உடல் எடை குறைத்து படு ஒல்லியாக மாறிய மீரா ஜாஸ்மின் : வைரலாகும் புகைப்படம்!!

சாக்லேட் பாய் மாதவன் நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான ‘ரன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை மீரா ஜாஸ்மின். மீரா ஜாஸ்மின், கேரளாவின் 1982 ஆம் ஆண்டு திருவல்லாவில் பிறந்தவர். இவருடைய முழு பெயர் ஜாஸ்மின் மேரி ஜோசப்.

2001 ஆம் ஆண்டு சூத்ரதாரன் என்ற படத்தில் நடித்தார். அதன் பின்னர் மீரா ஜாஸ்மினுக்கு தொட்டதெல்லாம் பொன்னானது. தமிழில் ரன், புதிய கீதை, ஆஞ்சநேயா, மற்றும் மணிரத்னம் இயக்கிய ஆயுத எழுத்து, மெர்குரிப் பூக்கள், பரட்டை என்ற அழகுசுந்தரம், என பல படங்களில் நடித்தார்.

2008 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபரான மெண்டலின் ராஜேஷ் என்பவரை திருமணம் செய்துகொள்வதாக இருந்தது. ஆனால், கடந்த 2014ஆம் ஆண்டு தனது 32 வயதில் துபாயை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினீயர் அனில் ஜான் டைட்டசை திருமண செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார் மீரா.

திருமணத்திற்கு பின்னர் இவருக்கு ஒரு அழகான ஆண் குழந்தையும் பிறந்தது. திருமணத்திற்கு பின்னர் படு பருமனாக மாறிபோன மீரா ஜாஸ்மின் தற்போது உடல் எடையை குறைத்து படு ஸ்லிம்மாக மாறியுள்ளார்.

ஓட்டு போட சென்ற இடத்தில் அசிங்கமான செயல் : குடும்பத்துடன் சர்ச்சையில் சிக்கிய ஐஸ்வர்யா ராய்!!

நடிகை ஐஸ்வர்யா ஏக் தில் ஹை முஷ்கில் படம் மூலம் மீண்டும் சினிமாவிற்கு வந்துள்ளார். திருமணத்திற்கு பின் மீண்டும் அவர் இதில் படுகவர்ச்சியாக நடித்தது சர்ச்சையை கிளப்பியது.

அடுத்தடுத்து படங்களில் நடித்து வரும் அவர் வட இந்தியாவில் நேற்று நடந்த தேர்தலில் மாமனார் அமிதாப் பச்சன், மாமியார் ஜெயா, மகன் அபிஷேக் பச்சன் ஆகியோருடன் சென்றுள்ளார்.

இதில் அவர்கள் நால் வரும் ஓட்டு போட்டுவிட்டு நடுவிரலை காட்டியது தற்போது சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. இந்த விசயத்தில் பலரும் அவர்களை சமூகவலைதளத்தில் கேள்வி கேட்டு வருகிறார்கள்.

ஆனால், உண்மையாகவே இந்த போஸ் இரண்டு வருடங்களுக்கு முன்பு வந்தது, அதை தற்போது யாரோ இணையத்தில் புதியது போல் வெளியிட்டு சர்ச்சையை உண்டாக்கி வருகின்றனர்.

உங்க அம்மா தான் அது : ரசிகர்களுக்கு பதிலடி தருகிறேன் என்று மோசமாக பேசிய ஓவியா!!

ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் செம்ம பேமஸ் ஆனவர். இவர் இதன் பிறகு பெரிய இடத்திற்கு வருவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஆனால், 90எம் எல் என்ற படத்தில் நடித்து பெரிய விமர்சனங்களை சந்தித்தார், நேற்று தன் பிறந்தநாளுக்காக ரசிகர்களுடன் உரையாடினார்.

அபோது இவரை ரசிகர் ஒருவர் மோசமான வார்த்தையில் திட்ட, அதற்கு ஓவியா, உங்கம்மா தான் அது’ என்று மிக மோசமாக பதிலடி தந்தது பலருக்கும் ஷாக் தான்.

தாலியை கழற்றி வைத்துவிட்டு போட்டோஷூட்? பிக்பாஸ் சுஜா வருணி சர்ச்சைக்கு விளக்கம்!!

பிக்பாஸ் புகழ் நடிகை சுஜா வருணி சென்ற வருடம் நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் சிவாஜி தேவ்வை திருமணம் செய்துகொண்டார். மேலும் சுஜா தற்போது கர்பமாக உள்ளதாக வந்த அறிவிப்பும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. விரைவில் வளைகாப்பும் நடக்கவுள்ளது.

இந்நிலையில் சுஜா வருணி தாலியை கழட்டி வைத்துவிட்டு ஒரு போட்டோஷூட் நடத்தியதாக சர்ச்சை எழுந்தது. சில புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் பரவியது.

ஆனால் அது 7 வருடங்களுக்கு முன்பு எடுத்தது என சுஜா விளக்கம் கொடுத்துள்ளார். “தாலியைக் கழற்றி வைத்துவிட்டு ஃபோட்டோஷூட் நடத்த, நான் அலைபாயுதே ஷாலினியும் கிடையாது” என பதில் கொடுத்துள்ளார் அவர்.

