பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடந்த மோசமான செயல் : பொதுமக்கள் எதிர்ப்பு!!

மக்களிடன் பேவரைட் நிகழ்ச்சியாக விளங்கும் பிக் பாஸ் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில், நிகழ்ச்சியில் இடம்பெறும் சில மோசமான செயலால், தற்போது நிகழ்ச்சிக்கு மக்களின் எதிர்ப்பு குரல் ஒலிக்க தொடங்கியுள்ளது.

மதுமிதா, வனிதா என இரண்டு குழுக்களாக போட்டியாளர்கள் பிரிந்து சண்டைப்போட்டு வருகின்றனர். போட்டியாளர்களுக்கு இடையே ஏற்படும் சண்டை நிகழ்ச்சியை பரபரப்பாக நகர்த்தும் என்பதால், அந்த சண்டையை தான் பிக் பாஸ் நிகழ்ச்சி குழுவும் அதிகமாக போக்கஸ் செய்கிறது.

அந்த வகையில், நிகழ்ச்சியில் ஷெரின் மிக மோசமான வார்த்தைகளை பேசியது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

நிகழ்ச்சியை பார்த்த மக்கள் அனைவரும், ஷெரின் என்ன இவ்வளவு மோசமாக பேசுகிறாரே, என்று அவருக்கு கண்டனம் தெரிவித்ததோடு, நிகழ்ச்சியை ஒளிபரப்பும் விஜய் டிவிக்கு எதிராகவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

“பலரும் இந்த நிகழ்ச்சியை பார்க்கிறார்கள். அனைத்து வயதினரும் நிகழ்ச்சியை பார்க்கிறார்கள் என்பதை உணர்ந்து, சேனல் கொஞ்சமாவது பொறுப்புடன் நடந்துக் கொள்ள வேண்டும்” என்று மக்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

சமூக வலைதளங்களில் ஷெரின் பேசிய மோசமான வார்த்தைகளுக்காக அவர் கடுமையாக விமர்சிக்கும் நெட்டிசன்கள், ஷெரீனை நிகழ்ச்சியை விட்டு வெளியேற்ற வேண்டும், என்ற கோரிக்கையும் விடுத்துள்ளனர்.

வனிதா விவகாரத்தில் ஆதாரத்துடன் மாட்டிக் கொண்ட டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்!!

வனிதா, ராபர்ட் சில காலங்கள் காதலித்து வந்ததாக செய்திகள் வந்தது. இதை தொடர்ந்து தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் வனிதா சென்றுள்ளார்.

இந்நிலையில் ராபர்ட் வெளியே பல பேட்டிகளில் எனக்கும், வனிதாவிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை, அவர் பப்ளிசிட்டிக்காக தான் என்னை காதலிப்பதாக கூற சொன்னார் என தெரிவித்தார்.

ஆனால், ராபர்ட் வனிதாவின் பெயரை டாட்டூ எல்லாம் குத்தியிருந்த புகைப்படம் தற்போது வெளியாகி அவர் சொன்னது பொய் போல் காட்டியுள்ளது, இதோ…

பிக்பாஸ் வீட்டில் அபிராமியை சந்தித்த மனநல மருத்துவர் : அதிர்ச்சித் தகவல்!!

பிக்பாஸ் வீட்டிலிருந்து முதன்முதலாக வெளியேறிய பாத்திமா பாபு சக போட்டியாளர் அபிராமி குறித்து கூறியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் வீட்டிலிருந்து எலிமேனஷனில் யாரும் எதிர்ப்பாராத விதமாக பாத்திமாபாபு வெளியேறினார். இது பலருக்கும் ஷாக் தான

ஆனால், அதைவிட அவர் வெளியே வந்து கூறிய தகவல்கள் தான் எல்லோருக்கும் டபுள் ஷாக், அவர் கூறுகையில் ‘அந்த வீட்டில் அபிராமியின் செயல்பாடுகள் நார்மல் ஆகவே இல்லை.

