பிக்பாஸில் கட்டிப்பிடிக்குறான்… தடவுறான் : என்ன நடக்குதுடா? வெளுத்து வாங்கிய பிரபல நடிகர்!!

வெளுத்து வாங்கிய பிரபல நடிகர்

பிக்பாஸ் சீசன் 3 இந்த நிகழ்ச்சியில் பெண்கள் அணியும் உடையைப் பற்றி சர்ச்சை இருந்து கொண்டே தான் இருக்கிறது. அது ஏன் பிக்பாஸ் வீட்டின் உள்ளே போட்டியாளராக இருக்கும் மதுமிதா கூட, ஆண்கள் இருக்கும் இடம், கொஞ்சம் உடை விஷயத்தில் மட்டும் கவனம் செலுத்துங்கள் என்று கூறியிருந்தார்.

ஆனால் அந்த விஷயத்தில் உடனே அங்கிருந்த பெண் போட்டியாளர்கள் அனைவரும் அவருக்கு எதிராக பேச, உடனே கமலும் அந்த வாரத்தின் உடை விஷயத்தில் எந்த ஒரு தவறும் இல்லை என்று கூறினார்.

மக்களோ பெண்கள் உடை அணியும் விதம் பிடிக்கவில்லை என்று கூறி வருகின்றனர். இந்நிலையில் பிரபல திரைப்பட நடிகரான காமெடி நடிகர் கூல் சுரேஷ், என்னடா அது பிக்பாஸ் வீடா? இல்ல வேறெதும்மா? கட்டிப்பிடிக்குறாங்கா? தடவுறாங்க என்று கூறிய வீடியோ வெளியிட்டுள்ளார்.

இப்படியும் நடக்கிறதா? விதியை மீறியதால் பிக்பாஸ் கொடுத்த தண்டனை!!

பிக்பாஸ் கொடுத்த தண்டனை

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியுலக தொடர்பு இல்லாமல் வீட்டுக்குள் 100 நாட்கள் இருக்கவேண்டும். மதுகுடிக்கக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது. ஆனால் புகை பிடிப்பவர்களுக்கு மட்டும் அதற்காக தனியாக ஒரு அறை வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் அந்த அறைக்குள் ஒருவர் மட்டுமே இருக்கவேண்டும் என விதி உள்ளதாம். ஆனால் சாக்ஷி உள்ளிட்ட சில போட்டியாளர்கள் அடிக்கடி கூட்டமாக அந்த அறைக்குள் சென்று இருக்கிறார்கள் என பிக்பாஸ் இன்று தண்டனை கொடுத்துள்ளார்.

லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க்கில் வாங்கிய மார்கில் 100 மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் போட்டியாளர்கள்அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ரசிகர்களை கவர்ந்த முக்கிய பட வாய்ப்பை தவறவிட்ட அமலா பால்!!

அமலா பால்

நடிகை சாவித்ரியின் வாழக்கை வரலாற்றை திரையில் கொண்டுவந்த படம் மகாநடி. தமிழில் அது நடிகையர் திலகம் என்ற பெயரில் வெளியானது. இதில் கீர்த்தி சுரேஷ் நடிப்பு இந்திய அளவில் பேசப்பட்டது. சினிமா ஜாம்பவான்களே பலரும் அவரை பாராட்டினர்.

தற்போது கீர்த்திக்கு பாலிவுட் பட வாய்ப்புகளும் வருகிறது இதனால் தான் என்று கூட சொல்லலாம். இந்நிலையில் இந்த பட வாய்ப்பு முதலில் தனக்கு தான் வந்தது என்று நடிகை அமலா பால்தெரிவித்துள்ளார்.

ஆனால் சொந்த பிரச்சனைகள் பல இருந்ததால் அதில் நடிக்க முடியாமல் போனது என கூறியுள்ளார் அவர். இந்த வாரம் திரைக்கு வரும் ஆடை படத்தின் விளம்பரத்திற்காக அவர் அளித்த பேட்டியில் தான் இப்படி கூறியுள்ளார் அமலா பால்.

2 வது திருமணத்திற்கு தயாரான அமலா பால் : காதலர் பற்றி மனம் திறந்தார்!!

அமலா பால்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக உயர்ந்த உடனேயே இயக்குநர் விஜயை திருமணம் செய்துக் கொண்டவர் நடிகை அமலா பால். திருமணத்திற்குப் பிறகு அவர் நடிக்க விரும்பினாலும், அவரது கணவரின் குடும்பத்தார் விரும்பாததால், குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்பட்டது.