எவ்ளோ அசிங்கம் இது.. செந்தில் கணேஷ்-ராஜலக்ஷ்மி ஜோடியை கிழித்த முன்னணிப் பாடகர்!!

ஒரு பிரபல தொலைக்காட்சி நடத்திய ரியாலிட்டி ஷோவில் பங்கேற்ற பாடகர்கள் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலக்ஷ்மி ஜோடிக்கு தமிழ்நாட்டில் ரசிகர்கள் ஏராளம். அவர்கள் தற்போது சினிமாவிலும் பாட்டு பாட துவங்கியுள்ளனர்.

இந்நிலையில் பிரபல பாடகர் புஷ்பவனம் குப்புசாமி மட்டும் அனிதா குப்புசாமி இருவரும் அளித்துள்ள பேட்டியில் செந்தில்-ராஜலக்ஷ்மி ஜோடியை கடுமையாக தாக்கி பேசியுள்ளனர்.

“பேசுவது எல்லாம் இரட்டை அர்த்தம், ஆபாசம்.. மக்கள் இசை கலைஞன் என ஒருவர் பாடுகிறான். மேடை முழுவதும் ஆபாசம். மனைவியை பக்கத்தில் வைத்துகொன்டே வேறு ஒரு பெண்ணிடம் அசிங்கமாக சைகை செய்கிறான். யூடியூப்பில் பார்த்து நொந்துபோனேன்” என புஷ்பவனம் குப்புசாமி தாக்கி பேசியுள்ளார்.

“இவர்களை பார்க்கும்போது இந்த துறையில் நாமும் இருக்க வேண்டுமா?, பாடுவதை நிறுத்திவிடலாமா என யோசிக்கிறேன்”.
மேலும் டிவி ரியாலிட்டி ஷோகளில் நடப்பது எதுவும் ரியாலிட்டி இல்லை.

யார் வெற்றி பெற வேண்டும் என முதலில் முடிவு செய்துவிட்டு பின்னர் அனைத்து விஷயங்களையும் செய்து அவர்களை வெற்றி பெற வைப்பார்கள் என அவர் கூறியுள்ளார்.

அடக்கம் செய்யப்பட்ட நடிகர் ரித்தீஷின் உடல் : மகள் மீது உயிரையே வைத்திருந்தார் என கதறி அழுத உறவுகள்!!

மாரடைப்பால் மரணம் அடைந்த நடிகர் ரித்தீஷ் உடல் அவரது சொந்த ஊரான மணக்குடியில் அடக்கம் செய்யப்பட்டது. ராமநாதபுரம் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினரும், நடிகருமான ஜே.கே.ரித்தீஷ் கடந்த சில நாட்களாக அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்து வந்தார்.

இந்நிலையில் மூன்று தினங்களுக்கு முன்னர் தனது சொந்த ஊரான ராமநாதபுரத்தில் பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட பின்னர் தனது வீட்டில் இருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

மரணம் அடைந்த ரித்தீஷ் உடல், ராமநாதபுரத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அ.தி.மு.க. மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அதன்பின்னர் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

மரணம் அடைந்த ரித்தீசுக்கு ஜோதீஸ்வரி என்ற மனைவியும், ஹிருத்திக் ரோ‌ஷன், ஹாரிக் ரோ‌ஷன் என்ற மகன்களும், தானவி என்ற 6 மாத பெண் குழந்தையும் உள்ளனர்.

மகள் தானவி மீது ரித்திக் தன்னுடைய உயிரையே வைத்திருந்ததாக கூறி உறவினர்கள் கதறி அழுத காட்சிகள், அங்கிருந்த அனைவரின் மனதையும் உலுக்கும் விதமாக இருந்தது.

குட்டையான உடையில் வந்த ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள் : கூட்டத்தில் சிக்கியதால் ஏற்பட்ட சங்கடம்!!

மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஜான்வி தற்போது சினிமாவில் பிஸியாகிவிட்டார். இளைய மகள் குஷி கபூர் விரைவில் ஹீரோயினாக நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது.

நேற்று குஷி கபூர் ஒரு ஹோட்டலுக்கு சாப்பிட நண்பர்களுடன் சென்றுள்ளார். மிக குட்டையான உடை அணிந்து அவர் வந்துள்ளார். அவர் வெளியில் வந்ததும் வெளியில் கூடியிருந்த கூட்டம் அவரை சூழ்ந்துகொண்டனர்.

செலஃபீ எடுக்கவேண்டும் என பலரும் அவர் முன் போனை நீட்டியுள்ளனர். ஆனால் இதை பார்த்து சங்கடமான அவர் அவர்களிடம் இருந்து தப்பி காரில் ஏறி கிளம்பிவிட்டார்.

ஸ்ரீரெட்டி வாயடைத்தது எப்படி? சீமானை தாக்கிய லாரன்ஸுக்கு பிரபல தயாரிப்பாளர் பதிலடி!!