அவரை அவரே நகத்தை வைத்து காயப்படுத்திக்கொண்டார், நான் வீட்டை விட்டு வெளியே செல்லவேண்டும் என்று அழுதார்.

பிறகு நான் அவரை சமதானப்படுத்த, பிறகு சைக்கார்டிஸ்ட் ஒருவர் வந்து பேச, நான் சரியாகிவிட்டேன் என்றார்’ என பாத்திமா கூறியுள்ளார்.

வனிதா முன்னால இத செஞ்சா போதும் : என்ன நடக்கும் தெரியுமா : பிரபல நடிகர் அதிரடி!!

பிக்பாஸ் வீட்டில் முதல் வாரமே எல்லாவற்றையும் போட்டு உடைத்தது போல எல்லோரும் நடந்து கொள்கிறார்கள். அதிலும் சாக்‌ஷி, ஷெரின், அபிராமி எல்லோரும் சேர்ந்து கொண்டு மதுமிதாவை எதிர்த்து வருகிறார்கள்.

வனிதா வெளிப்படையாக எல்லாவற்றையும் பேசுகிறேன் என்ற பெயரில் வில்லி போல செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 2 போட்டியாளர் டேனி, வனிதா மேடத்தின் பேட்டிகளை பார்த்திருக்கிறேன். தைரியமான பெண். இப்படிதான் ஒரு பெண் இருக்க வேண்டும் என பெருமை பட்டேன்.

ஆனால் பிக்பாஸ் வீட்டில் அவர் எல்லோரிடமும் கோப்படுகிறார். அவர் பேசும் போது அமைதியா இருங்க என சொல்வதற்கு பதிலாக கேலியாக புர்ர்ர் என விளையாட்டாக செய்தால் அவரால் மேலும் பேசமுடியாது என கிண்டலாக கூறியுள்ளார்.

பிக்பாஸ் லாஸ்லியாவின் சூட்சம ரகசியம் இதுதான்!!

பிக்பாஸ் சீசன் 3 ல் தற்போது இளம் ரசிகர்களை அதிகம் கவர்ந்திருப்பவர் லாஸ்லியா. இலங்கையிலிருந்து வந்திருக்கும் இவர் ஒரு செய்தி வாசிப்பாளர் எனலாம்.

தற்போது பிக்பாஸ் வீட்டில் காலையில் போடப்படும் பாட்டுக்கு ஒவ்வொரு நாளும் அவர் ஆடும் விதமும் அவரின் முக பாவனைகளும் பலருக்கும் பிடித்திருக்கிறது.

நிகழ்ச்சி தொடங்கும் போது அவர் இலங்கை தமிழ் தொனியில் செய்தி வாசிக்க கமல் டாஸ் கொடுத்தார். பின்னர் பிக்பாஸ் வீட்டிற்குள்ளும் இது தொடர்ந்தது.

ஊடக போட்டி உலகில் அவசர செய்திகள் கூட லட்சம் பார்வைகளுக்கு திணறிக்கொண்டிருக்கையில் லாஸ்லியா செய்தி வாசிக்கும் லஞ்ச் டைம் நியூஸ் 1 மில்லியன் வியூஸைத் தாண்டி சாதாரணமாக சாதனை படைக்கிறதாம். இதன் ரகசியம் அவர் செய்தி வாசிக்கும் அழகு தானாம்.

பயந்து ஓடிய அமலா பால் : ஆடை பிரஸ் மீட்டில் ஏற்பட்ட பரபரப்பு!!

தமிழ் சினிமாவில் பெரிய மார்க்கெட் இல்லை என்றாலும், அப்படி ஒன்று இருப்பதாக நினைந்துக் கொண்டு பந்தா செய்யும் நடிகைகளில் அமலா பாலும் ஒருவர். ஆரம்பத்தில் சர்ச்சையான படங்களில் நடித்தவர் படி படியாக முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடிக்க தொடங்கியதும், இவர் குறித்து பல கிசி கிசுக்கள் வெளியாகின.

