நடிகை மாளவிகா மோகனன் தமிழில் பேட்ட, மாஸ்டர் போன்ற படங்களில் நடித்து அதன் மூலம் பாப்புலர் ஆனவர்.
கடைசியாக இவர் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் படத்தில் ஹீரோயினாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
தமிழ் மொழி மட்டுமின்றி ஹிந்தி உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்து வலம் வரும் மாளவிகா.
தற்போது ஒரு சில படங்களில் நடித்து வரும் மாளவிகா சமீபத்தில் கேரள சேலையில் மயக்கும் போட்டோஷூட் நடித்தி இருந்தார். தற்போது ட்ரெடிஷனல் லுக்கில் பட்டுப் புடவையில் எடுத்த புகைப்படங்களால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.
தமிழ் படங்களில் நடித்து வந்த பூனம் பாஜ்வா, ஒருகட்டத்தில் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்ததும், ஹீரோயின் இல்லாமல் துணைக் கதாபாத்திரங்களில் நடிக்க இவருக்கு அழைப்பு வந்தது. நீண்ட இடைவேளைக்கு பிறகு சுந்தர் சி யுடன் இணைந்து முத்தின கத்திரி படத்தில் சுந்தர் சிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.இதுமட்டுமல்ல சுந்தர். சி இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை 2 படத்திலும் நடித்திருந்தார். இவர் தொடர்ந்து பல மலையாள படங்களில் நடித்து வருகிறார்.
இவர் 1985 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார்.இவர் கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்தார்.இவர் 2005 ஆம் ஆண்டு மிஸ் புனேவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல் முதலாக தெலுங்கில் மொதட்டி சினிமா என்ற தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
பொதுவாகவே வட இந்திய நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் ஆதரவு அதிகம். அப்படி ஒரு வட இந்திய முகமாகதான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் பூனம் பாஜ்வா. நடிகர் பரத் நடிப்பில் வெளியான சேவல் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை பூனம் பாஜ்வா. அந்த படத்துக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து தொடர் வாய்ப்புகள் அவருக்குக் கிடைத்தன.
பின்னர் தங்கிககி என்ற படத்தின் மூலம் கன்னட சினிமாவிலும் அறிமுகமானார். இவருக்கு பெரிய அளவில் ஹீரோயினாக வாய்ப்பு கிடைக்கவில்லை இதனால் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை தேர்வு செய்யாமல், சும்மா வந்து போய், கதாநாயகனோடு டூயட் பாடும் ஹீரோயினாகவே இவரும் பல படங்களில் தோன்றினார்.
வாய்ப்புகள் குறைந்தாலும் மனம் தளராத இவர் தொடந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது க்யூட் மற்றும் ஹா ட்டான புகைப்படங்களை வெளியிட்டு அப்படியாவது வாய்ப்புகள் வருமா எனக் காத்திருக்கிறார். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் தொடர்ந்து கவனம் பெற்று வருகின்றன. அப்படி இப்போது தலைகீழாக படுத்தவாக்கில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இளைஞர்களைக் கவர்ந்துள்ளது.
கிரிக்கெட் வீரர் தோனியின் பயோபிக்கில் தோனியின் முன்னாள் காதலியாக நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் நடிகை திஷா பதானி.
அதை தொடர்ந்து, ஜாக்கி சானின் குங்ஃபூ யோகா படத்தில் நடித்து சர்வதேச நடிகையாகவும் மாறினார். இந்திய நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அளவுக்கு இன்ஸ்டாகிராமில் 61.5 மில்லியன் ஃபாலோவர்களை கொண்டுள்ளார்.
தமிழில், இவர் சூர்யாவுடன் இணைந்து கங்குவா படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தார். ஆனால் இவரின் நடிப்பு அதிக ட்ரோல்களை சந்தித்தது.
தற்போது, திஷா பதானி மினுமினுக்கும் உடையில் அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
சின்னத்திரை மூலம் பிரபலமாகி தற்போது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் கலைஞர்களில் ஒருவர் நடிகை கேப்ரியல்லா செல்லஸ். விஜய் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான கலக்கப்போவது யாரு சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமான கேப்ரியல்லா, அதன்பின் மேடை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தார்.