நடிகர் ராகவா லாரன்ஸ் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மற்றும் அவரது தொண்டர்களுக்கு எச்சரிக்கை விடுத்து ஒரு அறிக்கை வெளியிட்டுருந்தார். அதற்கு தற்போது தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பதில் அளித்துள்ளார்..

“ஸ்ரீரெட்டி சொன்ன குற்றச்சாட்டுக்கு முதல்ல பதில் சொல்லுங்க. அவங்க கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க லாரன்ஸ். அதை விட்டுட்டு இங்கே வந்து ஏன் முட்டணும்? அவங்க சொன்ன குற்றச்சாட்டை வாய்ப்பு கொடுத்து வாயடைச்ச நீங்களெல்லாம் என்ன பேச முடியும்?”

“மற்றபடி உங்கள் படத்திற்கு பப்ளிசிட்டி தேவைப்பட்டால் சொல்லுங்கள்… அண்ணனிடம் சொல்லி ஒரு வீடியோ விளம்பரம் வாங்கித் தருகிறேன்,” என அவர் கூறியுளளார்.

13 வயதிலிருந்து தாயிடம் அனுபவித்த கொடுமை : ரகசியத்தை கொட்டிய பிரபல நடிகை!!

13 வயதில் இருந்து தன்னை தன் தாய் நிம்மதியாக வாழவிடவில்லை என்கிறார் நடிகை சங்கீதா. நடிகை சங்கீதா பாடகர் க்ரிஷை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். அவர் திருமணத்திற்கு பிறகும் நடிப்பை தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் அவர் தனது தாய் பற்றி ட்வீட் செய்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, அன்புள்ள அம்மா, என்னை இந்த உலகிற்கு கொண்டு வந்ததற்கு நன்றி. என் பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டு 13 வயதில் இருந்து வேலை செய்ய வைத்ததற்கு நன்றி. அனைத்து பிளான்க் செக்குகளில் கையெழுத்திட வைத்ததற்கு நன்றி.

வாழ்நாளில் வேலைக்கே செல்லாத உங்களின் குடிகார, போதைப் பொருளுக்கு அடிமையான மகன்களுக்காக என்னை பயன்படுத்திக் கொண்டதற்கு நன்றி. உங்களின் முடிவுகளை ஏற்காததால் எங்கள் வீட்டிலேயே எங்களை டார்கெட் செய்வதற்கு நன்றி.

நான் போராடும் வரை எனக்கு திருமணம் செய்து வைக்காததற்கு நன்றி. அடிக்கடி என் கணவரை தொந்தரவு செய்து என் குடும்ப நிம்மதியை கெடுப்பதற்கு நன்றி. ஒரு தாய் எப்படி இருக்கக் கூடாது என்பதை எனக்கு கற்றுக் கொடுத்ததற்கு நன்றி. அனைத்து பொய் புகார்களுக்காக நன்றி. ஒரு நாள் நீங்கள் உங்கள் ஈகோவை விட்டுவிட்டு என்னை பார்த்து பெருமைப்படுவீர்கள் என்று சங்கீதா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

சங்கீதாவின் ட்வீட்டை பார்த்த கணவர் க்ரிஷ், நீ பட்ட கஷ்டம் எனக்கு தெரியும், உன் குடும்பத்திற்காக நீ செய்தது அனைத்தும் தெரியும், உனக்கு நான் இருக்கிறேன். அள்ளிக்கொடுத்து வாழ்பவன் நெஞ்சம் ஆனந்த பூந்தோப்பு, வாழ்வில் நல்லவர் என்றும் கெடுவதில்லை இது நான்குமறை தீர்ப்பு.. என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் ரித்தீஷின் மரணம்…. ஒரு குழந்தைக்கு அப்பா முகமே தெரியாமல் போன சோகம்!!

இறந்துபோன நடிகர் ரித்தீஷ்ஷின் மனைவி லோகேஸ்வரி குறித்து தயாரிப்பாளர் ஏ.எல்.சீனிவாசனின் மருமகள் ஜெயந்தி கண்ணப்பன் கண்கலங்கியுள்ளார்.

ஜெயந்தி கண்ணப்பன் கூறியதாவது, ரித்தீஷை காதலிச்சு திருமணம் செய்துகொண்டாள். எந்த பொண்ணுக்கும் வரக்கூடாத துன்பம் இது.

கணவரை இழந்து மூன்றுகுழந்தைகளுடன் இருக்கும் அவளே சின்னப் பொண்ணுதான். அதில் ஒரு குழந்தைக்கு அப்பாவுடைய முகமே தெரியாமப்போச்சு, இனி அவள் என்ன செய்யப்போகிறான் என தெரியலை என்று கண்கலங்கியுள்ளார்.

கலைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவரை பார்ப்பதற்காக சென்றிருந்தேன். அப்போது குழந்தைக்கு தடுப்பூசி போட வந்த அவளையும் சந்தித்தேன். நான் குழந்தைக்கு பணம் கொடுத்த போது, பணம் வேண்டாம் ஆசிர்வாம் போதும் என்று சொன்னாள்.

அவளின் கணவர் ரித்தீஷ் இறந்த செய்தி கேட்டு மிகவும் வேதனையடைந்தேன் என கூறியுள்ளார்.