பிக்பாஸ் வீட்டிற்குள் இவர்களை தான் அனுப்ப வேண்டும் : தமன்னா கூறிய நபர்கள் இவர்கள் தான்!!

தமிழ் பிக்பாஸ் 2வது சீசனை தொடர்ந்து மூன்றாவது அடுத்த மாதத்தில் துவங்கவுள்ளது. இந்த சீசனையும் கடந்த இரு சீசன்களை போல நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குவார் என்று தெரிகிறது.

மேலும் இதில் கலந்து கொள்பவர்கள் யார் யார் என்பது தான் தற்போது பிக்பாஸ் ரசிகர்களிடையே மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் இவர்கள் எல்லாம் சென்றால் நல்லாருக்கும் என்று சில பிரபலங்களின் பெயர்களை நடிகை தமன்னா கூறியுள்ளார்.

அதில் முதலாவதாக இருப்பது நடிகை ஸ்ருதிஹாசன், அடுத்தடுத்ததாக காஜல், தனுஷ், விஷால், கார்த்தி உள்ளனர். இவர்கள் எல்லாம் தான் எனது நண்பர்கள் என்றும் கூறியுள்ளார், தமன்னா.

நடிகையின் அந்தரங்க புகைப்படங்களை திருடிய கும்பல் : கொலை மிரட்டல்!!

8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் போன்ற சில படங்களில் நடித்தவர் நடிகை மீரா மிதுன். மாடல் அழகியாக இருக்கும் இவர் மிஸ் சவுத் தமிழ்நாடு, மிஸ் தமிழ்நாடு, மிஸ் கியூன் ஆஃப் சவுத் இந்தியா என பல பட்டங்களை வென்றுள்ளார்.

மிஸ் தமிழ்நாடு மண்டல இயக்குனராகவும் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவர் தமிழ்நாடு டீவா 2019 என்ற நிகழ்ச்சியை நடத்தப்போவதாக அறிவித்திருந்தார்.

தற்போது அவருடன் பணிபுரிந்த அஜீத் ரவி, ஜோ மைக்கேல் ஆகியோர் அதை நடத்த விடாமல் தடுப்பதாகவும், செல்போனை ஹேக் செய்து அந்தரந்த புகைப்படங்களை வெளியிடுவோம், கொலை செய்வோம் என மிரட்டியதாக அவர்கள் மீது போலிசில் புகார் அளித்துள்ளார்.

இந்த கட்சியில் இணையப்போகிறேன்.. தமிழக அரசியல் பற்றி ஸ்ரீரெட்டி அதிரடி பேச்சு!!

சர்ச்சைகளுக்கு பெயர்போனவர் நடிகை ஸ்ரீரெட்டி. இவர் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் பல முன்னணி நட்சத்திரங்கள் தனக்கு வாய்ப்பு தருவதாக கூறி பாலியல் ரீதியாக பயன்படுத்திக்கொண்டு ஏமாற்றிவிட்டனர் என புகார் தெரிவித்தார்.

அதன்பிறகு அவர் சென்னையில் வந்து செட்டில் ஆகிவிட்டார். ரெட்டி டைரி என்ற படத்தில் அடுத்து நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தான் விரைவில் தமிழக அரசியலில் குதிக்கப்போவதாக கூறியுள்ளார். திமுக அல்லது அதிமுக எதாவது ஒரு கட்சியில் இணையப்போகிறேன் என கூறியுள்ளார்.

இவ்வளவு பெரிய விடயத்தை மறைக்க தான் நேசமணி டிரண்டிங் செய்யப்படுகிறதா? தீயாக பரவும் தகவல்!!

காட்டாங்களத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதை திசைதிருப்பவே நேசமணி டிரண்டிங் செய்யப்படுகிறதா என இணையதளவாசிகள் கேள்வி எழுப்புகிறார்கள்.

சமூக வலைத்தளத்தில் எந்த ஹேஷ்டேக்குகள் எப்போது ட்ரெண்ட்டாகும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. யாராவது ஒரு கருத்தைச் சொல்ல போய் அது இந்தியளவில் ஹேஷ்டேக்குகளாக உருவாக்கப்பட்டு ட்ரெண்ட்டாகும்.