பிறகு விஜயும், அமலா பாலும் விவாகரத்து பெற்றார்கள். விவாகரத்துக்குப் பிறகு இருவரும் அவர் அவர் வேலையில் பிஸியாக இருந்த நிலையில், இயக்குநர் விஜய் ஐஸ்வர்யா என்ற டாக்டரை சமீபத்தில் இரண்டாம் திருமணம் செய்துக் கொண்டார்.

விஜயின் திருமண அறிவிப்பு வெளியான நாள் முதல், அதிரடியான பதிவுகளை ட்விட்டரில் வெளியிட்டு வந்த அமலா பால், விஜய் திருமணத்தின் போது கூட, நிர்வாணமாக நடித்த தனது ‘ஆடை’ படம் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டாரே தவிர, தனது முன்னாள் கணவரின் திருமணம் குறித்து எதுவும் பேசவில்லை.

இந்த நிலையில், திடீரென்று தனது முன்னாள் கணவரின் இரண்டாவது திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்திருக்கும் அமலா பால், அப்படியே தனது காதலர் குறித்தும் மனம் திறந்திருக்கிறார்.

இது குறித்து பேட்டி ஒன்றில் கூறிய அமலா பால், “ஆடை படத்தின் கதையை கேட்டபோது கூட இந்த படத்தில் நடிக்கலாமா வேண்டாமா என அவரிடம்தான் முதலில் கேட்டேன். அதற்கு இந்த படத்தில் நடிக்க முதலில் நீ மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் உன்னை முழுமையாக தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். நான் தற்போது என் வேலையில் முழுமையாக கவனம் செலுத்தவும் அவரே காரணம்.

தாயால் தான் எதையும் எதிர்பார்க்காத அன்பை தர முடியும், தியாகம் செய்ய முடியும் என்று நினைத்திருந்தேன். ஆனால் என்னாலும் முடியும் என்று எனது அவர் நிரூபித்திருக்கிறார்.

எனக்காக அவர் பார்த்துக்கொண்டிருந்த வேலையை கூட விட்டு விட்டார். சினிமா எனக்கு எவ்வளவு பிடிக்கும் என்பது அவருக்கு தெரியும். ஆனாலும் ஒரு நாள் கூட என்னை பாராட்டமாட்டார். எனது படங்களை பார்த்துவிட்டு நீ ஒரு மோசமான நடிகை என திட்டினார். என்னுடைய மூன்றாவது கண்ணை திறந்தவர் அவர்தான்.

அவர் என் வாழ்வில் வந்த பிறகுதான் என் குறைகள் எனக்கு தெரிந்தது. என் வாழ்வின் உண்மை என் காதலர் தான்.” என்று தனது இரண்டாவது காதல் குறித்து அமலா பால் முதல் முறையாக மனம் திறந்திருக்கிறார். அதே சமயம், அந்த காதலர் யார்? அவருடன் திருமணம் எப்போது? ஆகியவை குறித்து எந்த தகவலும் அவர் கூறவில்லை.

பிக் பாஸ் வீட்டு பெட்ரூமில் நடக்கும் கொ டுமை : வனிதா பேட்டியால் கிளம்பிய சர் ச்சை!!

பிக் பாஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து பல்வேறு புகார்கள் வந்துக்கொண்டிருக்கிறது. குறிப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்பவர்களிடம் செக்ஸ் டீல் பேசப்படுவதாக தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் மீது பிரபல விஜே ஸ்வேதா ரெட்டி குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த நிலையில், தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முக்கியமான போட்டியாளராக திகழ்ந்த வனிதா விஜயகுமார், கடந்த வாரம் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கு நடக்கும் கொடுமை குறித்து அவர் பேட்டி ஒன்றில் கூறியிருப்பது பெரும் சர்ச் சையை ஏற்படுத்தியுள்ளது.

பிக் பாஸ் போட்டியை பரபரப்பாக நகர்த்துவதில் முக்கிய பங்கு வகித்த வனிதா, தனது அதிரடியான நடவடிக்கையால் மக்களிடம் கெட்ட பெயர் வாங்கினாலும், பிக் பாஸ் போட்டியில் முக்கிய பங்கு வகித்தார்.

ஆனால், அவரது ஆட்டம் ரொம்ப ஓவராக போனதாலும், அவர் செய்வது அனைத்தும் நாடகம் என்பது மக்கள் புரிந்துக் கொண்டதாலும், அவரை பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டார்கள்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட வனிதா, தற்போது ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். அதன்படி அவர் அளித்த பேட்டி ஒன்றில், ”பிக் பாஸ் வீட்டில் இரவு லைட் ஆப் செய்வது போல டிவியில் தான் காட்டுவார்கள்.