இதற்கிடையே இயக்குநர் விஜயை காதலித்து திருமணம் செய்துக் கொண்டவர், பிறகு விவாகரத்து பெற்று மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த தொடக்கினார். அமலா பாலின் விவாகரத்துக்குப் பின்னணியில் நடிகர் ஒருவர் இருப்பதாகவும் கூறப்பட்டது.

இதையடுத்து தொடர்ந்து நடித்து வந்த அமலா பால், இளம் நடிகர் ஒருவர் மனைவியை பிரிவதற்கு காரணமாக இருந்தார் என்றும் பேச்சு அடிபட்ட நிலையில், தொழிலதிபர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்து மேலும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இப்படி, அவ்வபோது தன்னைப் பற்றி வெளியாகும் பரபரப்பான செய்திகள் மூலம் தான் திரைத்துறையில் இருக்கிறேன், என்பதை காண்பித்து வந்த அமலா பால், நடிப்பில் உருவாகி வரும் ‘ஆடை’ படத்தின் டீசர் மூலம் அமலா பால் உருவாக்கிய சர்ச்சை முந்தைய சர்ச்சைகளை எல்லாம் தூக்கி சாப்பிட்டுவிட்டது. காரணம், ஆடை இல்லாமல் நிர்வாணமாக நடித்த அந்த காட்சி தான்.

அமலா பால் ஆடை இல்லாமல் நடித்ததால் அந்த டீசரும், டிரைலரும் பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், நேற்று சென்னையில் ‘ஆடை’ படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட அமலா பால், புகைப்படக் கலைஞர்கள் போட்டோ எடுக்க முயன்ற போது அலட்சியம் காட்டிவிட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆனால், பிறகு அவரிடம் பேசி போட்டோவுக்கு போஸ் கொடுக்க வைத்தார்கள்.

இதன் பிறகு சில முன்னணி நாளிதழ் நிருபர்கள் அமலா பாலை பேட்டி எடுக்க முயற்சித்த போது, அதற்கும் அமலா பால் மறுப்பு தெரிவித்துவிட்டு, அவர்களின் கண்ணில் படமால், படப்பிடிப்பு இருக்கிறது, என்ற வழக்கமான பொய்யை சொல்லிவிட்டு எஸ்கேப் ஆனார்.

ஏன் அவர் இப்படி ஓடுகிறார், என்று விசாரித்ததில், அவரது முன்னாள் கணவர் விஜய்க்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளது. அது குறித்து பத்திரிகையாளர்கள் எதாவது கேள்வி கேட்க போகிறார்கள் என்றும், ஆடை இல்லாமல் நடித்தது குறித்த கேள்விகளை தவிர்ப்பதற்காகவும் தான் அவர், பத்திரிகையாளர்களை சந்திக்காமல் பயந்து ஓடியதாக கூறப்படுகிறது.

அமலா பாலின் இத்தகைய செயலுக்கு பத்திரிகையாளர்கள் கண்டனம் தெரிவித்ததால், ‘ஆடை’ பிரஸ் மீட்டில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

பிக்பாஸ் வீட்டில் ஷெரின் மற்றும் சாக்‌ஷி : கடுமையாக எச்சரித்த மக்கள்!!

பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் செம்ம பேமஸ். அப்படியிருந்த மூன்றாவது சீசன் தற்போது தான் கலை கட்டியுள்ளது. மதுமிதா, வைதா என இரண்டு குழுக்களாக போட்டியாளர்கள் பிரிந்து சண்டைப்போட்டு வருகின்றனர்,

அப்படியிருக்க இன்றைய பிக்பாஸில் ஷெரின் மிக மோசமான வார்த்தைகளாக பேசினார். இதை பார்த்த எல்லோருமே என்ன இவர் இவ்வளவு மோசமாக பேசுகிறார் என கடுமையாக கண்டனம் தெரிவித்தனர்.

