திருமணத்திற்கு பிறகு தொகுப்பாளினி மணிமேகலை படும் கஷ்டம் : சோகமான மறுபக்கம்!!

ஒரே பாடலில் ஒருவரின் நடனத்தை பார்த்து அவர் மீது காதல் கொண்டு திருமணமும் செய்துகொண்டவர் தொகுப்பாளினி மணிமேகலை.

அம்மா-அப்பாவை எதிர்த்து பதிவு திருமணம் செய்துகொண்டார். அதன்பிறகு தொகுப்பாளினி வேலையை விடுத்து தற்போது ஜோடிகள் கலந்துகொள்ளும் ஒரு நிகழ்ச்சியில் பங்குபெற்று வருகிறார். இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில், திருமணத்திற்கு பின் வீட்டில் பேச எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

நாங்கள் நல்ல நிலைமைக்கு வந்ததும் கண்டிப்பா பேச முயற்சி செய்வோம். முன்பெல்லாம் என் அறையில் ஏசி ஆப் செய்யாமலேயே கிளம்பி விடுவேன்.

ஆனால் இப்போது 1 மணி நேரம் ஏசி ஓடியது அறை கூலிங் வந்துவிட்டது என்று ஆப் செய்கிறேன். முன்னாடி சாப்பாடு வீண் செய்வேன், இப்போது கொஞ்சம் கூட அப்படி செய்வது இல்லை. அப்படி மிஞ்சினாலும் இல்லாதவர்களுக்கு கொடுத்து விடுவேன் என்று பேசியுள்ளார்.

மனைவி ரஜினியை விவாகரத்து செய்தது ஏன்? முதன்முறையாக காரணத்தை கூறிய விஷ்ணு விஷால்!!

2011ல் நடிகரும் இயக்குநருமான கே.நட்ராஜ் மகள் ரஜினியைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார் விஷ்ணு விஷால். இருவருக்கும் ஆர்யன் என்ற மகன் உள்ளார். கடந்தாண்டு கணவன் – மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்துக்கு விண்ணப்பித்தனர். நவம்பர் 13, 2018-ல் சட்டப்படி விவாகரத்து அளிக்கப்பட்டது.

அதன்பிறகு விவாகரத்து குறித்து அறிக்கை மட்டும் வெளியிட்ட விஷ்ணு விஷால், விவாகரத்துக்கான காரணத்தை வெளிப்படையாக தற்போது வெளியிட்டுள்ளார். அதில், நான் உணர்ந்த ஒரு விஷயம் என்னவென்றால்,

எதுவும் நிச்சயம் கிடையாது. எப்போது வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். நான் மிகவும் உறுதியாக இருந்த விஷயம், எனது திருமணம். ஆனால், அதுவும் இப்போது இல்லை. என்னால் இன்னும் என்ன நடந்தது என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை.

சில வருடங்களுக்கு முன் நான் யாரிடமும் அதிகம் பேசாமல் அமைதியாக இருந்த ஒரு நபர். அப்போது இந்த பேட்டியைக்கூட தந்திருக்க மாட்டேன். எப்போதும் நம்பிக்கை குறைவாகவே இருப்பேன். என்னை, சாதிக்கும் ஒரு ஆளாக நினைத்துப் பார்த்ததே இல்லை.

எனது அப்பாவைப் பார்த்து, புத்திசாலியான என் சகோதரியைப் பார்த்து, இவர்களை எல்லாம் என் வாழ்வில் மிஞ்சவே முடியாது என்றெல்லாம் நினைப்பேன்.

இந்த ஆளுமை என் வளர்ச்சியைத் தடுப்பதாக நம்பியதால், எல்லோருடனும் சகஜமாகப் பேச ஆரம்பித்தேன். குறிப்பாக, திரைப்படங்களில் காதல் காட்சிகளில் சிறப்பாக நடிக்க, பெண்களிடமும் சகஜமாகப் பழகினேன். அப்போதுதான் பிரச்சினை ஆரம்பித்தது.

‘நீ மாறிவிட்டாய்’ என்ற பேச்சு வந்தது. அப்படியே அது, ‘நான் இந்த நபரைத் திருமணம் செய்து கொள்ளவில்லை’ என்ற நிலைக்கு மாறியது. நாம் யாரையும் வற்புறுத்த முடியாது. திருமணம் முடிந்துவிட்டது என்பதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. ஆனால், செய்துதான் ஆகவேண்டும்.

என் மகனின் நலனுக்காக, மனைவியின் நலனுக்காக. இன்றும் எனக்கு அவரைப் பிடிக்கும். அவருக்கும் அப்படித்தான் என்று எனக்குத் தெரியும். அவர் நல்லவர். நானும் அப்படித்தான் என்பது அவருக்குத் தெரியும். ஆனால், சில நேரங்களில் நாம் ஒன்றாக இருப்பது இந்தப் பிரபஞ்சத்துக்கே பிடிக்காது என நினைக்கிறேன்.