ஆனால், ஒரு சில நிமிடங்களிலேயே லைட் போட்டுவிடுவார்கள். அந்த வெளிச்சத்தில் தான் உறங்க வேண்டும். வெளிச்சத்தில் யாருக்கும் சரியான உறக்கம் வராததால், சரியாக தூங்காமல் பலர் கஷ்ட்டப்படுவார்கள்.” என்று கூறியிருக்கிறார்.

சரியான தூக்கம் இல்லை என்றால், அதுவும் இரவில் சரியாக தூங்கவில்லை என்றால் உடல் நிலையில் பாதிப்பு ஏற்படும். ஆனால், அது குறித்து கவலைப்படாமல் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் போட்டியார்களை இப்படி கொடுமைப்படுத்தியிருப்பது கண்டனத்துக்குரியது என்று பலர் கூறி வருகிறார்கள்.

ஏற்கனவே, பிக் பாஸ் போட்டியாளர்களின் சம்பளம் குறித்து பேசி பரபரப்பை ஏற்படுத்திய வனிதா, தற்போது பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கு எதிராக நடக்கும் கொ டுமை குறித்து பேசியிருப்பதால், அவர் மீது நிகழ்ச்சி ஒருங்கிணைப்பார்கள் கடுப்பாகி இருக்கிறார்களாம்.

சாண்டிக்கு பிளைன் KISS கொடுத்த மீரா : மோகன் வைத்தியா செய்த கேவலமான செயல்!!

சாண்டிக்கு பிளைன் KISS கொடுத்த மீரா..

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவீன் நடந்து கொள்ளும் விதத்தால் கடும் அப்செட்டில் இருக்கும், ஷாக்சி அது குறித்து இன்றைய எபிசோடில் சிறைச்சாலையில் இருந்த போது, ஷெரீனிடம் கூறி அழுது கொண்டிருந்தார்.

அப்போது அதே சிறைச்சாலையில் மற்றொரு கைதியாக இருக்கும் மீரா மிதுன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அவருக்கு எதிர் திசையில் சாண்டி, கவீன், முகன், தர்ஷன், மோகன் வைத்தியா ஆகியோர் ஏதோ பாடல் பாடி கிண்டல் அடித்துக் கொண்டிருந்தனர்.

இதைக் கண்ட மீரா உடனடியாக சாண்டிக்கு ஒரு பிளைன் கிஸ் கொடுக்க, அதைக் கண்ட சாண்டி அப்படியே, மோகன் வைத்தியா பக்கம் தள்ளிவிடுவது போல் செய்கை செய்தார்.

எப்போது ஒரு பெரிய ஆள் போன்று பேசிக் கொள்ளும் மோகன் வைத்தியா இந்த விஷயத்தில் மட்டும், கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல், அதை அப்படியே சாப்பிடுவது போல் செய்கை செய்தார்.

மற்ற விஷயங்களில் என்னை கிண்டல் செய்கிறார்கள். வயதுக்கு மரியாதை இல்லை என்று கூறும் மோகன் வைத்தியா இன்று மீரா கொடுத்த பிளைன் கிஸ் மட்டும் எப்படி? இதனால் மோகன் வைத்தியா உண்மையிலே அடுத்த சினேகன் என்றே தோன்றுகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இவர்களுக்கு இவ்வளவு சம்பளமா : லிஸ்ட் இதோ!!

பிக்பாஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 தற்போது 3 வது கட்ட எவிக்‌ஷனை நெருங்கி விட்டது. பாத்திமா பாபுவை தொடர்ந்து வனிதா வெளியேறினார். இவ்வாரம் யார் வெளியேறப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இதில் வந்ததிலிருந்தே சண்டைக்கு ஆளானவர்கள் மதுமிதா, அபிராமி, மீரா மிதுன் எனலாம்.

போட்டியாளர்கள் அனைவரின் முக மதிப்பு, பிரபலத்தன்மை கொண்டு தகதி அடிப்படையில் அவர்களுக்கு சம்பளம் பேசப்பட்டுள்ளதாம்.

இது ஒருபக்கம் இருக்க இவர்களில் யார் யாரின் சம்பளம் எவ்வளவு என ஒரு தகவல் உலாவி வருகிறது. ஆனால் இது எந்தளவிற்கு உண்மை என தெரியவில்லை. அது என்ன என பார்க்கலாம்..

சேரன் – ரூ 50 லட்சம் ( மொத்தமாக), அபிராமி, மதுமிதா, ரேஷ்மா, சாக்‌ஷி – ரூ 25 ஆயிரம் நாள் ஒன்றுக்கு / நபர்,  மோகன் வைத்யா, சாண்டி, கவின், சரவணன் – ரூ 35 ஆயிரம் நாள் ஒன்றுக்கு / நபர்,  மீரா மிதுன், ஷெரின் – ரூ 15 ஆயிரம் நாள் ஒன்றுக்கு / நபர், முகன் ராவ், தர்ஷன், லாஸ்லியா – ரூ 5 லட்சம்/ நபருக்கு ( மொத்தமாக).

பிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் : வச்சி செய்யும் நெட்டிசன்கள்!!

ஐஸ்வர்யா தத்தா

நடிகை ஐஸ்வர்யா தத்தா தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் பிக்பாஸ் 2 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட பின்பு அதிகளவில் பேசப்படும் நடிகையாக மாறினார்.

இருப்பினும், தனது முன் கோபத்தின் மூலம் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்தார் ஐஸ்வர்யா. பிக் பாஸ் நிகழ்ச்சியில், இவரும், இருட்டறையில் முரட்டு குத்து நடிகை யாஷிகா ஆனந்தும் நல்ல நண்பர்களாக இருந்தனர். நிகழ்ச்சி முடிந்தும் கூட இரண்டு பேரும் நட்போடுதான் இருந்து வருகிறார்கள்.

இந்நிலையில், ஐஸ்வர்யாவும், யாஷிகா ஆனந்தும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான ஆடை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில், தற்போது படுகவர்ச்சியான ஆடையை அணிந்து இதெல்லாம் ட்ரெஸ்ஸா என நெட்டிசன்கள் கிண்டலடிக்கும் அளவுக்கு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ஐஸ்வர்யா.

கவினுடன் நெருக்கமாக இருக்கும் லொஸ்லியா : ரசிகர்கள் அதிர்ச்சி!!

லொஸ்லியா

பிக் பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் இருந்தே கவினின் ரொமான்ஸ் காட்சிகள் தான் சூடுப்பிடித்து வருகின்றதுடன் பல விமர்சனங்களையும் எழுப்பியுள்ளது.

ஆரம்பத்தில் அபிராமியிடம் ஜொல்லு விட்டுக் கொண்டிருந்த கவின் தற்போது தனது முழு கவனத்தையும் இலங்கைப் பெண் லொஸ்லியா பக்கம் திருப்பியுள்ளார்.

கவின் எங்கு சென்றாலும் லொஸ்லியாவை அழைத்துக் கொண்டு சென்று விடுகிறார். நேற்றைய எபிஸோடிலும் கவின் மற்றும் லாஸ்லியா பெரும்பாலும் தனியாக அமர்ந்து பேசிக் கொண்டேதான் இருந்தார்கள்.

நேற்று போட்டியாளர்களுக்கு டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. அப்போது லாஸ்லியாவிடம் உங்களுக்கு யாரை பிடிக்கும் என்ற கேள்வி கேட்கப்பட்டது.

அவரும் கவினின் பெயரைத்தான் சொன்னார். அதேபோல கவினும் நீங்கள் யாரை நம்புவீர்கள் என்று கேள்விக்கு லாஸ்லியாவை தான் நம்புவேன் என்று கூறியிருந்தார். இப்படி இவர்கள் இருவரின் ரொமான்ஸ் மறைமுகமாக ஓடிக்கொண்டு இருக்கின்றனர்.

ஆரம்பத்தில் கவின் மீது பெரிதாக விருப்பம் இல்லாத லொஸ்லியா கடந்த சில காலமாக மிகவும் நெருக்கம் காண்பித்துதான் வருகிறார். இது ஈழத்து ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தும் விடயம் தான்.

40 வயதாகியும் திருமணம் செய்யாமல் இருப்பது ஏன் : சீரியல் நடிகையின் உருக்கமான காரணம்!!

நடிகை ஸ்ருதி 2009ம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் தென்றல் தொடர் மூலமாக அறிமுகமானார்.

அதுமட்டுமல்லாமல் அந்த தொடரில் துளசி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். இவர் ஒரு சில திரைப்படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

அதன் பின்னர் 2015 யில் “அன்னக்கொடியம் ஐந்து பெண்களும்”, “அபூர்வ ராகங்கள் ” போன்ற தொடர்களில் நடிகை ஸ்ருதி நடித்தார்.

இவரிடம் 40 வயதாகியும் இன்னும் ஏன் திருமணம் செய்யவில்லை என்று பலரும் கேட்டார்களாம். இவர் இதுபற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியதாவது

“எனக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது ஆனால் திருமணம் நடைபெறவில்லை ” என்று கூறி அதிலிருந்து மனம் வேதனையடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் திருமணத்திற்கு தற்போது சம்மதம் தெரிவித்துள்ளாராம். கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார்.