இளம் நடிகரை வெறித்தனமாக அடித்து துன்புறுத்திய போலிஸ்! மருத்துவமனையில் அனுமதி!!

சினிமா பிரபலங்கள் சிலர் சர்ச்சைகளை சந்திப்பதை சகஜமாக கருதுகிறார்கள். ஹிந்தி சினிமா பிரபலங்களுக்கு இது சர்வ சாதாரணம் போல தான். பத்திரிக்கைகளில் அடிக்கடி கிசுகிசுக்களிலும் மாட்டிக்கொண்டு முழிப்பார்கள்.

தற்போது ஹாட்டாப்பிக்கா ஓடிக்கொண்டிருப்பது நடிகர் Aansh Arora பற்றிய செய்தி தான். அண்மையில் இவர் தன் சகோதரர் உடன் போலிசாரிடம் மோதலில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் காயமடைந்த அவர் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் கடந்த மே 13 முதல் 16 வரை மருத்துமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்துள்ளார்.

விசாரணையில் அவர் உத்தர்பிரதேஷ் காஜியாபாத் இந்திராபுரம் போலிஸ் நிலையத்தில் என்னை துன்புறுத்தினர். முதல் நாள் இரவிலிருந்து மறுநாள் காலை வரை என்னையும் என் மைனர் தம்பியையும் தொந்தரவு போலிசார் செய்தனர் என நடிகர் கூறியுள்ளார்.

எல்லாவற்றிக்கும் காரணம் சாப்பிடும் இடத்தில் ஹோட்டல் ஊழியர்களுக்கு இவருக்கும் நடந்த தகராறு தானாம்.

எனக்கு விருப்பமே இல்லை : சாமி2 படக்குழு மீது ஐஸ்வர்யா ராஜேஷ் அதிர்ச்சி குற்றச்சாட்டு!!

காக்கா முட்டை, வடசென்னை என பல படங்களில் தன் நடிப்பு திறமையை நிரூபித்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். விக்ரம்-ஹரி கூட்டணியில் வெளியான சாமி படம் ஹிட் ஆன நிலையில் அதன் இரண்டாம் பாகத்தை சென்ற வருடம் வெளியிட்டனர். முதல் பாகத்தில் திரிஷா நடித்திருந்த ரோலில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார்.

முதலில் த்ரிஷா தான் ஒப்பந்தம் ஆனார், ஆனால் அவர் பின்னர் நடிக்கமுடியாது என கூறி ஒதுங்கிக்கொண்டார். இந்நிலையில் தற்போது ஒரு பேட்டியில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த படம் பற்றி அதிர்ச்சி அளிக்கும் வகையில் பேசியுள்ளார். “நான் இந்த படத்தில் நடிக்க விரும்பவில்லை.

ஆனால் விக்ரம்-ஹரி என்னை பர்சனலாக கேட்டுக்கொண்டதால் ஒப்புக்கொண்டேன். வேறு எந்த நடிகையும் ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள் என அவர்கள் கூறியதும் ஒரு காரணம்” என கூறியுள்ளார்.

சில காட்சிகளில் மட்டுமே வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பை பற்றி இந்த படத்தை பார்த்த பலரும் மோசமாக விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

31 வயதாகியும் திருமணம் செய்யாதது ஏன் : பிரபல நடிகை கூறிய காரணம்!!

நடிகை சார்மி கவுர் 1987ஆம் ஆண்டு மும்பையில் மஹாராஷ்டிராவில் பிறந்தவர். இவர் தனது 15 வயதில் இருந்தே ஹீரோயினாக நடித்து வருகிறார். 2002ம் ஆண்டு நீ தோடு காவாலி என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார்.

அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் 100க்கும் மேற்ப்பட்ட படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். தமிழில் சிம்பு நடித்த கடந்த அழிவதில்லை படத்தில் நடித்தார். மேலும் ஆஹா அப்படித்தான், லாடம் ஆகிய படங்களில் நடித்தார்.

வாய்ப்புகள் குறைந்து போன பின்னர் படங்களில் நடிப்பதை நிறுத்தி பூரி ஜெகனாத்துடன் இணைந்து தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்.