பலரும் இந்த நிகழ்ச்சியை அனைத்து வயதினரும் பார்க்கிறார்கள், சேனல் கொஞ்சமாவது பொறுப்புடன் நடந்துக்கொள்ள வேண்டும் என கூறி வருகின்றனர்.

எல்லா டிரஸ்ஸையும் கழட்டிட்டா புகைப்பிடிப்பது? அமலா பாலின் அதிரடி : சர்ச்சையில் சிக்கிய ஆடை!!

நடிகை அமலா பால் இயக்குனர் விஜய்யுடன் விவாகரத்திற்கு பிறகு படங்களில் அதிகமாக நடித்திவருகிறார். இன்னும் சொல்லப்போனால் அடிக்கடி சமூகவலைதளத்தில் கவர்ச்சி படங்களை வெளியிடுவது என இருந்து வருகிறார்.

அவரின் நடிப்பில் வெளியாக ஆடை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களால் பெரும் சர்ச்சையானது. விரைவில் வரவுள்ள இப்படத்தில் அவர் ஆடையில்லாலும் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் இன்று காலை வெளியானது. இதில் அவர் புகைப்பிடிப்பது, மது அருந்துவது என நடித்துள்ளதோடு எல்லா டிரஸ்ஸையும் கழட்டிட்ட அது தான் நம்ம பிறந்தநாள் டிரஸ் என பேசியுள்ளது சர்ச்சையில் சிக்கியுள்ளது. சமூகவலைதளத்தில் வழக்கம் போல கடும் விமர்சனங்களும் எழுந்துள்ளது.

பிக்பாஸ் சீசன் 3 ல் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட முதல் நபர் இவர் தானாம் : கசிந்த தகவல்!!

பிக்பாஸ் சீசன் 3 நேற்றும், இன்றும் கமல்ஹாசன் இந்த வாரத்தில் நடந்த அனைத்தும் போட்டுக்காட்டி கேள்வி கேட்டு உண்மையை மக்களுக்கு விளக்க வைக்கு நேரம் என சொல்லலாம்.

அதிலும் குறிப்பாக இந்த வாரம் யாராவது ஒரு போட்டியாளர் வெளியேற்றபடவுள்ளதால் கமலின் வருகையும் அவரின் முதல் வார எவிக்‌ஷன் அறிவிப்பையும் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த வாரம் கவின், பாத்திமா பாபு, மதுமிதா, சாக்‌ஷி, மிரா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டனர். இதில் தற்போது இந்த வாரம் வெளியேற்றப்படுவது பாத்திமா பாபு தான் என நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல் கசிந்துள்ளன. பொறுத்திருந்த பார்ப்போம்.

பிக்பாஸ் வீட்டிற்குள் சாண்டி செல்ல முக்கிய காரணம் இதுதான்!!

பிக்பாஸ் வீட்டில் சாண்டி நேற்று தனது மகளை திரையில் கண்டு கண்கலங்கியது தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சாண்டி கண்ணீர் விட்டதை கண்டு மற்ற போட்டியாளர்களும் கண்ணீர் சிந்தினர். இந்நிலையில் சாண்டி குறித்து அவரது மனைவி சில்வியா பேட்டி ஒன்றை சமீபத்தில் அளித்துள்ளார்.

அதில் அவர் பேசுகையில், முதலில் அவர் பிக்பாஸில் கலந்து கொள்ள போகிறேன் என்றவுடன் நாங்கள் அனைவரும் வேண்டாம் என்று கூறினோம். ஆனால் சாண்டி தன்னிடம் ஒருத்தர் இதை வந்து கேட்டிருக்கிறார் என்னால் எப்படி மறுக்க முடியும் என்று கூறினார்.

அதன் காரணமாகவே அவர் வீட்டின் உள்ளே சென்றார். அதுமட்டுமின்றி எனக்கும் அவருக்கு இதன் மூலம் நிறைய பட வாய்ப்புகள் கிடைக்கும் என தோன்றியது. அதனாலே நானும் விட்டுவிட்டேன் என கூறி கண்கலங்கினார்.