இதனை தொடர்ந்து ஐரா, N4, செத்தும் ஆயிரம் பொன், கருப்புதுரை போன்ற படங்களில் நடித்தும் வந்தார். அதன்பின் சன் டிவியில் 2021ல் துவங்கப்பட்ட சுந்தரி சீரியலில் முக்கிய ரோலில் நடிக்க ஆரம்பித்தார். கிட்டத்தட்ட 1144 எபிசோட்டுடன் சுந்தரி சீரியல் கடந்த டிசம்பர் 1 ஆம் தேதியுடன் நிறைவுற்றது.
இந்த சீரியலில் நடிக்கும் போது சமீபகாலமாக சுந்தர் தன் கணவர் ஆகாஷை விவாகரத்து செய்கிறார் என்ற தகவல் வெளியாகி வந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கணவருடன் இணைந்து புகைப்படம் எடுத்தும் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து முற்றுப்புள்ளி வைத்தார் கேப்ரியல்லா.
தற்போது சீரியலில் இருந்து சற்று விலகி இருப்பதாக கூறி சொந்த ஊருக்கு சென்று சில வேலைகளை செய்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் கேப்ரியல்லா கர்பகால போட்டோஷூட் எடுத்தும் வருகிறார். தற்போது வயல்வெளியில் சேலையில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட சம்யுக்தா 2016 ஆம் ஆண்டு மலையாளத் திரைப்படமான பாப்கார்ன் மூலம் தனது திரையுலகில் அறிமுகமானார், அங்கு அவர் ஷைன் டாம் சாக்கோவின் காதலியான அஞ்சனாவாக நடித்தார். சம்யுக்தா 1995 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி, இந்தியாவின் கேரளா, பாலக்காட்டில் பிறந்தார்.அவர் தனது பள்ளிப்படிப்பை தத்தமங்கலம் சின்மயா வித்யாலயாவில் பயின்றார் மேலும் அவர் பொருளாதாரத்தில் பட்டதாரி ஆவார்.
வாத்தி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகியுள்ள் சம்யுக்தா, தன்னுடைய பெயரை சமீபத்தில் சம்யுக்தா மேனன் என்பதில் இருந்து சம்யுக்தா என மாற்றிக் கொண்டார். தனக்கு பெயரின் பின்னால் ஜாதி பெயர் வேண்டாம் என்றும் அவர் கூறியது முற்போக்கு சிந்தனையாளர்களையும அவருக்கு ரசிகர்களாக்கியுள்ளது.
தனது தாய்மொழியான மலையாள மொழிப் படங்களுக்குப் பிறகு அவர் தமிழில் ஆக்ஷன் திரில்லர் படமான களரியில் தேன்மொழியாக தோன்றினார். அறிமுக இயக்குனர் பிரசோப் விஜயன் திரைக்கதை எழுதி இயக்கிய 2018 ஆம் ஆண்டு வெளியான மலையாள மொழிப் படமான பழிவாங்கும் திரில்லர் படமான லில்லியில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அவர் நடித்தார்.
தனது தாய்மொழியான மலையாள மொழிப் படங்களுக்குப் பிறகு அவர் தமிழில் ஆக்ஷன் திரில்லர் படமான களரியில் தேன்மொழியாக தோன்றினார். அறிமுக இயக்குனர் பிரசோப் விஜயன் திரைக்கதை எழுதி இயக்கிய 2018 ஆம் ஆண்டு வெளியான மலையாள மொழிப் படமான பழிவாங்கும் திரில்லர் படமான லில்லியில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அவர் நடித்தார்.
சமீபத்தில் வாத்தி படத்தின் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு பட ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானார். இந்த படத்தின் பாடல்கள் ஹிட்டானதால், இவருக்கும் நல்ல பெயர் கிடைத்து அடுத்து அடுத்து வாய்ப்புகள் குவியும் என சொல்லப்படுகிறது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள வா வாத்தி பாடல் ஹிட்டானதை அடுத்து இளைஞர்களின் லேட்டஸ்ட் கிரஷ் ஆகியுள்ளார் சம்யுக்தா. இந்நிலையில் இப்போது ட்ரான்ஸ்பேரண்ட்டான கண்ணாடி ஆடையணிந்து வெளியிட்ட போட்டோஷூட் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
நடிகை ராஷ்மிகா தற்போது pan இந்தியா அளவுக்கு பாப்புலர் ஹீரோயின். அனிமல் படம் பெரிய வசூலை குவித்த நிலையில் அடுத்து அவர் நடித்த புஷ்பா 2 படமும் 1000 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்து இருக்கிறது.