அந்த வரிசையில் #Pray_for_Neasamani, #PrayforNesamani என்ற ஹேஷ்டேக்கு இந்தியளவில் ட்ரெண்ட்டாக தொடங்க, என்னவென்று பலரும் பார்த்து உலகளவில் ட்ரெண்ட்டாக வைத்தனர். இதனிடையில் நேசமணி டிரண்டுக்கு வேறு காரணம் இருப்பதாக சமூவலைதளத்தில் சிலர் கூறி வருகிறார்கள்.

அதாவது சில தினங்களுக்கு முன்னர் சென்னையை அடுத்த காட்டாங்களத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் அடுத்தடுத்து ஒரு மாணவரும், மாணவியும் மாடியில் இருந்து கீழே குதித்து உயிரிழந்தனர்.

இது தற்கொலை என கூறப்படும் நிலையில் இந்த விடயத்தை திசை திருப்பவே #Pray_for_Neasamaniடேக் டுவிட்டரில் டிரண்ட் செய்யப்பட்டு வருவதாக சமூகவலைதளங்களில் சிலர் தெரிவித்துள்ளனர்.

பைக் விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நடிகை நடிகை!!

தமிழில் கங்காரு, ஸ்கெட்ச், மிக மிக அவசரம் போன்ற படங்களில் நடித்து மக்களிடம் பிரபலமானவர் ஸ்ரீ பிரியங்கா. இவர் தற்போது கங்கனம் என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஒரு காட்சியில் இவர் வேகமாக பைக் ஓட்டிக் கொண்டு போக அவரது முன் கேமரா ஒரு காரில் பயணித்துள்ளது.

திடீரென கார் நிறுத்தப்பட பைக்கில் வந்த நடிகை அதிர்ஷ்டவசமாக அந்த வேகத்தை கட்டுப்படுத்தி காரில் மோதாமல் நிறுத்தியுள்ளார். அந்த சம்பவம் படக்குழுவினர் அனைவருக்கும் மறக்க முடியாததாக அமைந்திருக்கிறது.

நடிகை நிறுத்தவில்லை என்றால் பெரிய விபத்து நேர்ந்திருக்கும் என்கின்றனர் படக்குழுவினர். அந்த சம்பவத்தால் ஸ்ரீ பிரியங்காவிற்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாம், அவர் தற்போது படப்பிடிப்பில் கலந்துகொள்ளவில்லை என்கின்றனர்.

இதெல்லாம் ரொம்ப ஓவர், பிக்பாஸ் யாஷிகாவிற்காக ரசிகர்கள் செய்த வேலையை பாருங்க!!

யாஷிகா ஆனந்த் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் செம்ம பேமஸ் ஆனவர். இவர் இருட்டு அறையில் முரட்டுக்குத்து படம் நடித்ததிலேயே பாதி இளைஞர்கள் ரசிகர்களை பிடித்துவிட்டார்.

அதை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றதும் பெரிய ரசிகர்கள் உருவாகிவிட்டனர், அந்த வகையில் இவருக்கு ரசிகர்கள் என்ன செய்துள்ளார்கள் தெரியுமா..

கோவில் திருவிழாவிற்கு யாஷிகா புகைப்படத்தை போட்டு பேனர் அடித்துள்ளனர், இதில் யாஷிகா பேன்ஸ் க்ளப் என்றும் பதிவு செய்துள்ளனர், நீங்களே இதை பாருங்கள்…

நந்தினி சீரியலில் இருந்து திடீரென வெளியேறிய பிரபல நடிகை : இதுதான் காரணமா?

படங்களை விட சீரியல்கள் தான் மக்களிடம் அதிகம் போய் சேர்கிறது. அப்படி கன்னட சினிமாவிலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் நந்தினி. இதை நிதின் என்பவர் இயக்க நாம் அனைவருக்கும் தெரிந்த நடிகர் ரமேஷ் அரவிந்த் சீரியலை தயாரிக்கிறார்.

600 எபிசோடுகளை கடந்து முதல் இடத்தில் TRPல் இருக்கும் இந்த சீரியலில் இருந்து வெளியேறியுள்ளார் காவ்யா. காரணம் அவருடைய வேடத்திற்கு முக்கியத்துவம் இல்லாமல் போனதாம். இதனால் அவரே இந்த சீரியலில் இருந்து விலகுவதாக கூறியிருக்கிறார்.

காவ்யாவின் வேடத்திற்கு வேறொரு நடிகையை தேடி வருகின்றனர் சீரியல் குழுவினர்.

சம்பளத்தை உயர்த்திய நடிகை ராஷ்மிகா : எவ்வளவு தெரியுமா?

