத்தில் வரும் நீ என்பது எதுவரை… பாடலை லொஸ்லியா முன்பே சாக்ஷிக்கு டெடிக்கேட் செய்து ஷாக்காக்கினார்.
அபிராமியோ பிக்பாஸிற்கு வந்த நாள் முதல் தனது க்ரஷ்ஷாக நினைத்துகொள்ளும் முகேனுக்கு குஷி படத்தில் வரும் கட்டிப்புடி கட்டிப்புடிடா… என்ற கவர்ச்சி பாடலை டெடிக்கேட் செய்து தனது காதல் வலையை மறுபடியும் வீசியுள்ளார். இதை முகேனும் சிரித்தப்படி ஏற்று கொண்டார்.
தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் அடுத்தடுத்து புதுப்படங்களை திரு ட்டுத்தனமாக ஆன் லைனில் வெளியிடுகிறது. ஸ்டார் விஜய் டி.வி.யில் வெளியாகும் பிக் பாஸ் தொடரையும் விட்டு வைக்கவில்லை. கடாரம் கொண்டான், தி லயன் கிங் படங்களை ரிலீஸ் நாளிலேல்யே வெளியிட்டு அதிர வைத்திருக்கிறது தமிழ் ராக்கர்ஸ்.
அமலாபால் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியான ஆடை திரைப்படம் முதல் நாளில் காலையில் வெளியாக வில்லை. அதனால் அன்று அந்தப் படம் தமிழ் ராக்கர்ஸில் வெளியாவதில் இருந்து தப்பியது.
இது ஒருபுறம் இருக்க, சின்னத்திரையில் கொடிகட்டிப் பறக்கும் பிக்பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சியையும் ஒவ்வொரு நாளும் உடனுக்குடன் தமிழ் ராக்கர்ஸ் தனது இணையதளத்தில் வெளியிட்டு, நிகழ்ச்சி தயாரிப்பாளர்களை அதிர் ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது.
தமிழ் ராக்கர்ஸ் அவ்வப்போது தனது இணையதள முகவரியை மாற்றிக் கொண்டு இந்த அட்ராசிட்டியை அரங்கேற்றுவதால், அதற்கு மூக்கணாங்கயிறு போட முடியாமல் தடுமாறுகிறார்கள் சினிமா உலகினர்.
இந்தச் சூழலில் 20-ம் தேதி மாலையில் ஆடை படத்தையும் தமிழ் ராக்கர்ஸ் தனது இணையதளத்தில் வெளியிட்டது.
பிக்பாஸ் வீட்டில் இருக்கும் கவீன் அங்கிருக்கும் ஷாக்சி, அபிராமி, ஷெரீன் மற்றும் லாஸ்லியா ஆகிய நான்கு பெண்களிடமும் நண்பனாக பழகி வந்தார். ஆனால் இவர்களில் ஷாக்சியிடம் மட்டும், கவீன் கொஞ்சம் நெருக்கமாக பழகியிருக்கிறார். ஆனால் அதைப் பற்றி பிக்பாஸ் எதையும் காட்டவில்லை, ஆனால் சாக்லெட் விஷயத்தின் போது தான் இதன் உண்மை வெளிவந்தது.
அப்போது தான் ஷாக்சி கவீனை காதலிக்கிறார் எனவும், கவீனும் அது போன்று தான் அவரிடம் பேசு வந்துள்ளார் என்பது மற்ற போட்டியாளர்களுக்கு தெரியவர, லாஸ்லியாவும் கவீனை விட்டு விலகிறார். அதன் பின் பிக்பாஸ் வீடே, அழுகை வீடாக மாறியது.
இந்நிலையில் கமலிடம் ஷாக்சி கூறுகையில், சார் அவன் என்னிடம் மற்ற பெண்களிடம் பழகுவது போன்று பழகவில்லை சார், என்கிட்ட அப்படியெல்லாம் பேசினான் சார், அது எல்லாம் என்ன சும்மாவா? எனக்கு ஒரு போசசிவ்னஸ் இருக்கு சார் என்று கண்கலங்க, கமல் சார் உணர்வுகளில் விளையாடதீர்கள் என்று கூறினார்.
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். கடந்த இரண்டு சீசனும் மக்களை வெகுவாக கவர்ந்தது. அதே போல் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியும் மக்களை கவர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
கடந்த இரண்டு சீசனை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசனே இந்த முறையும் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த முறை 16 பிரபலங்கள் போட்டியாளர்களா கலந்துகொண்டார்கள். இந்த நிலையில் புகையிலை ஒழிப்பு மக்கள் அமைப்பின்’ ஒருங்கிணைப்பாளர் சிரில் அலெக்சாண்டர், சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து தனியாக புகார் அனுப்பியுள்ளார்.