ஸ்ரீவள்ளியாக ராஷ்மிகா நடித்திருப்பதற்கும் பாராட்டுகள் கிடைத்து வருகிறது.
இந்நிலையில் தற்போது ராஷ்மிகா பிரபல இதழ் ஒன்றின் அட்டை படத்திற்காக மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்திருக்கிறார்.
சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஹன்சிகா. ஹ்ருத்திக் ரோஷன் நடிப்பில் உருவான கொய் மில் கயா படத்தில் குழந்தையாக நடித்திருப்பார். அதன் பின்னர் பல படங்களில் நடித்த அவருக்கு வளர்ந்ததும் பாலிவுட் வாய்ப்பு வழங்கவில்லை. பதிலாக தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் சிம்புவுடன் காதல் என பல்வேறு கிசு கிசு போய் கொண்டிருந்தது. அதற்கு முன்னர் பிரபுதேவா உடனும் இணைத்து அவர் கிசுகிசுக்கப்பட்டார். தொழிலதிபரும் ஹன்சிகாவின் நீண்ட நாள் நண்பருமான சோஹைல் கதூரி என்பவரை டிசம்பர் 4 ஆம் தேதி ஹன்சிகா திருமணம் செய்துகொண்டார். சோஹைல் கதூரிக்கு இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.
2007 ஆம் ஆண்டு வெளியான “தேசமுதுரு” என்ற தெலுங்கு திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியான “மாப்பிள்ளை” திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.தமிழில் மட்டும் இல்லாமால் தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து முக்கிய முண்ணனி நடிகையாக வளம் வந்தார். குஷ்பு போல பூசிய உடல்வாகோடு இருந்ததால் சின்ன குஷ்பு எனவும் ரசிகர்களால் அழைக்கப்பட்டார்.
ஆனால் அதிகளவுக்கு அவரை நோக்கி வாய்ப்புகள் வந்த போது, திறமையை வெளிப்படுத்தும் வேடங்களில் நடிக்க முக்கியத்துவம் கொடுக்கவில்லை. முன்னணி ஹீரோக்களோடு ஆடிப்பாடும் சாதாரண வேடங்களையே அதிகளவில் நடித்தார். பெரும்பாலான படங்களில் பாடல்களிலும் காதல் காட்சிகளிலும் மட்டுமே வந்துபோகும் நடிகையாகவே இருந்தார். இப்போது மீண்டும் சினிமாவில் நடித்து வரும் ஹன்சிகா அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டு வைரல் ஆகி வருகிறார்.
தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த ஆடுகளம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் டாப்சி. அதன்பின் வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா 2 ஆகிய படங்களில் நடித்து வந்தார்.
பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருக்கும் இவர் சமீபத்தில் Dunki மற்றும் Judwaa 2 ஆகிய படங்களில் நடித்திருந்தார். இவர் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக சினிமா வட்டாரத்தில் பேசும் பொருளாக உலா வந்தது.
இந்நிலையில், பேட்டி ஒன்றில் டாப்சி அவர் திருமணம் குறித்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், “எனக்கு கடந்த வருடமே திருமணம் நடைபெற்று முடிந்தது. ஆனால், அது குறித்து எந்த தகவலையும் நான் வெளியிடவில்லை.
அதை மறைத்து விட்டேன் அதற்கு முக்கிய காரணம் நானும் என் கணவரும் எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை தனித்து வைத்திருக்க விரும்புகிறோம். என் கணவரை எனக்கு 2013 – ம் ஆண்டு முதலே தெரியும், அவருக்கு என்னை குறித்து அனைத்து விஷயங்களும் நன்றாக தெரியும்” என்று தெரிவித்துள்ளார்.
மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த எஸ்தர் அனில், பாபநாசம் படத்தில் கமல்ஹாசனின் இரண்டாவது மகளாக எஸ்தர் அனில் நடித்திருப்பார்.
இதனை அடுத்து எஸ்தர் அனில், சில முன்னணி ஹீரோக்கள் திரைப்படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளார். மின்மினி என்ற படத்திலும் நடித்துள்ள எஸ்தர் அனில், இணையத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இப்போது வளர்ந்து பெரிய பெண்ணாக ஆகியுள்ள எஸ்தர் அனில், தாறுமாறான கிளாமர் புகைப்படங்களை தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
தற்போது வயநாட்டு ரெசாட்டில் சென்று வெகேஷனை என்ஜாய் பண்ணும் புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.