தேர்தலில் சுயேச்சையாக நின்று முதல்வர் மகனையே ஜெயித்த பிரபல தமிழ்ப்பட நடிகை : குவியும் வாழ்த்துக்கள்!!

கர்நாடக மாநிலம் மண்டியா மக்களவை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட மறைந்த நடிகர் அம்பரிஷின் மனைவியான நடிகை சுமலதா அபார வெற்றி பெற்றுள்ளார்.

சுமலதா தமிழில் கழுகு, முரட்டுகாளை உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட மாநில முதல்வர் குமாரசாமியின் மகனான நிகில் கவுடாவை, சுமார் 90,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து மண்டியா மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.

முன்னதாக மக்களவை தேர்தல் தொகுதி ஒதுக்கீட்டின் போது மண்டியா தொகுதியை காங்கிரஸ் கூட்டணியில் உள்ள முதல்வர் குமாரசாமி கட்சியான ஜே.டி.எஸ். கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.

இதனால் அதிருப்தியடைந்த நடிகை சுமலாதாவிடம் வேறு தொகுதி ஒதுக்கி தருகிறோம் அதில் போட்டியிடுங்கள் என கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர்கள் கூறி பார்த்தனர். ஆனால் அதனை ஏற்காத அவர் மண்டியா தொகுதியில் சுயேச்சையாக களமிறங்கினார்.

இதனையடுத்து மண்டியா தொகுதியில் குமாரசாமியின் மகன் நிகில் களமிறக்கப்பட்டார். ஆனால் உள்ளூர் காங்கிரஸார் இதனை ரசிக்கவில்லை. தங்களது முழு ஆதரவையும் நடிகை சுமலதாவிற்கே மறைமுகமாக அளித்து வந்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த குமாரசாமி, ஒருகட்டத்தில் வாய்விட்டே புலம்பும் நிலைக்கு தள்ளப்பட்டார். இந்நிலையில் குமாரசாமி பயந்தது போலவே தற்போது மண்டியா மக்களவை தொகுதி தேர்தல் முடிவுகள் வந்துள்ளன.

வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதலே முன்னிலை வகித்த நடிகை சுமலதா, இறுதி சுற்றின் போது நிகில் கவுடாவை விட 90,000 வாக்குகள் அதிகம் பெற்று அபார வெற்றியை தன் வசமாக்கியுள்ளார்.

சுயேட்சையாக நின்று வெற்றி பெற்ற சுமலதாவுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

தேர்தலில் அபார வெற்றி பெற்ற பிரபல நடிகை ரோஜா!!

ஆந்திராவின் நகரி சட்டமன்ற தொகுதி தேர்தலில் போட்டியிட்ட நடிகை ரோஜா வெற்றி பெற்றுள்ளார். இந்தியாவில் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் காலை முதல் எண்ணப்பட்டது.

ஆந்திராவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதை தொடர்ந்து அந்த கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி அம்மாநில முதல்வராக முதல் முறையாக பதவியேற்கவுள்ளார்.

அந்த கட்சி சார்பில் நகரி தொகுதியில் போட்டியிட்ட நடிகை ரோஜா அபார வெற்றி பெற்றுள்ளார். ஏற்கனவே நகரி தொகுதி எம்.எல்.ஏ-வாக இருக்கும் ரோஜா மீண்டும் அந்த தொகுதியில் வெற்றி வாகை சூடியுள்ளார்.

காதல், 21 வயதில் திருமணம், விவாகரத்து.. காற்று வெளியிடை அதிதி வாழ்க்கையில் இவ்வளவு சோகமா?

காற்று வெளியிடை படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து தென்னிந்திய ரசிகர்களை கவர்ந்தவர் அதிதி ராவ். அவர் தற்போது மிஸ்கின் இயக்கத்தில் உதயநிதி ஜோடியாக சைக்கோ படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் அதிதி தன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் பற்றி பேசியுள்ளார். அவர் 5ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோதே சீனியர் ஒருவர் காதல் கடிதம் கொடுத்தாராம். அதை பெருமையாக வீட்டில் கொண்டு வந்து காட்டினாராம் அதிதி.

21 வயதில் திருமணம் அதிதி ராவிற்கு பிரபல ஹிந்தி நடிகர் ஒருவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால் 4 வருடங்களில் அவர்கள் பிரிந்துவிட்டனர்.
அவர்கள் பிரிந்தபிறகுத்தான் பலருக்கும் திருமணம் பற்றியே தெரியவந்துள்ளது. அதன் பிறகு தான் அதிதி சினிமாவில் முழுவீச்சில் களம் இறங்கியுள்ளார்.