தற்போது சார்மிக்கு 31 வயது கடந்துவிட்டது. அவரிடம் இன்னும் ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை என்று கேட்டால், அதற்கு அவர் ‘இப்பொழுது எனது முழு கவனம் சினிமாவில் மட்டுமே உள்ளது. திருமணம் செய்த பிறகு கணவர், குழந்தை இவர்கள் மீது கவனம் செலுத்த முடியாது’ என்று பதிலளித்துள்ளார்.

தொலைக்காட்சி பிரபலம் கறுப்பழகி கேப்ரெல்லாவுக்கு திருமணம் : மாப்பிள்ளை இவர்தானாம்!!

விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு என்ற காமெடி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் கேப்ரெல்லா. நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியாகியிருந்த ஐரா படத்திலும் நடித்திருந்தார்.

மேலும் டிக்டாக்கிலும் அவ்வப்போது கருத்தான வீடியோக்களை வெளியிடும் இவரை நெட்டிசன்கள் கறுப்பழகி என்று அழைப்பர். இந்நிலையில் இவர் தனது நீண்டநாள் காதலரான ஒளிப்பதிவாளர் ஆகாஷ் என்பவரை கரம் பிடிக்கவுள்ளார்.

இதுகுறித்து கேப்ரெல்லா கூறுகையில், ஒரே தொழிலில் இருந்து, ஒத்த எண்ணம் கொண்ட இருவரால்தான் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முடியும். நல்லது; கெட்டது என எல்லாவற்றையும் ஒளிவு மறைவின்றி என்னிடம் சொல்வார். இருவரும் காதலை பரிமாறினோம்.

வீட்டுக்குச் சொல்ல வேண்டுமே… நானே, அவருடைய அப்பாவுக்கு போன் செய்து, ஆகாஷ் மீதான எனது காதலையும்; என் மீதான அவர் காதலையும் சொன்னேன். நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. ஜனவரியில் திருமணம் என்றார்.

மார்பக அறுவை சிகிச்சை செய்து வீடியோவை வெளியிட்ட போர்ன் பட நடிகை மியா கலிஃபா : சர்ச்சை நடிகையின் அதிரடி!!

மியா கலிஃபா என்றால் இளம் தலைமுறைகளில் பலருக்கும் தெரிந்திருக்கலாம். ஆபாச படங்களில் நடிக்கும் இவருக்கு உலகளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். இளம் நடிகையான இவர் பல போர்ன் ஸ்டார்களுடன் நடித்திருக்கிறார்.

அண்மையில் தன் விரும்பும் காதலரை திருமணம் செய்துகொள்ளப்போவதாக அறிவித்தார். இதுவே அவரது ரசிகர்களுக்கு பெரும் ஷாக் தான். இந்நிலையில் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் மார்பில் அறுவை சிகிச்சை செய்துகொண்டதாக குறிப்பிட்டுள்ளார். கடந்த வருடம் அவர் ஐஸ் ஹாக்கி விளையாட்டை பார்க்க சென்ற போது டிஸ்க் போன்ற பந்து அவரின் மீது 80 மைல் வேகத்தில் இடது பக்க மார்பில் மோதியது. இதற்காக தற்போது அவர் அறுவை சிகிச்சை செய்துகொண்டாராம்.

நடிகர் கமல் மீது செருப்பு வீசியவருக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டிய எச்.ராஜா : பிக்பாஸ் காயத்ரி கண்டனம்!!

நடிகர் கமல்ஹாசன் நேற்று பங்கேற்ற அரசியல் கூட்டத்தில் அவர் மீது செருப்பு, முட்டை ஆகியவை வீசப்பட்டது. கமல் ஹிந்து மதம் பற்றி பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றது.

கமல் மீது செருப்பு வீசிய நபருக்கு பாஜகவை சேர்ந்த எச்.ராஜா பொன்னாடை போர்த்தி பாராட்டியுள்ளார்.

இதற்கு பிக்பாஸ் புகழ் காயத்ரி ரகுராம் கண்டனம் தெரிவித்துள்ளார். கமலுக்கு தண்டனை சட்டப்படி தான் இருக்கவேண்டும், இப்படி அல்ல! என அவர் மேலும் கூறியுள்ளார்.

