அபர்ணதி..
பிரபல தொலைக்காட்சி சேனலில் நடிகர் ஆர்யாவிற்காக பெண் தேடும் நிகழ்ச்சியாக ஒளிப்பரப்பரப்பு செய்யப்பட்ட நிகழ்ச்சி தான் எங்க வீட்டு மாப்பிள்ளை. அதற்காக பல பெண்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர்.
அதில் முக்கிய இடத்தை பிடித்தவர் அபர்ணதி. நிகழ்ச்சியில் கடைசி வரைக்கும் எந்த பெண்ணையும் தேர்ந்தெடுக்காத ஆர்யா மீது கோபத்தில் அபர்ணதி இருந்திருக்கிறார். இதனையடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வந்த அபர்ணதி,
ஆர்யாவின் நியாபகமாக அவரது பெயரை நீக்காமல் இருந்து வருகிறார். போட்டோஷூட் பக்கம் சென்று அனைவரது கவனத்தையும் ஈர்த்த அபர்ணதி ஜெயில் படத்தில் ஜிவி பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக நடித்தார். பின் தேன், உடன்பிறப்பு, டிமோன், இருகப்பற்று, சாமானியன், மாய புத்தகம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அபர்ணதி, கிளாமர் லுக்கிற்கு மாறி ரசிகர்கள் வாய்ப்பிளக்க வைக்கும் போட்டோஷூட்களை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் உச்சக்கட்ட கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.