இனி நடிக்கமாட்டேன்.. திருமணமும் செய்யமாட்டேன் : அதிர்ச்சி கொடுத்த கவர்ச்சி நடிகை!!

கவர்ச்சிக்கு பெயர்போன நடிகை சார்மி கவுர் பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்தவர். அவர் கடைசியாக விக்ரம் நடித்திருந்த 10 எண்றதுக்குள்ள படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது அவர் நடிப்பதை நிறுத்தப்போவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். வழக்காக நடிகைகள் திருமணம் ஆன பிறகு தான் நடிப்பதை நிறுத்துவார்கள். ஆனால் இவர் தனக்கு திருமணம் செய்யும் ஐடியா இல்லை என்று வெளிப்படையாகவே கூறியுள்ளார்.

நடிப்பதை நிறுத்தினாலும் சினிமா தயாரிப்பாளராக மட்டும் தொடர்ந்து செயல்படுவேன் என அவர் கூறியுள்ளார்.

ஆமா இது எப்போ.. விஷால் விஷயத்தில் ஷாக் ஆன ராதிகா!!

விஷால் நடிகர் சங்க தேர்தலில் சரத்குமாரை வீழ்த்திய கதை எல்லாம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இன்னும் சில தினங்களில் நடிகர் சங்க தேர்ந்தல் நடக்கவுள்ளது.

இந்த முறை விஷாலும் பல தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு இருப்பதாக தெரிகின்றது, தற்போது முன்னணி வார இதழ் ஒன்று விஷால், ராதிகாவை சந்திக்கவுள்ளதாக கூறியுள்ளனர்.

இதை பார்த்த ராதிகா ‘சீரியஸ்லீ’ என்று சிரிப்பு ஸ்மைலி போட்டு டுவிட் செய்துள்ளார், இதற்கு குஷ்புவும் சிரிப்பு ஸ்மைலி பதிவு செய்துள்ளார்.

அதாவது எனக்கே தெரியவில்லை, இது எப்போ? என்பது போல் ராதிகாவின் ரியாக்‌ஷன் அதில் இருந்தது.

அரை மணிநேரம் தேம்பி தேம்பி அழுத சமந்தா : ஏன் என்று தெரியுமா?

நட்சத்திரத் தம்பதிகளான நாகசைதன்யா, சமந்தா இருவரும் திருமணத்திற்கு பிறகு முதன்முதலாக இணைந்து நடித்து சமீபத்தில் வெளிவந்து மகத்தான வெற்றி பெற்ற படம் மஜிலி.

அந்த படத்தின் வெற்றி பற்றி வந்த முதல் செய்தியைக் கேட்டதும் அரை மணி நேரம் அழுததாக சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார், சமந்தா.

மேலும், அதிகாலை 2.30 மணிக்கே எழுந்து ஒன்றைரை மணிநேரம் படத்தின் வெற்றிக்காகவும், கணவருக்காகவும் பிரார்த்தனை செய்தாராம்.

படத்தின் வெற்றி நாகசைதன்யாவுக்கு இந்த நேரத்தில் தேவைப்படும் ஒரு வெற்றியாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவத்திற்கு பிறகு அதிக படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டேன்.. காஜல் உருக்கம்!!

நடிகை காஜல் அகர்வால் தற்போது தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவர். பல டாப் ஹீரோக்கள் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். அடுத்து ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்திலும் நடிக்கிறார்.

முன்பை போல் அதிக எண்ணிக்கையில் படங்கள் நடிக்காமல் தற்போது வருடத்திற்கு மூன்று நான்கு படங்களில் மட்டும் நடிப்பது ஏன் என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “முதலில் நானும் அதிக எண்ணிக்கையில் தான் படங்கள் நடித்தேன்.

அதனால் தொடர்ந்து ஷூட்டிங் செல்லவேண்டியிருந்தது. எனக்கு நிஷா என்ற தங்கை உள்ளார். அவருக்கு திருமணம் நடைபெற்ற போது நான் தான் அருகில் இருந்து அனைத்தையும் செய்திருக்க வேண்டும். ஆனால் ஷூட்டிங் என்பதால் என்னால் எதுவும் செய்யமுடியவில்லை.

அப்போது முடிவெடுத்தேன்.. இனி அதிக படஙக்ளில் நடிக்க கூடாது என்று.. என காஜல் கூறினார்.