தன்னை தானே சிறையில் பூட்டிக்கொண்ட முன்னணி நடிகை!!

சிம்பு நடித்த ஒஸ்தி படத்தில் கவர்ச்சியாக ஒரு பாடலுக்கு மற்றும் தோன்றியவர் நடிகை மல்லிகா ஷெராவத். இவர் தற்போது சமூக வலைத்தளங்களில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் சிறையில் இருப்பது பல உள்ளது. விபச்சாரம் நடக்கும் இடங்களில் பெண் குழந்தைகள் இப்படி சிறிய இடத்தில் அடைத்துவைத்து கொடுமைப்படுத்துகின்றனர் என்பதை வலியுறுத்தும்விதமாக தான் மல்லிகா இப்படி செய்துள்ளார்.

அவர்களுக்காக அனைவரும் போராட முன்வரவேண்டும் என நடிகை வலியுறுத்தியுள்ளார். இதற்காக நடிகையை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

நயன்தாராவை விட அதிக சம்பளம் கேட்கும் மூத்த நடிகை : அதிர்ச்சியில் தயாரிப்பாளர்!!

நடிகை நயன்தாரா தான் தற்போது தற்போது தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் பெரும் நடிகை. சோலோ ஹீரோயினாக நடித்து ஹிட் கொடுத்தவரும் அவர் 4 முதல் 5 கோடிக்கு கீழ் தான் சம்பளம் பெறுகிறார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது தெலுங்கு நடிகை விஜயசாந்தி நடிகர் மகேஷ் பாபுவின் அடுத்த படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்க 5 கோடி ரூபாய் சம்பளமாக கேட்டுள்ளார். இது அந்த படக்குழுவுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

பிரபல நடிகை சார்மி எடுத்த அதிரடி முடிவு, ரசிகர்கள் சோகம்!!

சார்மி சிம்பு நடித்த காதல் அழிவதில்லை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். அதை தொடர்ந்து தெலுங்கு சினிமா பக்கம் ஒதுங்கிவிட்டார்.

அங்கு இவருக்கு பெரிய வரவேற்பு கிடைக்க, தமிழில் லாடம், 10 எண்றதுக்குள்ள என ஒரு சில படங்களில் மட்டுமே தலையை காட்டினார்.

இந்நிலையில் சார்மி இனி படங்களில் நடிப்பது இல்லை என்று ஒரு முடிவெடுத்துள்ளாராம், அதை விட எனக்கு நடிக்க ஆர்வமில்லை என்று கூறியுள்ளார்.

மேலும், படங்களில் தயாரிக்கவே தான் மிக ஆர்வமாக உள்ளதாக சார்மி கூற, இது தெலுங்கு சினிமா ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தத்தை தந்துள்ளது.

சிவகார்த்திகேயனை மீண்டும் சீண்டிய அருண்விஜய் : ரசிகர்கள் கொந்தளிப்பு!!

சிவகார்த்திகேயன் நடிப்பில் நேற்று மிஸ்டர் லோக்கல் படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது.

இந்நிலையில் இப்படத்திலேயே ‘நீயெல்லாம் மாஸ் காட்ட ஆரம்பிச்சுட்ட்’ என்று சதீஷ் கேட்க, அதற்கு சிவகார்த்திகேயன் ‘என் மேல ரொம்ப காண்டுல இருக்கீங்க போல’ என்று அருண்விஜய் முன்பு பேசியதற்கு பதிலடி கொடுத்தார்.

ஆனால், இன்று அருண்விஜய் டுவிட்டரில் கிண்டல் செய்யும் விதமாக ஒரு ஸ்மைலியை போட்டுள்ளார், இதை பார்த்த எல்லோரும் கண்டிப்பாக இவர் சிவகார்த்திகேயனை தான் சீண்டுகின்றார் என கோபமாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.

அதே நேரத்தில் அதற்கு அடுத்த டுவிட்டே, என் அடுத்தப்படத்தின் அறிவிப்பை நானே தெரிவிப்பேன், வேறு எதனையும் நம்பாதீர்கள் என டுவிட் செய்துள்ளார், இவர் எதற்கு அந்த ஸ்மைலியை போட்டார் என தற்போது வரை பலருக்கும் தெளிவாக தெரியவில்லை.