தெலுங்கில் விஜய் தேவரக்கொண்டா ஜோடியாக கீதா கோவிந்தம் படத்தில் நடித்து தெலுங்கு மற்றும் தமிழ்நாட்டு ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலம் ஆனார் ராஷ்மிகா மந்தனா.

அந்த படத்திற்கு பிறகு அவர் நடித்த படங்கள் பெரிதாக ஓடவில்லை. தற்போது அவர் விஜய் தேவரக்கொண்டாவின் டியர் காம்ரேட் படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார். மேலும் நடிகர் கார்த்தி ஜோடியாக ஒரு தமிழ் படத்திலும் கமிட் ஆகி நடித்துவருகிறார்.

இந்நிலையில் ராஷ்மிகா தன்னுடைய சம்பளத்தை அதிகரித்துவிட்டராம். ஒரு படத்திற்கு சம்பளமாக 80 லட்சம் ரூபாய் கேட்கிறாராம். வளர்ந்துவரும் நடிகை இவ்வளவு சம்பளம் கேட்பது பல தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளதாம்.

கண்ணீர் விட்டு அழுத நடுவர் : ஒரு தாயின் 19 வருட முயற்சியால் மனநலம் குன்றிய மகனுக்கு அடித்த அதிர்ஷ்டம்!!

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சரிகமப நிகழ்ச்சியின் மூலம் பலர் தனது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் இளைஞர் ஒருவரின் திறமை நடுவர்கள் முதல் அனைவரையும் கண்ணீர் சிந்த வைத்துள்ளது.

மனநலம் குன்றிய நபர் ஒருவர் பாடல் பாடி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். அவருக்கு இசையை தவிர எதுவும் தெரியவில்லை. இது குறித்து அவரின் அம்மா கருத்து வெளியிடும் போது,

என்னுடைய மகன் வித்தியாசமானவன் தான். அது எனக்கு தெரியும், ஆனால் ஒரு போதும் எம்மைவிட குறைந்தவன் கிடையாது என்று கூறியுள்ளார்.

இதேவேளை, என் மகன் பிறந்தது முதல் ஆசிரியர் கண்டுப்பிடிப்பது வரை அனைத்துக்கும் நான் மிகவும் கஷ்டப்பட்டுள்ளேன். நிச்சயம் அவரின் முயற்சி இல்லை என்றால் எதுவும் நடந்திருக்காது என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

அங்காடித்தெரு நடிகர் மகேஷின் தற்போதைய நிலைமை இதுதான் : வருத்தத்துடன் அவரே கூறிய தகவல்!!

வசந்தபாலனின் இயக்கத்தில் வெளிவந்து பிரமாண்ட வெற்றி பெற்ற அங்காடித்தெரு படத்தில் ஹீரோவாக நடித்திருந்தவர் மகேஷ். திண்டுக்கல்லை சேர்ந்த இவருக்கு இந்த பட வாய்ப்பு திருநெல்வேலி பஸ் ஸ்டாண்ட்லில் பஸ்ஸுக்காக காத்திருந்த போது எதிர்பாராத விதமாக கிடைத்துள்ளது.

இப்படம் மிக பெரிய வெற்றி பெற்றாலும் இதன் பின் இவரது நடிப்பில் வெளிவந்த சில படங்களில் சுவடு தெரியாமல் அழிந்து போனது. தனது தற்போதைய நிலைமையை பற்றி மகேஷ் கூறுகையில் அங்காடித் தெரு படத்தில் நடித்த போது எனக்கு சினிமா என்றால் என்னவென்று கூட தெரியாது.

அந்த படத்துக்கு பிறகு சினிமாவில் நிலைத்து நிற்க என்ன செய்ய வேண்டும், எப்படி கதைகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என சொல்லித்தர யாரும் இல்லை. அதனால் தேடி வந்த பல நல்ல கதைகளை மிஸ் பண்ணிட்டேன். அதர்வா நடிச்ச ஈட்டி படத்தில் நடிக்க டைரக்டர் என்னை தான் முதலில் கேட்டார்.

சுந்தர பாண்டியன் படத்தில் விஜய் சேதுபதி ரோல் எனக்குத்தான் வந்தது. மாயாண்டி குடும்பத்தார் படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பையும் தவறவிட்டுட்டேன். தவிர நான் நடித்த சில படங்களும் சரியா ஓடவில்லை என வருத்தத்துடன் கூறினார்.