அதில் பிக் பாஸ் வீட்டில் உள்ள புகைப் பிடிக்கும் பகுதி திறந்த வெளியில் பார்வையாளர்கள் பார்க்கும் வகையில் அமைந்துள்ளது, புகை பிடிக்கும் பகுதி அமைக்க ஓட்டல்கள், விமான நிலையங்கள் போன்ற ஒரு சில இடங்களுக்குத்தான் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் போன்று கோடிக்கணக்கானோர் பார்க்கும் நிகழ்ச்சிகளில் இடம்பெற அனுமதி இல்லை.
இவை புகையிலை ஒழிப்பு சட்டத்திற்கு எதிரானது. எனவே, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல் மீதும், தொலைகாட்சி நிறுவனத்தின் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என புகாரில் கோரியுள்ளார்.
பிக்பாஸின் தற்போதைய சீசனில் பல காதல்கள் மறைமுக நடைபெற்று வருகின்றன. அதில் ஒன்று லொஸ்லியா- தர்ஷன். இருவரும் அண்ணன் தங்கையாக தான் பழகி வருகின்றனர் என்று தர்ஷனின் பெற்றோர்கள் கூறினாலும் லொஸ்லியா இன்று செய்த காரியம் சிறிது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
இன்று வெளியான ப்ரோமோவிலேயே ஷெரின் தர்ஷனுக்காக சுட்ட ஹார்ட்டின் சாப்பாத்தியை லொஸ்லியா குத்துவதையும் மறுபடியும் சுட்டால் அதையும் குத்துவேன் என கூறுவதையும் பார்த்திருப்பீர்கள். பலரும் இந்த செயலை பார்த்து லொஸ்லியா ஓவியாவாக மாறுவதற்கு முயற்சி செய்கிறார் என்று கூறினர்.
இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சியில் லொஸ்லியா ஏன் அவ்வாறு செய்தேன் என்பதற்கான காரணத்தை சேரனிடம் கூறுகையில், எனக்கு அது பிடிக்கவில்லை. நான் இவனை(தர்ஷனை) சாப்பிடுவதற்கு அழைத்து கொண்டிருந்தேன். நான் சாப்பிட்ட பின் பேச வேண்டும் என்று அழைத்து கொண்டிருந்தேன்.
ஆனால் இவன் வரவில்லை. அதுவே கோபம் என்றார். அதற்கு நீ தர்ஷனை தானே குத்த வேண்டும் என சேரன் கேட்க, எனக்கு ஷெரீன் சுட்ட சப்பாத்தி பிடிக்கவில்லை, அதற்கு காரணம் கிடையாது. அடுத்தும் சுட்டாள், மீண்டும் குத்துவேன் என்று கூறினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி மூன்று வாரங்களாகிய நிலையில், முதல் வாரத்தில் ஃபாத்திமா பாபுவும், இரண்டாவது வாரத்தில் வனிதாவும் எவிக்ட் செய்யப்பட்டு வெளியேறினர்.
இந்நிலையில், இந்த வாரம் மோகன் வைத்யா, அபிராமி, மீரா, சரவணன் ஆகியோர் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளனர். அதில், மீரா இந்த வாரம் வெளியேற வேண்டும் என பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், சமூக வலைதளத்தில் பிக்பாஸ் லோஸ்லியா சம்பளம் எவ்வளவு வாங்கிறார் என்று நம்மிடம் நமது வாடிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். அதன்படி, நாம் விசாரித்ததில், லோஸ்லியா வாரம் ஒன்றுக்கு 1,40,000 ரூபாய் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.
கவின் – ஒரு நாளுக்கு 30ஆயிரம் ரூபாயும், தர்சன் – ஒரு நாளுக்கு 15 ஆயிரம் முகேன் ராவ்- ஒரு நாளுக்கு15 ஆயிரம், மீரா, அபிராமி, மதுமிதா, ரேஷ்மா, சாக்ஷி – ரூ20 ஆயிரம் நாள் ஒன்றுக்கு, வனிதா ,ஷெரின் – ஒரு நாளுக்கு 30 ஆயிரம், மோகன் – ஒரு நாளுக்கு 40 ஆயிரம், டான்ஸ் மாஸ்டர் சாண்டி – ஒரு நாளுக்கு 40 ஆயிரம்,
சீனியர் செலிபிரிட்டிகளான சேரன், ஃபாத்திமா பாபு, சரவணன் ஒரு நாளுக்கு 50 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குவதாக கூறுப்படுகிறது.