தொடர்ந்து நடிகை பிரியா பவானி ஷங்கர் பெயரில் நடக்கும் மோசடி : சோகத்தில் நடிகை!!

பிரியா பவானி ஷங்கர், கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் மூலம் ரசிகர்களின் பேராதரவை பெற்றார். தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பதை தாண்டி நடிக்க வந்த பிறகு தான் இவர் அதிக பிரபலமானார்.

படங்களில் அடுத்தடுத்து கமிட்டாகி நடித்து வருகிறார். எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து பிரியா நடித்திருந்த மான்ஸ்டர் படம் அண்மையில் வெளியாகி இருந்தது.

படம் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது, படக்குழுவும் செம ஹேப்பி. பிரியா பவானி ஷங்கர் பெயரில் டுவிட்டரில் அதிகம் போலி அக்-கவுண்ட் இருக்கிறது. அவரும் பல முறை தன்னுடைய நிஜ டுவிட்டர் பக்கம் இதுதான் என்று அறிவித்துவிட்டார்.

ஆனாலும் சில போலி அக்-கவுண்ட் அவரது பெயரை கெடுப்பது போல் சில விஷயங்கள் செய்து வருகிறார்களாம். அப்படி ஒரு போலி அக்-கவுண்ட்டை பதிவு செய்து தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

கேன்ஸ் திரைப்பட விழாவில் தங்க நிற ஆடையில் ஜொலித்த உலக அழகி : கண்ணை கவரும் புகைப்படங்கள்!!

பிரான்ஸ் நாட்டில் ரிவேரியா நகரில் நடைபெற்று வரும் கேன்ஸ் 72-வது திரைபட விழா ஒவ்வொரு வருடமும் நடப்பது வழக்கம். அதில் முன்னணி திரை நட்சத்திரங்கள் பங்கு பெறுவார்கள்.

அதில் உலக அழகி பட்டம் பெற்ற ஐஸ்வர்யா ராய் பல ஆண்டுகளாக இத்திரைப்பட விழாவுக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு வரும் நடிகை ஐஸ்வர்யா ராயின் ஆடைத் தேர்வு எப்போதுமே வித்தியாசமாகவும் ரசிகர்களை கவரும் வண்ணம் இருக்கும்.

இந்த வருடம் கேன்ஸ் விழாவில் பங்கேற்கும் ஐஸ்வர்யா ராய் என்ன ஆடை அணிந்து பங்கேற்பார் என்ற எதிர்பார்ப்பு பலரிடையே இருந்தது.

அந்தவகையில் 72-வது கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு ஐஸ்வர்யா ராய் தமது மகள் ஆராத்யாவுடன் தங்க நிற ஆடை உடுத்தி ரெட் கார்பெட்டில் நடந்து வந்து ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்துள்ளார்.

ஐஸ்வர்யா ராய் அணிந்திருந்த மெட்டாலிக் கோல்டு ஆடை ரெட் கார்பட் வரவேற்பில் சுற்றியிருந்த கூட்டத்தை அவர் பக்கம் ஈர்த்ததுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பெண்களின் வாழ்க்கையை சூறையாடிய பிரபல டிவி நடிகர் கைது : நடந்தது என்ன?

சமீபகாலமாக சினிமாவை சேர்ந்த பெண்கள் பலர் மீ டூவில் பாலியல் புகார் அளித்து வந்தார்கள். இதில் சில முக்கிய பிரமுகர்களின் பெயரும் சிக்கியது. அடுத்தடுத்து இது தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது கத்தி முனையில் இரண்டு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த கன்னட டிவி நடிகருடன் சேர்த்து 3 பேரை காவல் துறையினர் தற்போது கைது செய்துள்ளனர்.

பெங்களூர் கோரமங்களா பகுதியில் இரண்டு பெண்கள் வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர். கடந்த மே 12 ம் தேதி ஆன்லையின் உணவு ஆர்டர் செய்த இவர்கள் உணவுக்காக காத்திருந்திந்தார்களாம்.

அப்போது இரவும் 8.20 மணியளவில் உணவு வந்துவிட்டது என கதவை திறந்து வெளியே வந்த போது மர்ம நபர்கள் 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளது தெரியவந்துள்ளது.

இதனால் அந்த பெண்கள் போலிசில் புகார் அளித்துள்ளனர். இதன் விசாரணையின் போது நடந்த சம்பவத்தில் கன்னட டிவி நடிகர் ராகேஷ், கார் டிரைவர் மணிகண்டா, பானி பூரி விற்கும் சூர்யா ஆகியோரை கைது செய்யப்பட்டுள்ளனர்.