நான், எனது துறையில் மிகக் கடினமாக உழைத்துள்ளேன். பலருக்கு கவனச்சிதறல் ஏற்பட்டுள்ளது. நான் ஒவ்வொரு நாளும் மன ரீதியாக வருத்தத்தில்தான் இருக்கிறேன். ஆனால், வேலை எனது கவனத்தைத் திசை திருப்புகிறது. நான், எனது மகனைப் பற்றி நினைக்கிறேன்.

அவரையும், அவரது அம்மாவையும், அவர்கள் வாழ்க்கை முழுவதும் ஆதரிக்க வேண்டும் என விரும்புகிறேன். நான் ஒரு விளையாட்டு வீரன். எனக்கு தோல்விகளில் இருந்து மீண்டு வருவது வழக்கம்தான் என விஷ்ணு விஷால் கூறியுள்ளார்.

இளம் நடிகை ராசி கண்ணாவை கவர்ந்த திருமணமான நடிகர் : இவரை தான் திருமணம் செய்ய ஆசையாம்!!

தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழி படங்களில் பிசியாக நடித்து வருபவர் ராசி கண்ணா. விஷாலுடன் இவர் நடித்துள்ள அயோக்யா படம் விரைவில் வெளியாகவுள்ளது.

மேலும் நடிகர் சித்தார்த்துடன் சைதான்கா பச்சா படத்தில் நடித்துவரும் ராசி கண்ணாவிடம் சமீபத்திய பேட்டியில் தற்போது திருமணமான நடிகர்களில் யாருக்கு திருமணம் நடக்கவில்லை என்றால் நீங்கள் திருமணம் செய்து கொள்வீர்கள் என கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த ராசி கண்ணா, சூர்யா தான். ஜோதிகா மேம்மிடம் அவர் நடந்து கொள்ளும் விதங்களை எல்லாம் வைத்து பார்க்கும் போது அவரை தான் திருமணம் செய்து கொள்வேன் என்றார்.

லொள்ளு சபாவில் வாங்கிய சம்பளம் இவ்வளவு தான் : விழா மேடையிலேயே கண்கலங்கிய யோகிபாபு!!

தமிழ் சினிமாவில் இப்போதுள்ள நகைச்சுவை நடிகர்களில் முன்னணியில் இருப்பர் யோகி பாபு. ஒரு நாளைக்கு 5 லட்சம் ரூபாய் வரை அவர் சம்பளம் வாங்குவதாகச் சொல்கிறார்கள்.

அவர் நாயகனாக நடித்துள்ள தர்மபிரபு படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மே-4 சென்னையில் நடைபெற்றது. யோகி பாபுவுடன் பல வருடங்களாக ஒரே அறையில் தங்கியிருந்த முத்துக்குமரன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் முத்துக்குமரன், யோகி பாபு டிவியில் நடித்து வாங்கி வரும 300 ரூபாய்க்காக நாங்கள் காத்துக் கொண்டிருப்போம். அதன்பிறகுதான் எங்களுக்கு சாப்பாடு எல்லாம். அன்று முதல் இன்று வரை அவர் பாபுவாக அப்படியே இருக்கிறார் என்று நெகிழ்ச்சியிடன் பேசினார். அதைக் கேட்டு யோகிபாபு மேடையிலேயே கண்கலங்கினார்.

பின்னர் பேசிய யோகிபாபு, நான் விஜய் டிவி லொள்ளு சபாவில் நடித்துவிட்டு 300 ரூபாய் வாங்கி வருவேன். அதைத்தான் முத்துக்குமரன் அப்படி சொன்னார். நான் பத்து லட்சம், பதினைந்து லட்சம் சம்பளம் வாங்குவதாகச் சொல்கிறார்கள்.

அப்படியில்லை. தயாரிப்பாளர்களின் கஷ்டம் தெரிந்தவன் நான். நேற்று கூட ஒரு புதுமுக இயக்குனர் கேட்டார். உடனே அவரது தயாரிப்பாளரிடம் சொல்லி சம்பளத்தை பாதியாகக் குறைத்துக் கொண்டேன் என்றார்.

காரில் சென்ற நடிகைக்கு நடந்த விபரீதம்!!

பிரபல நடிகை வாணி கபூர் தமிழில் ஆஹா கல்யாணம் படத்தில் நடித்தவர். அந்த படத்தில் அவர் நானியுடன் லிப்கிஸ் காட்சியில் நடித்தது பரபரப்பாக பேசப்பட்டது. மேலும் பல ஹிந்தி படங்களில் கவர்ச்சியான வேடங்களில் தற்போது நடித்து வருகிறார் வாணி கபூர்.

இந்நிலையில் நேற்று அவர் காரில் சென்றபோது பைக்கில் வந்த நபர் ஒருவர் இவரை பார்த்துவிட்டு, காரை விடாமல் துரத்தியுள்ளார். கார் டிரைவர் வேகமாக ஓட்டி அந்த நபரிடம் இருந்து தப்பியுள்ளனர்.

ஆனால் மீண்டும் திரும்பு வரும்போது அதே நபர் வாணியிடம் பேச முயற்சித்து காரை பின்தொடர்ந்துள்ளார். இதனால் அதிர்ச்சியான வாணி கபூர் மும்பை போலீசில் புகார்அளித்துள்ளார். அந்த நபர் வீட்டிற்கே வந்து விடுவார் என்கிற பயத்தில் நேராக போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துவிட்டு தான் வீட்டிற்கு கிளம்பி சென்றுள்ளார் அவர்.

டபுல் மீனிங்? அமலா பால் ட்விட்டை தவறாக புரிந்துகொண்டு மிக ஆபாசமாக விமர்சித்த ரசிகர்கள்!!

நடிகை அமலா பால் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ்வாக இருப்பவர். அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் நேற்று அவர் ட்விட்டரில் மஞ்சள் கலர் உடையில் போட்டோ பதிவிட்டிருந்தார். அதில் அவர் “They told me I can be whatever I want to be, today I’m a happy mango,” என குறிப்பிட்டிருந்தார்.

தான் மஞ்சள் கலர் உடை அணிந்திருப்பதை தான் “Mango” என அமலா குறிப்பிட்டார். ஆனால் அவர் மார்பகங்களை தான் குறிப்பிட்டார் என வேறு அர்த்தத்தில் புரிந்துகொண்ட ரசிகர்கள் ஆபாசமாக பதில் அளித்து வருகின்றனர்.

திருமணத்திற்கு பிறகு அந்த வார்த்தையை ஆர்யா சொல்லமாட்டார்.. கலாய்த்த நடிகர்!!

நடிகர் ஆர்யா மற்றும் நடிகை சாயிஷா சமீபத்தில் தான் திருமணம் செய்துகொண்டனர். ஆர்யா எப்போதும் மற்ற பல நடிகர் மற்றும் நடிகைகளிடம் நெருக்கமாக இருப்பவர்.

த்ரிஷாவை ‘குஞ்சுமணி’ என பல முறை ஆர்யா கூறியுள்ள நிலையில், இன்று த்ரிஷாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல அந்த வார்த்தையை பயன்படுத்தவில்லை ஆர்யா.

அதை கலாய்த்து நடிகர் சதிஷ் தற்போது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். திருமணத்திற்கு பிறகு ஆர்யா அந்த வார்த்தையை மட்டும் சொல்லமாட்டார் என அவர் ட்ரோல் செய்துள்ளார்.

மதம் மாறிவிட்டாரா நடிகை கஸ்தூரி? புகைப்படத்தால் வந்த குழப்பம்!!

நடிகை கஸ்தூரி சினிமாவை தாண்டி அரசியல் மற்றும் சமூக பிரச்சனைகள் பற்றியும் தொடர்ந்து பேசி வருகிறார்.

இந்நிலையில் தற்போது அவர் இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படம் பதிவிட்டுள்ளார். முஸ்லீம் பெண்கள் அணியும் உடையில் தான் அவர் உள்ளார்.

தெளிவாக கஸ்தூரி அந்த பதிவில் எதுவும் குறிப்பிடாததால் அதை பார்த்தவர்கள் இவர் மதம் மாறிவிட்டாரோ என குழப்பம் அடைந்துள்ளனர்.

நயன்தாராவிற்கு நிச்சயத்தார்த்தம் உறுதியானது : முழுவிவரம் இதோ!!

நயன்தாரா தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர். இவர் கையில் தற்போது அரை டஜன் படங்கள் உள்ளது.

இதில் சோலோ ஹீரோயினாகவே நிறைய படங்கள் இருக்கின்றது. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் லிவிங்-டு-கெதரில் இருந்து வருவது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் சமீபத்தில் நயன்தாரா குடும்பத்தினர் விக்னேஷ் சிவனை சந்திக்க, இருவருக்கும் இந்த ஆண்டு இறுதியில் நிச்சத்தார்த்தம் நடக்கும் என கூறப்படுகின்றது. மேலும், இதற்கு நயன்தாரா சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் கிசுகிசுக்கப்படுகின்றது.

கணவரை விவாகரத்து செய்கிறாரா பிரபல தொகுப்பாளினி- ரசிகர்கள் ஷாக்!!

மாலிவுட் சினிமாவில் நிறைய பாடல்கள் பாடி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ரிமி டாமி. இவர் 50க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடி அசத்தியுள்ளார், அதில் நிறைய ஹிட் பாடல்களும் உண்டு.

பாடுவதை தாண்டி அதிக நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளினியாக கலக்கி வந்தார். உதாரணத்துக்கு Gaanaveedhi, Dum Dum Dum Pi Pi Pi, Music Live போன்ற நிகழ்ச்சிகளை கூறலாம்.

இவர் 2008ம் ஆண்டு ஏப்ரல் 27ம் தேதி இருவருக்கும் சிம்பிளான முறையில் திருமணம் நடந்தது. தற்போது என்னவென்றால் இருவரும் விவாகரத்து செய்ய முடிவு செய்திருப்பதாக செய்திகள் வருகிறது, ஆனால் அவர்களிடம் இருந்து எந்த ஒரு தகவலும் வரவில்லை.